சீனாவில் உள்ள ஒரு உள்புற அலங்கார பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு கொடூர தண்டனைகளை விதித்து கொடுமைப்படுத்தியது தற்போது வெளியே வந்துள்ளது. சீனாவின் குயீஸோஹு மாகாணத்தில் உள்ள இந்த தனியார் நிறுவனம், குறிப்பிட்ட நேரத்திற்குள் பணிகளை செய்து முடிக்காத ஊழியர்களுக்கு கொடுமையான தண்டனைகளை வழங்கியுள்ளது. அதாவது, சிறுநீரை குடிக்க வைப்பபது, உயிருடன் கரப்பான்பூச்சியை உண்ண வைப்பது, கழிவறை தண்ணீரை குடிக்க வைப்பது போன்ற தண்டனைகளை வழங்கியுள்ளது. இந்த தண்டனைகள் அனைத்தும் சக ஊழியர்களின் கண் முன் நிறைவேற்றப்பட்டுள்ளனன். அபோதுதான் அடுத்தவருக்கு இனி சரியாக வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் வருமாம். இந்த விவகாரம், பணியில் இருந்து விலகிய சிலர் வீடியோவாக வெளியிட்ட பின்னரே வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டதால், நிறுவனத்தின் 3 மேலாளர்கள் கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply