Categories: Uncategorized

கலிபோர்னியா மதுபான விடுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலி

தவுசண்ட் ஓக்ஸ்:

அமெரிக்காவில் மக்கள் கூடும் இடங்களில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது. இதுபோன்ற தாக்குதல்களுக்கு மாணவர்கள் உள்பட ஏராளமானோர் பலியாகி உள்ளனர். துப்பாக்கி கலாச்சாரத்திற்கு முடிவு கட்ட வலியுறுத்தி தொடர் போராட்டங்களும் நடைபெற்றன. இதனால் மாணவர்கள் துப்பாக்கி வாங்குவதற்கான வயது வரம்பை உயர்த்தி புளோரிடாவில் சட்டம் இயற்றப்பட்டது.

இந்நிலையில், தெற்கு கலிபோர்னியாவில் உள்ள ஒரு மதுபான விடுதியில் புகுந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தவுசண்ட் ஓக்ஸ் நகரில் உள்ள பார்டர்லைன் பாரில் உள்ளூர் நேரப்படி நேற்று இரவு இந்த தாக்குதல் நடந்துள்ளது.
பாருக்குள் நுழைந்த நபர் அங்கிருந்தவர்கள் மீது சுமார் 30 ரவுண்டுகள் சுட்டுள்ளான். இதில் பலர் படுகாயம் அடைந்திருப்பதாக முதல் கட்ட தகவல் வெளியானது.

மதுபான விடுதியில் துப்பாக்கி சூடு பற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று பாரை சுற்றி வளைத்தனர். அங்கு துப்பாக்கியால் சுட்ட மர்ம நபரை சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலில் துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர் உள்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share

Recent Posts

7-ம் கட்ட மக்களவைத் தேர்தல்; 1 மணிநிலவரம்: 38% வாக்குகள் பதிவு

7-ம் கட்டத் தேர்தல் நடைபெறும் 59 தொகுதிகளிலும் மதியம் 1 மணி நிலவரப்படி 39.85 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19…

3 hours ago

7-ம் கட்ட மக்களவைத் தேர்தல் : பிற்பகல் 1 மணி வரையிலான வாக்குப்பதிவு நிலவரம்

8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பகல் ஒரு மணி நிலவரப்படி மாநிலவாரியாக பதிவான வாக்கு சதவீதம் தொடர்பான தகவல் தற்போது…

3 hours ago

தேர்தல சவ்வா இழுக்கறத தவிர்க்கலாம்: நிதிஷ் குமார்!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இன்று கடைசிக் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கிய மக்களவை தேர்தல், 6 கட்டங்களை…

3 hours ago

கேதாரத்தைத் தொடர்ந்து பத்ரிநாத் கோயிலில் மோடி வழிபாடு!

உத்தரகாண்ட் மாநிலம், கேதார்நாத்தை தொடர்ந்து பத்ரிநாத் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு மேகொண்டார்.நாடு முழுவதும் இன்று மக்களவைக்கான இறுதிக் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. நேற்று…

3 hours ago

கத்திமுனையில் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை; டிவி நடிகர் கைது..!

2 இளம் பெண்களை கத்திமுனையில் பலாத்காரம் செய்த டிவி நடிகர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனா்.உலகில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.…

3 hours ago

Exit Poll Results 2019: எக்ஸிட் போல் முடிவுகள் எங்கு? எப்போது?

மக்களவைத் தேர்தல் எக்ஸிட் போல் முடிவுகளை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழில் லைவ்வாக காணலாம். முன்னணி தொலைக்காட்சிகள் அனைத்தும் இதையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருக்கின்றன.2019-ம் ஆண்டுக்கான மக்களவைத்…

3 hours ago