Categories: Uncategorized

விலை! மடக்கக்கூடிய மிடுக்குப்பேசியான கேலக்ஸி எப், இன்று இரவு 11.30 மணிக்கு சான்பிரான்சிஸ்கோவில் சாம்சங் நிறுவனம் அறிமுகம்

22,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சாம்சங் நிறுவனத்தின் மடக்கக்கூடிய மிடுக்குப்பேசியான கேலக்ஸி எப் இன்று இரவு 11.30 மணிக்கு சான்பிரான்சிஸ்கோவில் இருந்து அறிமுகம் செய்யப்பட உள்ளது. சாம்சங் நிறுவனத்தின் அடுத்த அதிரடி மாதிரி செல்பேசியான கேலக்ஸி எப், இன்று சான்பிரான்சிஸ்கோநகரில் சாம்சங் நிறுவன மாநாட்டில் வெளியாக உள்ளது. இந்த நிகழ்வானது சாம்சங் நிறுவனத்தின் அதிர்காரபூர்வ வலையொளியில் நேரடி நிகழ்ச்சியா ஒளிபரப்பாக உள்ளது. இது மடக்கப்பட்ட நிலையில் 4.58 அங்குல மிடுக்குப்பேசியாகவும், திறந்த நிலையில் 7.3 கையடக்க கணினி போன்றும் இயங்கும். இதனால் புதிய மடக்கக்கூடிய சாதனத்தை மிடுக்குப்பேசி அல்லது கையடக்கக் கணினி என இருவிதங்களில் பயன்படுத்த முடியும்.
இந்த சாதனத்தின் உற்பத்தி தொடங்கி விட்டதாகக் கூறப்படுகிறது . முதற்கட்டமாக ஆண்டிற்கு ஐந்து முதல் பத்து லட்சம் அலகுகளை உற்பத்தி செய்ய சாம்சங் திட்டமிட்டுள்ளது. இரண்டு செறிவட்டைகள் போடும் வசதி, மற்றும் 512 ஜிபி சாதனச் சேமிப்பகம் கொண்டது. இதன் விலை தோராயமாக ரூ. 1,09,432 ஆக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,965.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.

Share

Recent Posts

ஜப்பானில் மக்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்ததில் 2 வயது குழந்தையுடன் இளம் பெண் பலி

டோக்கியோ :ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள இகேபுகுரோ மாவட்டத்தில் சுரங்கப்பாதை ரெயில் நிலையம் ஒன்று உள்ளது. இந்த ரெயில் நிலையம் அமைந்துள்ள சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும்.இந்த…

9 hours ago

இந்தியாவில் மின் உற்பத்திக்காக 12 புதிய அணுஉலைகள் நிறுவ திட்டம்- வெளியான தகவல்

மாஸ்கோ:ரஷியாவில் உள்ள கோச்சி என்ற நகரில் அண்மையில் 11-வது சர்வதேச அணுசக்தித்துறை கண்காட்சி நடைபெற்றது. 'ரொசாட்டம்' என்ற அமைப்பின் ஆதரவுடன் நடந்த இந்த கண்காட்சியில் 74 நாடுகளை…

9 hours ago

அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இந்தியர்கள் 2 பேர் கைது

நியூயார்க்:அமெரிக்காவிற்குள் ஆட்கடத்தல் கும்பல் மூலம் சட்டவிரோதமாக ஊடுருவ முயன்று, பாலைவனப் பகுதியில் வழிதெரியாமல் சிக்கித் தவிக்கும் அகதிகளை மீட்பதற்காக மெக்சிகோ எல்லைப்பகுதியில் சூரிய மின்சக்தி மூலம் இயங்கும்…

9 hours ago

12 குழந்தைகளை வீட்டில் அடைத்து கொடுமைபடுத்திய தம்பதிக்கு ஆயுள்தண்டனை

கலிபோர்னியா:அமெரிக்கவின் கலிபோர்னியாவை சேர்ந்தவர் டேவிட் ஆலன் டர்பின் (வயது57). இவரது மனைவி லூயிஸ் அன்னா டர்பின் (50). இவர்களுக்கு 12 குழந்தைகள் உள்ளனர். குழந்தைகள் பிறந்ததில் இருந்து…

9 hours ago

எகிப்து அதிபரின் பதவிக்காலம் ஆறாண்டுகளாக நீட்டிப்பு

கெய்ரோ:எகிப்து நாட்டின் அதிபராக அப்டெல் பட்டா சிசி பதவி வகித்து வருகிறார். தற்போதைய நிலவரப்படி அதிபரின் பதவிக்காலம் நான்காண்டுகளாக உள்ள நிலையில், மேலும் இரண்டாண்டுகள் அதிகரித்து அதிபரின்…

9 hours ago

கனடாவில் பனிச்சரிவில் சிக்கி வீரர்கள் 3 பேர் பலி

ஒட்டாவா:கனடாவின் அல்பெர்டா மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணங்களுக்கு இடையே ஹவ்ஸ் பீக் என்கிற மலை உள்ளது. இது அந்நாட்டின் மிக உயரமான மலைகளில் ஒன்றாகும். இந்த நிலையில்,…

9 hours ago