Categories: Uncategorized

மதுபானக்கூட ஊழியர் தாக்கப்பட்ட விவகாரம்: காவல் உதவி ஆய்வாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் மதுக்கூட ஊழியர் தாக்கப்பட்ட விவகாரத்தில் பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்து மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மனித உரிமை ஆணையத்தில் ராமநாதபுரம் மாவட்டம், கமுதியைச் சேர்ந்த தனியார் மதுபானக் கூடத்தின் ஊழியர் சி.முனியசாமி என்பவர் தாக்கல் செய்யப்பட்ட மனு விவரம்: கமுதியில் உள்ள டாஸ்மாக் கடையுடன் இணைக்கப்பட்ட தனியார் மதுக் கூடத்தில் விற்பனையாளராகப் பணியாற்றி வந்தேன். கமுதி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய ஆர்.திலகவதி இரண்டு காவலர்களுடன் கடந்த 2009-ஆம் ஆண்டு ஜூலை 23-ஆம் தேதி மதுபானக் கூடத்துக்கு வந்தார்.
அப்போது, தான் பணியில் சேர்ந்து ஒரு மாதமாகியும், மதுக்கூடத்தின் உரிமையாளர் தன்னை வந்து பார்க்கவில்லை என்று கூறியதுடன், மதுக்கூடத்தின் உரிமத்தைக் காண்பிக்குமாறு என்னிடம் கூறினார். அதுகுறித்து எனக்குத் தெரியாது என்று நான் கூறவே, என்னை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தாக்கினார். இதைத் தொடர்ந்து, மதுக் கூடத்தின் உரிமையாளர் முருகேசன் வந்தவுடன் என்னை உதவி ஆய்வாளர் திலகவதி விடுவித்தார். அவர், தாக்கியதில் எனக்கு கேட்கும் திறன் பாதிக்கப்பட்டது. ஆகவே, காவல் உதவி ஆய்வாளர் திலகவதி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம்: இந்த மனு குறித்து சென்னை மனித உரிமை ஆணைய நீதிபதி டி.ஜெயச்சந்திரன் விசாரணை மேற்கொண்டார். அதில், காவல் உதவி ஆய்வாளர் திலகவதி விதிகளை மீறியதுடன், முனியசாமியைத் தாக்கியதும் தெரியவந்துள்ளது. ஆகவே, முனியசாமிக்கு இழப்பீடாக தமிழக அரசு ரூ. 50 ஆயிரம் வழங்க வேண்டும். அந்தத் தொகையை உதவி ஆய்வாளர் திலகவதியின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்ய வேண்டும் என்று நீதிபதி டி.ஜெயச்சந்திரன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

Share
Tags: dinamani

Recent Posts

ஹிப்ஹாப் ஆதியின் நட்பே துணை படத்தின் ரிலீஸ் தேதி வெளியிட்ட படக்குழு

பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் `நட்பே துணை'. ஹாக்கி விளையாட்டு மற்றும் நட்பை மையப்படுத்திய இந்த படத்தில் ஆதி ஜோடியாக…

3 hours ago

படப்பிடிப்பில் இயக்குனருடன் பிரபல நடிகை மோதல்

தமிழில் பாயும் புலி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம், சத்ரியன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா தத்தா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார்.தற்போது…

3 hours ago

காஷ்மீரில் அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி

ஜம்மு:ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த பிப்ரவரி மாதம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவ படையினர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு சென்று தீவிரவாத முகாம்கள்…

3 hours ago

கன்னியாகுமரி தொகுதியில் கோடீஸ்வர வேட்பாளர்களுக்கு இடையே போட்டியா?

கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ், பாஜக மற்றும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களின் சொத்து பட்டியல் அடிப்படையில் பார்த்தால் அங்கு கோடீஸ்வர வேட்பாளர்களுக்கு இடையிலான போட்டி போல் காட்சியளிக்கிறது.17-ஆவது…

3 hours ago

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும்; அமைச்சர் அருண் ஜெட்லி உறுதி!

2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் மாற்றத்தை கொண்டுவருபவர் மோடி தான் எனவும், வரும் தேர்தலில் பாஜக வெற்றிப் பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என மத்திய நிதி…

3 hours ago

Exclusive Interview: மோடி அலை குறித்து மே 23 அன்று தெரியும் -அருண் ஜேட்லி

மத்திய அமைச்சர் நிதி மந்திரி அருண் ஜெட்லியிடம் ஜி நியூஸ் பத்திரிகை தலைமை ஆசிரியர் சுதிர் சௌத்ரி நேர்காணலை மேற்க்கொண்டார். அப்பொழுது அவர் வரும் மக்களவை தேர்தலைக்…

3 hours ago