Categories: Uncategorized

ராஜீவ் காந்தியை கூலிப்படை வைத்து கொன்றனர் – அதிர்ச்சி கிளப்பும் சுவாமி

Last Modified செவ்வாய், 13 மார்ச் 2018 (14:29 IST) ராஜீவ் கொலையாளிகளை ராகுல் மன்னிப்பதில் உள்குத்து இருக்கிறது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கருத்து தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேர் கடந்த 25 வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எனவே, அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அந்நிலையில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ராஜீவ் கொலையாளிகளை தாமும் தன்னுடைய சகோதரியும் முழுமையாக மன்னித்துவிட்டதாகவும், பிரபாகரனுக்காகவும் அவருடைய குழந்தைகளுக்காகவும் தான் வருந்தியதாகவும் தெரிவித்தார்.
ராகுல்காந்தியின் இந்த திடீர் மாற்றம் அரசியல் கட்சி தலைவர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. மேலும் அவரை இதுவரை விமர்சனம் செய்தவர்கள் கூட இந்த கருத்துக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்த சுப்பிரமணிய சுவாமி “அவர்கள் கொலை செய்தது ராஜீவ் காந்தியை அல்ல. நாட்டின் பிரதமரை. எனவே, அவர்களை மன்னிக்க முடியாது. இலங்கை அரசு கேட்டுக்கொண்டதால் அவர்களுக்கு உதவி செய்ய இந்திய ராணுவம் சென்றது. எனவே, அதை குற்றமாக கருத முடியாது. கூலிப்படை வைத்து ராஜீவ் காந்தியை கொன்றுள்ளனர். எனவே, ராகுல் குடும்பம் அவர்களை மன்னிக்கக் கூடாது. இந்த விவகாரத்தில் விடுதலைப் புலிகளுடன் ஏதோ ‘புரிதல்’ உள்ளதாக தோன்றுகிறது. எனவே, இதுபற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும். நளினியின் மகள் லண்டனில் படிக்கும் செலவை சோனியா காந்தி குடும்பமே செய்து வருகிறது. அவர்கள் மீது ஏன் இவ்வளவு கரிசனம்? இதில் ஏதோ ஒரு தவறு நடப்பதாக நான் சந்தேகப்படுகிறேன்” என அவர் பேசினார்.

Share

Recent Posts

பேஸ்புக், டுவிட்டருக்கு போட்டியாக தமிழரின் சமூக வலைத்தளம்

இணையத்தில் சமூக வலைத்தளம் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஃபேஸ்புக், ட்விட்டர் தான். இவை தவிர பல்வேறு இதர சேவைகள் இருந்தாலும் இந்த சேவைகள் பெரும்பாலும் வெளிநாட்டு…

30 mins ago

உஷார்.! உங்கள் பேஸ்புக் புகைப்படங்களும் கூட லீக் ஆகி இருக்கலாம்.!

பேஸ்புக் நிறுவனத்திற்கு 2018 ஆம் ஆண்டு மிகவும் மோசமான ஆண்டாகவே இருந்திருந்தது. வருடத்தின் இறுதியை நெருங்கிவிட்ட நிலையில் தற்பொழுது இன்னொரு பெரிய பிரச்சனையில் பேஸ்புக் நிறுவனம் சிக்கியுள்ளது.6.8…

30 mins ago

டிஜிட்டலில் தெறிக்க விடும் பள்ளி கல்விதுறை.! வியக்கும் பிற மாநிலங்கள்.!

தமிழக பள்ளி கல்விதுறை பல்வேறு மாற்றங்களை கண்டு வருகின்றது. மேலும், டிஜிட்டல் யுகத்தில் தற்போது வேகமாக சென்று கொண்டிருகின்றது. இதனால் மற்ற மாநிலங்களை காட்டிலும் பல்வேறு நடவடிக்கைகள்…

30 mins ago

இணையத்தில் லீக் ஆன பேஸ்புக் புகைப்படங்கள் – பயனாளர்கள் அதிர்ச்சி

பேஸ்புக்கில் இருந்து 6.8 மில்லியனுக்கும் அதிகமான புகைப்பட்டங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.உலகம் முழுவதும் சுமார் 200 கோடிக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளம்…

30 mins ago

ரூ.6,100க்கு செம்ம ஸ்டைலான ஸ்மார்ட்போன்… சியோமிக்கு போட்டியாக களம் இறங்கும் மொபிஸ்டார்

Mobiistar C1 Shine : வியட்நாம் நாட்டினைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான மொபிஸ்டார் (Mobiistar C1 Shine) தற்போது புதிய போன் ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது.Mobiistar…

30 mins ago

வானிலிருந்து வந்து 244000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..

இன்று வரை உலகத்தில் பெரும் மர்மம் நிறைந்த பகுதியாகவே மெசபடோமியா இருக்கின்றது. அங்கு ஏராளமான வினோதங்களும் நிறைந்துள்ளதாவே இருக்கின்றது. இன்று வரை பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் முகாமிட்டு வருகின்றனர்.அங்கு…

30 mins ago