Categories: Uncategorized

முடியாது என்ற வார்த்தையை இளைஞர்கள் தவிர்க்க வேண்டும்: முன்னாள் நீதிபதி பேச்சு

இளைஞர்கள் முடியாது என்கிற வார்த்தையை தவிர்க்கவேணடும் என ஜார்க்கண்ட் மாநில முன்னாள் தலைமை நீதிபதி கற்பகவிநாயகம் பேசினார். காரைக்குடியில் கவிஞர் அருசோ வாழ்க்கைப் பயணம் நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் தலைமை வகித்து குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசியதாவது: கவிஞர் அருசோ 106 நூல்களை எழுதியுள்ளார். நல்ல ஆசிரியருக்கு அடையாளமாக கவிஞர் அருசோவும், நல்ல மாணவருக்கு அடையாளமாக அவரிடம் பயின்ற முன்னாள் தலைமை நீதிபதி கற்பகவிநாயகமும் திகழ்கிறார்கள். நாள்தோறும் கற்றுக்கொண்டே இருப்பவர்கள் வாழ்நாள் முழுவதும் மாணவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தான் சிறந்த ஆசிரியராகவும் இருக்க முடியும் என்றார்.
விழாவில் ஜார்கண்ட் மாநில உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எம். கற்பக விநாயகம், அருசோ வாழ்க்கைப்பயணம் என்ற நூலை வெளியிட்டு பேசியதாவது: எனக்கு கற்பித்த ஆசிரியர்கள் பலர் உண்டு. அவர்களில் மிகமிகப் பிடித்தவர் அருசோதான். எனது ஆசிரியருக்கு நன்றி தெரிவிக்கவேண்டும் என்பதால்தான் அவரின் இந்த முத்து விழாவிற்கு தில்லியிலிருந்து வந்துள்ளேன். அன்புடன் கலந்த அறிவுதான் நல்ல அறிவு. அன்பில்லாத அறிவு தேவையற்றது. நாம் பெற்ற அறிவினால் பிறருக்கு உதவி செய்யவேண்டும். இளைஞர்கள் முடியாது என்கிற வார்த்தையை தவிர்க்கவேண்டும். நம்மால் முடியாதது பிறகு யாரால் முடியும் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்றார். விழாவில் அருட்கவிஞர் அருசோமசுந்தரம் அறக்கட்டளையை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், நீதிபதி கற்பகவிநாயகம் ஆகியோர் தொடக்கி வைத்தனர். கவிஞர் அருசோ பெயரிலான இணையதளமும் தொடக்கி வைக்கப்பட்டது. விழாவில் செட்டிநாடு சிமிண்ட் இயக்குநர் பாகனேரி ராஜாமணி முத்துகணேசன் வாழ்த்திப் பேசினார். கவிஞர் அருசோ ஏற்புரையாற்றினார். சிவகங்கை மாவட்ட எழுத்தாளர் சங்க தலைவர் பேராசிரியர் அய்க்கண், தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி தாளாளர் சேவு.அ. லெட்சுமணன் செட்டியார், காரைக்குடி கம்பன் கழக செயலாளர் பழ. பழனியப்பன் உள்ளிட்ட பிரமுகர்கள் விழாவில் கலந்துகொண்டனர். பேராசிரியர் கரு. முத்தையா, கவிஞர் அப்பச்சி சபாபதி ஆகியோர் விழாவை தொகுத்து வழங்கினர். முன்னதாக விழா அமைப்பாளர் ஏ.எல்.சிதம்பரம் வரவேற்றுப் பேசினார். முடிவில் அலமேலு அருணாசலம் நன்றி கூறினார்.

Share
Tags: dinamani

Recent Posts

7-ம் கட்ட மக்களவைத் தேர்தல்; 1 மணிநிலவரம்: 38% வாக்குகள் பதிவு

7-ம் கட்டத் தேர்தல் நடைபெறும் 59 தொகுதிகளிலும் மதியம் 1 மணி நிலவரப்படி 39.85 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19…

3 hours ago

7-ம் கட்ட மக்களவைத் தேர்தல் : பிற்பகல் 1 மணி வரையிலான வாக்குப்பதிவு நிலவரம்

8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பகல் ஒரு மணி நிலவரப்படி மாநிலவாரியாக பதிவான வாக்கு சதவீதம் தொடர்பான தகவல் தற்போது…

3 hours ago

தேர்தல சவ்வா இழுக்கறத தவிர்க்கலாம்: நிதிஷ் குமார்!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இன்று கடைசிக் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கிய மக்களவை தேர்தல், 6 கட்டங்களை…

3 hours ago

கேதாரத்தைத் தொடர்ந்து பத்ரிநாத் கோயிலில் மோடி வழிபாடு!

உத்தரகாண்ட் மாநிலம், கேதார்நாத்தை தொடர்ந்து பத்ரிநாத் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு மேகொண்டார்.நாடு முழுவதும் இன்று மக்களவைக்கான இறுதிக் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. நேற்று…

3 hours ago

கத்திமுனையில் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை; டிவி நடிகர் கைது..!

2 இளம் பெண்களை கத்திமுனையில் பலாத்காரம் செய்த டிவி நடிகர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனா்.உலகில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.…

3 hours ago

Exit Poll Results 2019: எக்ஸிட் போல் முடிவுகள் எங்கு? எப்போது?

மக்களவைத் தேர்தல் எக்ஸிட் போல் முடிவுகளை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழில் லைவ்வாக காணலாம். முன்னணி தொலைக்காட்சிகள் அனைத்தும் இதையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருக்கின்றன.2019-ம் ஆண்டுக்கான மக்களவைத்…

3 hours ago