Categories: Uncategorized

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் விவாகரத்து

அமேசான் தலைவர் ஜெஃப் பெசோஸ் மற்றும் அவரது மனைவி மெக்கென்சி ஆகியோர் 25 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து பெற உள்ளனர். புதன்கிழமையன்று ட்விட்டரில் இதனை அவர்கள் கூட்டாக அறிவித்தனர். “நீண்ட கால காதல் வாழ்க்கைக்குப் பிறகு, சோதனை முறையில் பிரிந்து வாழ்ந்த பிறகு, நாங்கள் மணவிலக்கு பெற்று நண்பர்களாக இருக்க முடிவு செய்துள்ளோம்” என்று அதில் தெரிவித்துள்ளனர். 25 ஆண்டுகளுக்கு முன்பு அமேசான் தொடங்கப்பட்டு இன்று பெரும் நிறுவனமாக உருவெடுத்துள்ளது. ப்ளூம்பர்க் கோடீஸ்வரர் பட்டியலில் 54 வயதாகும் அமேசான் நிறுவனரான பெசோஸ், உலகின் பெரும் பணக்காரர் ஆவார். 137 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு கொண்டிருக்கும் பெசோஸ், பில்கேட்ஸை முந்தியுள்ளார்.
48 வயதாகும் மெக்கென்சி ஒரு நாவலாசிரியர் ஆவார். “நாங்கள் ஒருவரை ஒருவர் சந்தித்தது மிகவும் அதிஷ்டம். திருமணமாகி சேர்ந்து வாழ்ந்த இத்தனை ஆண்டுகளுக்கும் நன்றிக் கடன்பட்டுள்ளோம்,” என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். “25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிவோம் என்று தெரிந்திருந்தாலும், இவை அனைத்தையும் நாங்கள் செய்திருப்போம். திருமணமான தம்பதிகளாக நல்ல வாழ்க்கை வாழ்ந்துள்ளோம். எதிர்காலத்தில் பெற்றோர்களாக, நண்பர்களாக, பணித் திட்டங்களில் சேர்ந்து கூட்டாளிகளாகவும் சேர்ந்து செயல்படுவோம்.” “தனித்தனி வாழ்க்கையை தேர்ந்தெடுத்தாலும், நாங்கள் குடும்பமாக இருப்போம்.” கடந்த ஆண்டு இந்த ஜோடி, Day one found என்ற திட்டத்தை ஒன்றாகத் தொடங்கினர். வீடு இல்லாத குடும்பங்கள் மற்றும் வசதியில்லாத சமூகங்களில் பள்ளிகள் கட்டுவதே இதன் நோக்கம். ஜெஃப் பெசோஸ் மற்றும் மெக்கென்சி இருவருக்கும் 4 குழந்தைகள் உள்ளனர். 3 ஆண் குழந்தைகள் மற்றும் தத்தெடுக்கப்பட்ட ஒரு பெண் குழந்தை. பெசோஸ், ஃபாக்ஸ் தொலைக்காட்சியின் முன்னாள் தொகுப்பாளரான லாரன் சன்ஷெஸை காதலிப்பதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 2013ஆம் ஆண்டு மெக்கென்சி வோக் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், நியூயார்க்கில் தன்னை நேர்முகத் தேர்வு செய்த போதுதான் முதன்முதலில் ஜெஃபை சந்தித்ததாக கூறியிருந்தார். 1993ஆம் ஆண்டில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின் ஓராண்டு கழித்து ஜெஃப், அமேசான் தளத்தை தொடங்கினார்.

Share

Recent Posts

ஹிப்ஹாப் ஆதியின் நட்பே துணை படத்தின் ரிலீஸ் தேதி வெளியிட்ட படக்குழு

பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் `நட்பே துணை'. ஹாக்கி விளையாட்டு மற்றும் நட்பை மையப்படுத்திய இந்த படத்தில் ஆதி ஜோடியாக…

3 hours ago

படப்பிடிப்பில் இயக்குனருடன் பிரபல நடிகை மோதல்

தமிழில் பாயும் புலி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம், சத்ரியன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா தத்தா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார்.தற்போது…

3 hours ago

காஷ்மீரில் அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி

ஜம்மு:ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த பிப்ரவரி மாதம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவ படையினர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு சென்று தீவிரவாத முகாம்கள்…

3 hours ago

கன்னியாகுமரி தொகுதியில் கோடீஸ்வர வேட்பாளர்களுக்கு இடையே போட்டியா?

கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ், பாஜக மற்றும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களின் சொத்து பட்டியல் அடிப்படையில் பார்த்தால் அங்கு கோடீஸ்வர வேட்பாளர்களுக்கு இடையிலான போட்டி போல் காட்சியளிக்கிறது.17-ஆவது…

3 hours ago

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும்; அமைச்சர் அருண் ஜெட்லி உறுதி!

2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் மாற்றத்தை கொண்டுவருபவர் மோடி தான் எனவும், வரும் தேர்தலில் பாஜக வெற்றிப் பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என மத்திய நிதி…

3 hours ago

Exclusive Interview: மோடி அலை குறித்து மே 23 அன்று தெரியும் -அருண் ஜேட்லி

மத்திய அமைச்சர் நிதி மந்திரி அருண் ஜெட்லியிடம் ஜி நியூஸ் பத்திரிகை தலைமை ஆசிரியர் சுதிர் சௌத்ரி நேர்காணலை மேற்க்கொண்டார். அப்பொழுது அவர் வரும் மக்களவை தேர்தலைக்…

3 hours ago