அசத்தலான கோபி “இந்திரா Zeon Cinemas”

அ தோ இதோ என்று போக்குக் காட்டி வந்த கோபி இந்திரா திரையரங்க மறுசீரமைப்பு வெற்றிகரமாக முடிந்து கடந்த ஞாயிறு (2018 நவம்பர் 4) கல்வித்துறை அமைச்சரும் எங்கள் தொகுதி MLA வுமான திரு செங்கோட்டையன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

மூன்று திரையரங்கங்கள் (Screen 1, 2, 3) இதில் Screen 1 பெரியது மற்ற இரண்டும் 150+ பார்வையாளர்கள் அமரலாம். மூன்றாவது Screen 3D வசதியுடன்.

முதல் நாள் என்பதால், மூன்று திரையரங்கிலும் பழைய திரைப்படங்களின் முன்னோட்டங்கள் ஓடியபடி இருந்தன, பார்க்க அனுமதிக்கப்பட்டது. ஒலி அமைப்பு அட்டகாசமாக இருந்தது.

சென்னை, கோவை திரையரங்குகளுக்குச் சற்றும் குறைந்தது அல்ல, மிகைப்படுத்தவில்லை.

4 முதல் 5 கோடி வரை செலவழிக்கப்பட்டுக் கிட்டத்தட்ட புதிதாகவே கட்டியிருக்கிறார்கள். மார்பிள், டைல்ஸ் என்று திரையரங்கு முழுதும் பளபளக்கிறது. கோபிக்கு இது மிகப்பெரிய வசதியான, ஆடம்பரமான திரையரங்கம் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.

ஒப்பந்த முறையில் எடுக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளதாக கூறினார்கள்.

திரையரங்கம் எப்படியுள்ளது?

கோபி பேருந்து நிலையத்தில் இருந்து நடந்தே ஐந்து நிமிடத்தில் திரையரங்கை அடைந்து விடலாம். பார்வையாளர்களுக்கு மிக வசதியான இடம்.

திரையரங்கு நவீன முறையில் உள்ளது.

இருக்கைகள், நேராக அமர்ந்து பார்க்கும் படியும், சாய்ந்து அமரும் படியும் உள்ளது. சென்னையிலும் உள்ளது என்றாலும், இது போன்ற வித்யாசமான இருக்கை சென்னையில் நான் பார்க்கவில்லை. நானும் முதலில் கவனிக்கவில்லை, அக்கா பையன் கூறிய பிறகே கவனித்தேன்.

திரையரங்கு வெளியே அமர காத்திருக்கும் அறை மற்றும் கூடுதல் இருக்கைகள்.

மூன்று திரையரங்குகளுமே தரை தளத்திலேயே இருப்பது வயதானவர்களுக்கு வசதி.

வாகனங்கள் நிறுத்துவதற்குப் போதுமான இடம்.

கோபி திரையரங்குகள்

கோபியில் தற்போது நான்கு திரையரங்குகள் உள்ளன. இந்திரா, நாகையா, ஸ்ரீ வள்ளி, ஜெயமாருதி. சரவணா மற்றும் சாந்தி திரையரங்கங்கள் இடிக்கப்பட்டு விட்டன.

நாகையா செயல்பாட்டில் இல்லை. ஜெயமாருதி சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டு மக்களிடையே பலத்த வரவேற்பு பெற்றுள்ளது. பொதுமக்களும் நன்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

ஸ்ரீ வள்ளி மிகப்பெரிய திரையரங்கம் ஆனால், பராமரிப்பில்லை. எனவே, இனி போட்டியால் கூட்டம் ஈர்ப்பது கடினமே! இவர்களும் திரையரங்கை புதுப்பித்தே ஆக வேண்டும்.

இதில் இந்திரா மற்றும் ஸ்ரீ வள்ளி இரண்டும் எங்கள் உறவினருடையது.

இந்திரா பெரிய நகரங்களுக்கு இணையான திரையரங்காக உருவாக்கப்பட்டது மகிழ்ச்சி.

இது போலக் கட்டுவது எளிது ஆனால், அதைத் தொடர்ச்சியாகப் பராமரிப்பது தான் மிகச் சிரமம். அதுவும் கோபி போன்ற கிராமங்கள் சூழ்ந்த நகரில்.

ஜெயமாருதி இதில் ஓரளவு வெற்றி பெற்று மக்களிடையே விழிப்புணர்வை கொண்டு வந்துள்ளது.

இதையே இந்திராவும் பின்பற்றினால், மக்களும் ஆதரவு அளிப்பார்கள் என்று நம்பலாம். “சத்யம்” திரையரங்கை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு திரையரங்கை பராமரித்தால், நிச்சயம் மக்களிடையே வரவேற்பை பெறலாம்.

இந்திரா திரையரங்குக்கு ஒரு திரை ரசிகனாக வாழ்த்துகள். இது போல ஒரு திரையரங்கம் எங்கள் சுற்று வட்டாரத்திலேயே இல்லை என்று பெருமையாகக் கூறலாம்.

மக்களின் ஆதரவைப் பெற்று சிறப்பான வெற்றி பெற வாழ்த்துகள்.

கொசுறு

2.0 3D யில் வெளியிடுவார்கள் என்று நினைக்கிறேன். 2.0 வெளியாகும் நவம்பர் கடைசி வாரம் ஊரில் தான் இருப்பேன், பார்த்திட வேண்டியது தான் 🙂 . அக்கா பசங்க இத்திரையரங்கில் பார்க்க செம்ம ஆர்வமாக இருக்கிறார்கள், நானும்.

Share

Recent Posts

TRAI அறிமுகப்படுத்தியுள்ள புதிய அப்ளிகேஷன் இப்பொழுது உங்களுக்கு எளிதாகும்

சிறப்பு செய்திசமீபத்தில் Telecom Regulatory Authority of India ஒரு சேனலின் விலை நிர்ணயிக்கும் வழங்குநர்களால் ஒளிபரப்பப்பட வேண்டும் என்று சேனல் தீர்மானிக்கிறபடி, ஆணை வழங்கியது இதை…

6 hours ago

சியோமி வேறலெவல்: மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ வீடியோ வெளியீடு.!

சியோமி நிறுவனம் தொடர்ந்து அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது, மேலும் இந்நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திக் கொண்டு தான…

6 hours ago

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத கும்பலுடன் தொடர்புடைய 9 ஸ்லீப்பர் செல்ஸ்கள் கைது.!

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் உள்ள அவுரங்காபாத் பகுதியில், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத கும்பலுடன் தொடர்பிலிருந்த 9 ஸ்லீப்பர் செல்ஸ் இளைஞர்களை மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.குடியரசு…

6 hours ago

paytm Republic Day Sale பவர்பேங்கில் அதிரடி ஆபர்

paytm Republic Day Sale:ஆபர் அறிவித்துள்ளது. இதனுடன் இந்த குடியரசு தின விழாவில் எக்கச்சக்க ஆபர்கள் இந்த ஆபரின் கீழ் நல்ல டிஸ்கவுண்ட் வாரி வழங்குகிறது இதனுடன்…

6 hours ago

Honor View 20 Vs Redmi Note 7 எந்த போன் வழங்குகிறது மிக சிறந்த அம்சம்..!

2019 ஸ்மார்ட்போன் சந்தையில் மிக சிறந்த சாதனையுடன் வந்துள்ளது இதனுடன் இதில் பிங்கர்ப்ரின்ட் டிஸ்பிளே சென்சாரும் வருகிறது. Honor View 20 மற்றும் Redmi Note 7…

6 hours ago

இந்தியாவின் பெஸ்ட் டேப்லெட்கள்..!

Here's is the summary list of Digit Top 10 Best Smartphones in India

6 hours ago