நுபியா விரைவில் புதிய கேமிங் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. ஏற்கனவே புதிய ஸ்மார்ட்போனின் டீசரை அந்நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

சமீபத்தில் சியோமி மற்றும் ரேசர்போன் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது கேமிங் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த நிலையில், நுபியா நிறுவனம் ரெட் மேஜிக் மாடலின் அப்டேட் செய்யப்பட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்கிறது. நுபியா நிறுவனத்தின் முதல் கேமிங் போன் கிரவுட்ஃபன்டிங் வெப்சைட் மூலம் விற்பனைக்கு வந்தது.

இந்நிலையில் ரெட் மேஜிக் 2 ஸ்மார்ட்போனின் சில முக்கிய சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி புதிய ஸ்மார்ட்போனில் 10 ஜி.பி. ரேம், ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
சீன சோசியல் வெப்சைட்டில் வெய்போவில் நுபியா ரெட் மேஜிக் 2 ஸ்மார்ட்போனின் புதிய டீசரை வெளியிட்டுள்ளது.

புதிய டீசரின் படி ரெட் மேஜிக் 2 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், 10 ஜி.பி. ரேம் வழங்கப்படுகிறது. முந்தைய ரெட் மேஜிக் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர், 8 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இத்துடன் புதிய ரெட் மேஜிக் 2 ஸ்மார்ட்போனில் 4டி கேமிங் வழங்கப்படலாம் என தெரிகிறது.

Nubia Red Magic 2 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

– 6.0 இன்ச் ஃபுல் HD .பிளஸ் 1080×2160 பிக்சல் LTPS TFT டிஸ்ப்ளே – குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் – 10 ஜி.பி. ரேம் – 24 எம்.பி. பிரைமரி கேமரா – 8 எம்.பி. செல்ஃபி கேமரா – ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ

புதிய ஸ்மார்ட்போனில் லிக்விட் மற்றும் ஏர்-கூலிங் தொழில்நுட்பங்கள் வழங்கப்படுகிறது. நுபியாவின் முந்தைய கேமிங் போனில் ஏர்-கூலிங் தொழில்நுட்பம் மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது. டீசரில் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி குறித்து எவ்வித தகவலும் இடம்பெறாத நிலையில், நுபியா பொது மேளாலர் வெய்போ பதிவில் புதிய கேமிங் ஸ்மார்ட்போன் அக்டோபர் 31ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என குறிப்பட்டிருந்தார்.

Leave a Reply