இனி பள்ளிக்கு செல்போன் கொண்டுவந்தால் இதுதான் முடிவு-அய்யோ பாவம்.! வைரல் வீடியோ.!

செல்போன்கள் பயன்படுத்துவது நல்லது தான், ஆனால் அதை எந்தெந்த இடங்களில் பயன்படுத்த வேண்டும், எந்தெந்த இடங்களில் பயன்படுத்தக் கூடாது என்று நன்றாக தெரிந்துகொள்ள வேண்டும்.

அதன்படி தென்ஆப்பிரிக்காவின் பள்ளி ஒன்றில் நிர்வாகத்தின் விதியை மீறி பள்ளிக்கு செல்போன் எடுத்துவந்த பல மாணவர்களின் செல்போன்கள் நொறுக்கப்பட்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தெற்கு ஆப்பிரிக்காவின் காப்பான் என்ற இடத்தில் ‘லியேசி ஜோசப் அம்பாரூட் அவரோ’ என்ற பள்ளி ஒன்று உள்ளது, இந்த பள்ளியில் மாணவர்கள் பள்ளிக்கு செல்போன் எடுத்துவர அனுமதி இல்லை, இந்த பள்ளியின் விதி மீறி பள்ளிக்கு செல்போன் எடுத்து வரும் மாணவர்களின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்படும்

அதன்படி சில நாட்களுக்கு முன்பு அப்பள்ளியின் மைதானத்தில் சுமார் 3000-க்கும் மேற்பட்ட செல்போன்கள் சுத்தியால் சுக்குநூறாக நொறுக்கப்பட்டுள்ளது.
அதிலும் போன்களை அடித்து நொறுக்கியவர் அப்பள்ளியின் காவலர் என தெரியவந்துள்ளது.

போன்கள் நொறுக்கப்பட்ட சம்பவத்தின் வானது இன்று அதிக பகிர்வுகளைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த சம்பவம் குறித்து பள்ளி நிற்வாகம் தெரிவிக்கையில் விதியை மீறி செல்போன்களை பள்ளிக்கு எடுத்து வரும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்படும்.

இந்த வழக்கத்தால் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களின் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை சிதைக்கும் பணி நடைப்பெற்றது என பள்ளி நிற்வாகம் தெரிவித்தது.

பின்பு பள்ளியில் கடைப்பிடிக்கப்படும் விதிமுறைகள் குறித்து மாணவர்களின் பெற்றோர்களிடம் தொடர்ந்து தெரியபடுத்தி வருவதாகவும், எனினும் மாணவர்களும் சரி, அவர்களது பெற்றோர்களும் விதிமுறையினை பின்பற்றுவது போல் தெரியவில்லை. இதன் காரணமாக தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது எனவும் பள்ளியின் மேளாலர் எசாங்க் என்பவர் தெரிவித்துள்ளார்

ஒன்பிளஸ் நிறுவனம் அன்மையில் புதிய ஒன்பிளஸ் 6டி என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது, இந்த ஸ்மார்ட்போன் உற்பத்தி செலவை விட விளம்பர செலவு தான் அதிகம் போல, அந்த அளவுக்கு இந்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனை விளம்பரப்படுத்தியுள்ளனர் ஒன்பிளஸ் நிறுவனம். அதேசமயம் விளம்பரத்துக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் மாடல் நல்ல வன்பொருள் மற்றும் மென்பொருள் தொழில்நுட்ப அம்சத்துடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2-ம் தேதி இந்த ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் உள்ள முக்கிய 9நகரங்களில் அதிகளவு ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இன்று வரை அதிகளவில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படுகிறது என்று அந்நிறுவனம் சார்பாக தகவல் வெளிவந்துள்ளது. இருந்தபோதிலும் அதிக வாடிக்கையாளர்கள் இந்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனை வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் என்று தான் தெரிகிறது.

ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சில சிறப்பு பரிசுகளை அறிவித்துள்ளது என்று தான் கூறவேண்டும், அதன்படி டி-சர்ட், OnePlus tote bags போன்ற பல்வேறு சிறப்பு பரிசுகளை அறிவித்துள்ளது ஒன்பிளஸ் நிறுவனம். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம். குறிப்பாக இயக்கதற்கு மிக அருமையாக இருக்கும் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் மாடல். பின்பு ஒன்பிளஸ் ரசிகர்களுக்கு வேண்டி பல புதிய முயற்சிகளை செயல்படுத்தி கொண்டு இருக்கிறது இந்நிறுவனம்.

இந்தியாவில் 8 நகரங்களில் சுமார் 10 இடங்களில் ஒன்பிளஸ் 6டி பாப்-அப்ஸ் நிகழ்வுகள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் ஒன்பிளஸ் ரசிகர்கள் இந்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனை வரிசையில் நின்றுகைப்பற்றினர். சில இடங்களில் ஒன்பிளஸ் 6டி மிக அதிகமாக விற்பனை செய்யப்பட்டது. குறிப்பாக பெங்களூருவில் ஒன்பிளஸ் ஸ்டோர் முன்பு அதிக ரசிகர்கள் வரிசையில் நின்று இந்த அட்டகாசமான ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனை வாங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு பல கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு வந்து வாங்கிச் சென்றுள்ளனர், அதன்படி ஒரு 62 வயதான ஒன்பிளஸ் ரசிகர் அவரது சொந்த ஊரிலிருந்து சென்னை பாப்-அப்கள் நிகழ்ச்சியில் கான 250 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து வந்துள்ளார், இவற்றின் மூலம் ஒன்பிளஸ் தயாரிப்புகளுக்கான ஆர்வத்தை நீங்கள் புரிந்து கொள்ளலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட் போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு ஒரு வேரியண்டாகவும், 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு கொண்ட இன்னொரு வேரியண்டாகவும் மற்றும் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு கொண்ட இன்னொரு வேரியண்டாகவும் களமிறங்கியுள்ளது. குறிப்பாக ஒன்பிளஸ் 6டி மாடல் ஸ்மார்ட் போன் இல் 64 ஜிபி வேரியண்ட் மாடல் கிடையாது என்பதும், ஒன்பிளஸ் நிறுவனத்தின் பட்டியலில் இருந்து 64 ஜிபி வேரியண்ட் நீக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒன் பிளஸ் 6டி சிறந்த ஸ்னாப்டிராகன் 845 சிபியூ புரோசர், 4 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம் இருக்கின்றுது. 3700 எம்ஏஹெச் பேட்டரியும் இருகின்றது. ஒன் பிளஸ் 6டி அதிக நேரம் கேம் விளையாடவும் முடியும். இந்த ஒன்பிளஸ் 6டியில் ஏராளமான செயல் திறன்களும் அடங்கியுள்ளன. பிக்சல் ஸ்மார்ட் போனாவும் இருக்கின்றது. மேம்படுதத்தபட்ட சைகை ஊடுருவல், நீண்ட கால பேட்டரி, புதிய தகவமைப்பு, சிறந்த மெமரி மேலாண்மை, யூஐன் சிறப்பான உள்ளுணர்வு, மேலும் ஆக்ஸிஜன் ஓஎஸ் பதிப்பும் இருக்கின்றது.

பொது மேலாளர் அகர்வால் கூறியதாவது-நாம் ஒன்பிளஸ் சாதனத்தை தொடர்ந்து வழங்கி வருகின்றோம். தற்போது கின்னஸ் சாதனை முயற்சியில் வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது. இந்த ஒன்பிளஸ் 6டியை வெளியிட்டு சாதனை செய்தது ஒரு சந்தர்ப்பம். நூற்றுக்கணக்கான சமூக உறுப்பினர்கள் இந்த மகத்தான சாதனை நிறைவேறியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

source: gizbot.com

Share

Recent Posts

கூகுள் புதிய ஆண்ட்ராய்டு பெயரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு Q இயங்குதளம் ஆண்ட்ராய்டு 10 என்ற பெயரில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இத்துடன் புதிய இயங்குதளத்துக்கான லோகோவையும் வெளியிட்டது.இதுவரை ஆண்ட்ராய்டு Q…

12 hours ago

கணினியை இப்படி எல்லாம் பயன்படுத்தி இருக்கிறீங்களா?

இன்றைய உலகில் கணினியின் தேவை அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. ஒவ்வொருவரும் கணினியின் பயனை உணர்ந்துக்கொள்வது அவசியமாகிவிட்டது. கணினியைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாதாகிவிட்டது. இன்று கணினியை எளிய முறையில் கையாள…

12 hours ago

RS 13,999 விலையில் அறிமுகமானது MOTOROLA ONE ACTION.

மோட்டோரோலா ஒன் அதிரடி இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த புதிய மோட்டோரோலா தொலைபேசி ஆகஸ்ட் 30 முதல் விற்பனைக்கு வருகிறது. நிறுவனத்தின் மற்ற ஸ்மார்ட்போன்களைப் போலவே,…

12 hours ago

200 ஆண்டுகள் ஏலியனாக வாழ்வேன் : நித்தியானந்தா ! வைரலாகும் வீடியோ !

நித்தியானந்தா என்றாலே எப்போதும், பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. சுவாமி நித்தியானந்தா ஆன்மீகத்தையும் தாண்டி அறிவியல் பூர்வமாகவும், ஐன்டீன்ஸ் விதியை தவறு என்று கூறி உலகத்தையும் திருப்பி போட்டார்.இந்நிலையில்,…

12 hours ago

சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.!

இப்போது வரும் புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் மக்களுக்கு பயன்படும் வகையில் தான் இருக்கிறது, ஆனால் அந்த தொழில்நுட்பத்தை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும், எந்த இடத்தில் பயன்படுத்தக்…

12 hours ago

உணவாக மாறிய டைட்டானிக் கப்பல்! என்ன நடந்தது தெரியுமா?

ஒரு நூற்றாண்டிற்கு முன்னால் கடலுக்குள் மூழ்கிய ஆர்எம்எஸ் டைட்டானிக் கப்பல், அதன் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக ஒரு புதிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.கடலில் உள்ள உப்பு…

12 hours ago