“வாட்ஸ்அப் போல ஃபேஸ்புக் மெசேஜை டெலிட் செய்யலாம்” – புதிய அப்டேட்

வாட்ஸ்அப்-பில் தவறுதாலக அனுப்பிய மெசேஜை டெலிட் செய்வது போல ஃபேஸ்புக்கிலும் புதிய அப்டேட் வரவுள்ளது.

வாட்ஸ்அப் செயலி என்பது உலகம் முழுவதும் உள்ள தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்தும் தகவல் பரிமாற்ற செயலியாக அது உள்ளது. இந்தச் செயலியை கடந்த 2014ஆம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கியது.
அதன்பின்னர் வாட்ஸ் அப்பில் பல புதிய அப்டேட்கள் கொண்டு வரப்பட்டன. முதலில் எழுத்தால் வைக்கப்பட்ட வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பின்னர் புகைப்படமாகவும், தற்போது வீடியோவாகவும் மாற்றப்பட்டுள்ளது. அதேபோன்று பணம் அனுப்புவது உள்ளிட்ட அப்டேட்களும் கொண்டுவரப்பட்டது.

அந்த வகையில் வாட்ஸ் அப்பில் ஒருவருக்கு அனுப்ப வேண்டிய மெசேஜை வேறு ஒருவருக்கு தவறுதலாக அனுப்பிவிட்டாலோ அல்லது தவறுதலான ஒரு குரூப்பில் மெசேஜை அனுப்பிவிட்டாலோ, அதை டெலிட் (நீக்கம்) செய்ய முடியாது என்ற நிலை இருந்தது. இதனை மாற்றி கடந்த டிசம்பர் மாதம் வாட்ஸ் அப் நிறுவனம் ஒரு புதிய அப்டேட்டை வெளியிட்டது. அதன்படி ஒரு மெசேஜை தவறுதலாக அனுப்பிவிட்டால் அதை 7 நிமிடத்திற்குள் டெலிட் செய்யலாம் என்ற வசதி வழங்கப்பட்டது. இதற்கு வாட்ஸ் அப் பயன்பாட்டாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைக்க, பின்னர் அது ஒரு மணி நேரமாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாட்ஸ் அப் போலவே ஃபேஸ்புக்கின் மெசேஜ் அப்ளிகேஷனான மெசேஞ்சரிலும் புதிய அப்டேட் வரவுள்ளது. இதன்படி மெசேஞ்சர் அப் அல்லது ஃபேஸ்புக் மூலம் யாருக்காவது தவறுதலாக மெசேஜ் அனுப்பிவிட்டால் டெலி செய்ய முடியும். ஆனால் 10 நிமிடத்திற்குள் அதை டெலிட் செய்ய வேண்டும். ஆரம்பத்தில் கொண்டுவரப்படும் அப்டேட் என்பதால் இது 10 நிமிடங்களில் அறிமுகப்படுத்தப்படுகிறது. பின்னர் பயன்பாட்டாளர்களின் வரவேற்பை பொறுத்து இந்த நேரம் நீட்டிக்கப்படலாம்.

Share

Recent Posts

பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு வைத்த ஆசிரியை ‘போக்சோ’ சட்டத்தில் கைது

ஆரணி:ஆரணியை அடுத்த பையூர் காலனி பகுதியை சேர்ந்தவர் உமேஷ்குமார் (வயது 45), ஆசிரியர். இவரது மனைவி நித்யா (30). வேலூர் மாவட்டம் மாமண்டூர் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக…

1 hour ago

குடியாத்தம் அருகே பிளாஸ்டிக் கிடங்கில் தீ விபத்து

குடியாத்தம்: குடியாத்தம் அருகே பழைய பிளாஸ்டிக் பொருள்கள் சேமித்து வைக்கும் கிடங்கில் ஏற்பட்ட திடீா் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருள்கள் எரிந்து…

1 hour ago

கிளி ஜோசியத்தை நம்பி நான் அரசியல் செய்யவில்லை- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

சென்னை:தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகளும் புதுச்சேரி தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. தமிழ்நாடு…

1 hour ago

அ.தி.மு.க. சிறைக்கு செல்வதை தவிர்க்கவே பா.ஜ.க.வுடன் கூட்டணி- ஸ்டாலின் குற்றச்சாட்டு

அரூர்:அரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கிருஷ்ணகுமாருக்கு ஆதரவாக அரூரில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது, அமித்ஷாவிடம் அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமி அடகு…

1 hour ago

ஈரோடு தொகுயில் உதய சூரியன் சின்னம்… பணிந்தது ம.தி.மு.க

திமுக கூட்டணியில் மதிமுக ஈரோடு தொகுதியில் போட்டியிடுகிறது. அந்த கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கையில் மதிமுக தனி சின்னத்தில் நிற்கும் என்று அறிவித்தார்.ஆனால்…

1 hour ago

திருப்பூர் தொகுதியில் 27-ந்தேதி பிரசாரத்தை தொடங்குகிறார் பிரேமலதா

சென்னை:அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க. 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து கடந்த காலங்களில் விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் செய்தார். தற்போது உடல் நலம்…

1 hour ago