கணினியை இப்படி எல்லாம் பயன்படுத்தி இருக்கிறீங்களா?

இன்றைய உலகில் கணினியின் தேவை அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. ஒவ்வொருவரும் கணினியின் பயனை உணர்ந்துக்கொள்வது அவசியமாகிவிட்டது. கணினியைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாதாகிவிட்டது. இன்று கணினியை எளிய முறையில் கையாள சில பயனுள்ள தகவல்களை அறிந்துக்கொள்வோமா?…

ஒரு பைலை அழிக்க வேண்டும் ஆனால் ரீ சைக்கிள் பின்னுக்குச் செல்ல கூடாது என்றால் அந்த பைலைத் தேர்ந்தெடுத்து டெலீட் பட்டன் மற்றும் ஷிப்ட் கீயை அழுத்தியபடி அழுத்தவும். பைல் ரீசைக்கிள் பின்னுக்குச் செல்லாது.

வழக்கமாக மவுஸ் பாய்ண்ட்டர் மேல் நோக்கி சிறிது சாய்வானதாக இருக்கும். இதனை மாற்றுவதற்கும் வசதிகள் உள்ளன. உரிக்கும் வாழைப்பழம், சிரிக்கும் முகம் என இந்த பாய்ண்ட்டரை மாற்றலாம்.
ஆனால் இவை அனிமேஷன் வகை என்பதால் ராம் மெமரி அதிகம் செலவாகும்.

கேஷ் மெமரி அடிக்கடி பயன்படுத்தும் டேட்டாவினை தற்காலிகமாகச் சேமித்து வைக்கும் மெமரி வகை ஆகும். இதனால் கம்ப்யூட்டர் விரைவாக இயங்க முடிகிறது.

வேர்ட் டாக்குமெண்டில் பார்த்துக் கொண்டிருக்கும் பக்கத்தை பிரிண்ட் எடுக்க வேண்டும் என்றால் பைல் மெனு சென்று பிரிண்ட் கொடுக்கவும். பிறகு விண்டோவில் Current page செலக்ட் செய்து என்டர் பட்டனை அழுத்தவும். இதற்கு மற்றொரு வழி ஒன்று உள்ளது. பிரிண்ட் எடுக்க வேண்டிய பக்கத்தில் கர்சரை வைத்து Ctrl + P மற்றும் Alt + E அழுத்தவும். அந்தப் பக்கம் மட்டும் பிரிண்ட் ஆகும்.

ஒன்றுக்கு மேற்பட்ட டேப்களை நகர்த்த :

ஒன்றுக்கு மேற்பட்ட டேப்களை நகர்த்தவோ அல்லது மூடவோ விரும்பினால், ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு, இணையதளப் பக்கங்களைக் காட்டும் டேப்களில் கிளிக் செய்தால் போதும். அவை அனைத்தும் தேர்ந்தெடுக்கப்படும். பின்னர் இவற்றை மொத்தமாக, புதிய விண்டோவிற்கு இழுத்துச் செல்லலாம். அல்லது Ctrl + W கீகளை அழுத்தி மூடிவிடலாம்.

தவறுதலாக டேப் ஒன்றினை மூடிவிட்டீர்கள் என்றால் Ctrl + Shift + T என்ற கீகளை அழுத்தினால், அவை மீண்டும் கிடைக்கும். மீண்டும் தொடர்ந்து இந்த கீகளை அழுத்தினால், ஏற்கனவே மூடப்பட்ட இணையதளப் பக்கங்கள், பின் நிகழ்விலிருந்து வரிசையாகக் கிடைக்கும். Ctrl + Shift + D கீகளை அழுத்தினால், திறந்து பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்து தளங்களும் புக்மார்க்காக ஒரு தனி போல்டரில் சேவ் ஆகும். மீண்டும் அவை அனைத்தையும் திறக்க, போல்டரில் ரைட் கிளிக் செய்து, Open all bookmarks in window என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

வேர்ட் டாக்குமெண்ட்களில் நாம் அடிக்கடி பயன்படுத்துவது, பைண்ட் அண்ட் ரீபிளேஸ் (Find and Replace) வசதியாகும். Ctrl + H கீகளை அழுத்தினால், Find and Replace டயலாக் பாக்ஸின் Replace டேப் நேரடியாகக் கிடைக்கும். உங்களுக்கு இந்த டயலாக் பாக்ஸ் தேவையில்லை என்றால் எஸ்கேப் Esc) கீயை அழுத்தலாம்.

Share

Recent Posts

எப்போதும் இளமையான சருமம் வேண்டுமா அப்போ அரிசி மாவ இப்படி யூஸ் பண்ணுங்க.

பளபளப்பான, மென்மையான மற்றும் பருக்கள் அற்ற சருமம் வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புவார்கள். ஆனால் எப்படியாவது முகத்தில் ஏதேனும் பரு அல்லது சரும பிரச்சனை வந்து…

46 mins ago

39 வயசாகியும் கரீனா கபூர் அழகாக ஜொலிப்பதன் பின்னணியில் உள்ள ரகசியம் இதுதாங்க…

கபூர் கண்டனின் மகளும், ராயல் பட்டோடி குடும்பத்தின் மருமகளுமான கரீனா கபூர், பாலிவுட்டின் முன்னணி நடிகைகளுள் ஒருவராவார். இவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், இவரை பெபோ என்றே…

46 mins ago

இடைத்தோதலில் போட்டியிடும் மஜத வேட்பாளா்கள் நாளை முடிவு: முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெகௌடா

பெங்களூரு: இடைத்தோதலில் போட்டியிடும் மஜத வேட்பாளா்களின் பெயா்களை நாளை ஞாயிற்றுக்கிழமை முடிவுசெய்யவிருக்கிறோம் என்று முன்னாள் பிரதமரும், மஜத தேசியத்தலைவருமான எச்.டி.தேவெகௌடா தெரிவித்தாா்.இது குறித்து பெங்களூரு, மஜத தலைமை…

3 hours ago

ஹரியாணா பேரவைத் தோதலில் 70-க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும்: முதல்வா் மனோகா் லால் கட்டா்

சண்டீகா்: ஹரியாணா சட்டப் பேரவைத் தோதலில் 70-க்கும் அதிகமான தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என்று அந்த மாநில முதல்வா் மனோகா் லால் கட்டா் தெரிவித்துள்ளாா்.ஹரியாணா சட்டப் பேரவைக்கு…

3 hours ago

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படைகள் தொடர்ந்து தாக்குதல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக்கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் விடியவிடிய துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தியது.போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்மு-காஷ்மீர்…

3 hours ago

4 நாள் அரசுமுறை பயணமாக வங்கதேசம் சென்றாா் கடற்படை தளபதி கரம்வீா் சிங்

புது தில்லி: வங்கதேசத்துடனான கடல்சாா் பாதுகாப்பு உறவை மேம்படுத்தும் பொருட்டு, அந்நாட்டுக்கு கடற்படை தலைமைத் தளபதி கரம்வீா் சிங் 4 நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளாா்.இதுதொடா்பாக இந்திய…

3 hours ago