சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.!

இப்போது வரும் புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் மக்களுக்கு பயன்படும் வகையில் தான் இருக்கிறது, ஆனால் அந்த தொழில்நுட்பத்தை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும், எந்த இடத்தில் பயன்படுத்தக் கூடாது என்று

தெரிந்துவைத்திருக்க வேண்டும்.

உதரணமாக சில நபர்கள் செல்போனில் பேசியபடியே ரயில் பாதையை கடக்க முயன்று ரயில் மோதி சம்பவ இடத்திலே உயிரிழந்த சம்பவத்தை நாம் செய்திகளில் பார்த்திருப்போம்.

இந்நிலையில் சென்னை தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட சில பகுதிகளில் தொடர்ந்து செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடந்தன. இது குறித்து புகார்களின் பேரில் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அதில் திருட்டு நடந்த இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீஸார் ஆய்வு செய்தனர்,அப்போது, ஒரே நபர்தான் இந்த கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதை போலீஸார் கண்டறிந்தனர்.

தொடர்ந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது, தனிப்படை போலீஸார்கொள்ளையனைத் தேடிவந்த நிலையில் அவரை மடக்கி பிடித்தனர். பின்பு விசாரணையில் அவர் பெயர் கார்த்தி என்றும் சாத்தாங்காடு எனும் பகுதியைச் சேர்ந்தவன் என்றும் தெரியவந்தது. குறிப்பாக இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அதன்பின்பு கடந்த 20-ம் தேதி திருவொற்றியூர் பகுதியில் மேரி என்பவரிடம் செல்போன் பறித்து செல்லும் நபரும் கல்யாணியிடம் செயின் பறித்த நபரும் ஒருவர்தான் என்பதை கண்டறிந்தோம். பின்பு இது தொடர்பாக விசாரணைநடத்தி கார்திக் என்பவரை கைது செய்துள்ளோம், அவரிடம் இருந்து செயின் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்துள்ளோம் என்றனர்.

கார்த்தி அளித்த பகீர் வாக்குமூலத்தில், இரவு நேரத்தில் தனியாக செல்லும் பெண்களை முதலில் பைக்கில் சென்று நோட்டமிடுவேன், பிறகு அவர்கள் நடந்து செல்லும்போது பின்னால் சென்று செயின் அல்லது செல்போன்களை பறித்துவிட்டு தப்பிச் செல்வேன். அதிலும் செல்போன் பேசியபடி நடந்து செல்லும் பெண்களிடம் வழிப்பறி செய்வது எளிது, ஏனெனில் அவர்களின் கவனம் பேசுவதில் இருக்கும் என்று கூறியுள்ளான்.

குறிப்பாக வழிப்பறி செய்த ஸ்மர்ட்போன்களை விற்பேன் அந்தப் பணத்தில் ஆடம்பரமாகவும் விருப்பம் போல வாழ்வேன் என்று கூறியுள்ளான்.

source: gizbot.com

Share

Recent Posts

எப்போதும் இளமையான சருமம் வேண்டுமா அப்போ அரிசி மாவ இப்படி யூஸ் பண்ணுங்க.

பளபளப்பான, மென்மையான மற்றும் பருக்கள் அற்ற சருமம் வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புவார்கள். ஆனால் எப்படியாவது முகத்தில் ஏதேனும் பரு அல்லது சரும பிரச்சனை வந்து…

1 hour ago

39 வயசாகியும் கரீனா கபூர் அழகாக ஜொலிப்பதன் பின்னணியில் உள்ள ரகசியம் இதுதாங்க…

கபூர் கண்டனின் மகளும், ராயல் பட்டோடி குடும்பத்தின் மருமகளுமான கரீனா கபூர், பாலிவுட்டின் முன்னணி நடிகைகளுள் ஒருவராவார். இவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், இவரை பெபோ என்றே…

1 hour ago

இடைத்தோதலில் போட்டியிடும் மஜத வேட்பாளா்கள் நாளை முடிவு: முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெகௌடா

பெங்களூரு: இடைத்தோதலில் போட்டியிடும் மஜத வேட்பாளா்களின் பெயா்களை நாளை ஞாயிற்றுக்கிழமை முடிவுசெய்யவிருக்கிறோம் என்று முன்னாள் பிரதமரும், மஜத தேசியத்தலைவருமான எச்.டி.தேவெகௌடா தெரிவித்தாா்.இது குறித்து பெங்களூரு, மஜத தலைமை…

3 hours ago

ஹரியாணா பேரவைத் தோதலில் 70-க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும்: முதல்வா் மனோகா் லால் கட்டா்

சண்டீகா்: ஹரியாணா சட்டப் பேரவைத் தோதலில் 70-க்கும் அதிகமான தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என்று அந்த மாநில முதல்வா் மனோகா் லால் கட்டா் தெரிவித்துள்ளாா்.ஹரியாணா சட்டப் பேரவைக்கு…

3 hours ago

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படைகள் தொடர்ந்து தாக்குதல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக்கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் விடியவிடிய துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தியது.போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்மு-காஷ்மீர்…

3 hours ago

4 நாள் அரசுமுறை பயணமாக வங்கதேசம் சென்றாா் கடற்படை தளபதி கரம்வீா் சிங்

புது தில்லி: வங்கதேசத்துடனான கடல்சாா் பாதுகாப்பு உறவை மேம்படுத்தும் பொருட்டு, அந்நாட்டுக்கு கடற்படை தலைமைத் தளபதி கரம்வீா் சிங் 4 நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளாா்.இதுதொடா்பாக இந்திய…

3 hours ago