உணவாக மாறிய டைட்டானிக் கப்பல்! என்ன நடந்தது தெரியுமா?

ஒரு நூற்றாண்டிற்கு முன்னால் கடலுக்குள் மூழ்கிய ஆர்எம்எஸ் டைட்டானிக் கப்பல், அதன் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக ஒரு புதிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கடலில் உள்ள உப்பு மற்றும் உலோகம் தின்னும் பாக்டீரியாக்களால் மிக விரைவாக இந்த டைட்டானிக் கப்பல் அழிந்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

நியூயார்க்கில் உள்ள சவுத்தாம்ப்டன் துறைமுகத்திலிருந்து ஏப்ரல் 10 ஆம் தேதி, 1912 ஆம் ஆண்டு டைட்டானிக் கப்பல் தனது முதல் பயணத்தைத் துவங்கியது. இந்தப் பயணத்தின் போது எதிர்பாராதவிதமாக டைட்டானிக் கப்பல் பனிப்பாறையில் மோதி அட்லாண்டிக் ஆழ்கடலில் சுமார் 2,224 பயணிகளுடன் மூழ்கியது.
இந்த விபத்தில் சுமார் 1,500க்கும் மேற்பட்ட பயணிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

ஆழ்கடல் நீரில் மூழ்கி 1,500 பேர் உயிரிழந்த சம்பவம் உலக வரலாற்றில் ஒரு கருப்பு தினமாக பார்க்கப்படுகிறது. யாராலும் இந்த சம்பவத்தை மறந்திருக்க முடியாது, அதேபோல் யாராலும் டைட்டானிக் கப்பலையும் மறந்திருக்க முடியாது. தற்போது இந்த டைட்டானிக் கப்பல் கடலில் வெகு வேகமாக அழிந்து வருகிறது.

14 வருடங்களுக்கு முன்னால் அட்லாண்டிக் ஆழ்கடலுக்குச் சென்று, டைட்டானிக் கப்பல் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அதே ஆழ்கடல் டைவர் குழு, மீண்டும் டைட்டானிக் கப்பலை ஆய்வு செய்து சோதிப்பதற்காக இந்த மாதம் சென்றபோது இந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.

அட்லாண்டிக் கடலின் 12,500 அடி ஆழத்தில் கிடக்கும் இந்த டைட்டானிக் கப்பலை, இந்தக் குழு ஆகஸ்ட் மாதம் மட்டும் சுமார் ஐந்து முறை சோதனை செய்துள்ளது. இந்த சோதனையின் போது டைட்டானிக் கப்பல் வெகு வேகமாக உப்பினாலும், உலோகம் உண்ணும் பாக்டீரியாக்களாலும் கடலில் உள்ள அழுத்தத்தினாலும் டைட்டானிக் கப்பல் மிக வேகமாக அழிந்து வருகிறது என்பதைக் கண்டறிந்துள்ளது.

டைட்டானிக் கப்பலில் அழிந்துவரும் இடங்களில் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது கப்பலின் கேப்டன் இருந்த கேப்டன் அறைதான். இதற்கு முன்பு வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட கேப்டனின் பாத் டப் தற்பொழுது காணாமல் போய்விட்டது. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் உலோகம் உண்ணும் பாக்டீரியாக்கள் அதைத் தின்று அழித்துவிட்டது.

இந்த உலோகம் தின்னும் பாக்டீரியாக்கள் இயற்கையானது தான் என்று விஞ்ஞானி லோரி ஜான் தெரிவித்துள்ளார். ஆனால் டைட்டானிக் கப்பல் வெகு வேகமாக அழிந்து வருவதற்கு இந்த பாக்டீரியாக்கள் ஒரு குழுவாகச் செயல்படுவதே முக்கிய காரணம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

ஆழ் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பல் இன்னும் சில காலங்களில் இல்லாமல் போய்விடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் நம் நெஞ்சங்களில் டைட்டானிக் கப்பல் மற்றும் அதன் காதல் கதை என்றும் நிலைத்திருக்கும் என்று சந்தேகமில்லாமல் கூறிக்கொள்ளலாம்.

source: gizbot.com

Share

Recent Posts

எப்போதும் இளமையான சருமம் வேண்டுமா அப்போ அரிசி மாவ இப்படி யூஸ் பண்ணுங்க.

பளபளப்பான, மென்மையான மற்றும் பருக்கள் அற்ற சருமம் வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புவார்கள். ஆனால் எப்படியாவது முகத்தில் ஏதேனும் பரு அல்லது சரும பிரச்சனை வந்து…

10 mins ago

39 வயசாகியும் கரீனா கபூர் அழகாக ஜொலிப்பதன் பின்னணியில் உள்ள ரகசியம் இதுதாங்க…

கபூர் கண்டனின் மகளும், ராயல் பட்டோடி குடும்பத்தின் மருமகளுமான கரீனா கபூர், பாலிவுட்டின் முன்னணி நடிகைகளுள் ஒருவராவார். இவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், இவரை பெபோ என்றே…

10 mins ago

இடைத்தோதலில் போட்டியிடும் மஜத வேட்பாளா்கள் நாளை முடிவு: முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெகௌடா

பெங்களூரு: இடைத்தோதலில் போட்டியிடும் மஜத வேட்பாளா்களின் பெயா்களை நாளை ஞாயிற்றுக்கிழமை முடிவுசெய்யவிருக்கிறோம் என்று முன்னாள் பிரதமரும், மஜத தேசியத்தலைவருமான எச்.டி.தேவெகௌடா தெரிவித்தாா்.இது குறித்து பெங்களூரு, மஜத தலைமை…

2 hours ago

ஹரியாணா பேரவைத் தோதலில் 70-க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும்: முதல்வா் மனோகா் லால் கட்டா்

சண்டீகா்: ஹரியாணா சட்டப் பேரவைத் தோதலில் 70-க்கும் அதிகமான தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என்று அந்த மாநில முதல்வா் மனோகா் லால் கட்டா் தெரிவித்துள்ளாா்.ஹரியாணா சட்டப் பேரவைக்கு…

2 hours ago

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படைகள் தொடர்ந்து தாக்குதல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக்கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் விடியவிடிய துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தியது.போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்மு-காஷ்மீர்…

2 hours ago

4 நாள் அரசுமுறை பயணமாக வங்கதேசம் சென்றாா் கடற்படை தளபதி கரம்வீா் சிங்

புது தில்லி: வங்கதேசத்துடனான கடல்சாா் பாதுகாப்பு உறவை மேம்படுத்தும் பொருட்டு, அந்நாட்டுக்கு கடற்படை தலைமைத் தளபதி கரம்வீா் சிங் 4 நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளாா்.இதுதொடா்பாக இந்திய…

2 hours ago