நிலவின் சுற்று வட்டப்பாதையை நோக்கி பயணித்த சந்திரயான்- 2

சந்திரயான் – 2 விண்கலம் புவி சுற்றுவட்டப் பாதையிலிருந்து நிலவின் சுற்று வட்டப்பாதையை நோக்கி இன்று பயணிக்க தொடங்கியது.

நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக 978 கோடி ரூபாய் செலவில், சந்திரயான்-2 விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்தது. ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் என மூன்று நிலைகளைக் கொண்ட சந்திரயான்-2 விண்கலம் கடந்த மாதம் 22-ஆம் தேதி சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது.

இந்த விண்கலம் 5 கட்டங்களாக புவி வட்டப்பாதையில் உயர்த்தப்பட்டு நிலவின் வட்டப்பாதையை சென்று அடையும் எனக் கூறப்பட்டது.
அதன்படி சந்திரயான் – 2 விண்கலம் புவி சுற்றுவட்டப் பாதையிலிருந்து, நிலவின் சுற்றுவட்டப்பாதையை நோக்கி இன்று பயணிக்க தொடங்கியது. இந்தப் பாதை மாற்ற நடவடிக்கையை பெங்களூரு தரைக்கட்டுப்பாட்டு நிலைய விஞ்ஞானிகள் அதிகாலை 2.21 மணியளவில் மேற்கொண்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

சந்திரயான் – 2 விண்கலம் வரும் 20-ம் தேதி நிலவின் சுற்றுவட்டப்பாதைக்கு முற்றிலும் மாறும் என்றும் நிலவின் தரைப்பகுதியில் விண்கலம் வரும் செப்டம்பர் 7-ம் தேதி இறங்க வாய்ப்புள்ளதாகவும் சிவன் தெரிவித்துள்ளார். நிலவின் சுற்றுவட்டப்பாதைக்கு மாறும் முன் சந்திரயான்- 2 பூமியை 5 பாதைகளில் சுற்றிவந்தது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

கூகுள் புதிய ஆண்ட்ராய்டு பெயரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு Q இயங்குதளம் ஆண்ட்ராய்டு 10 என்ற பெயரில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இத்துடன் புதிய இயங்குதளத்துக்கான லோகோவையும் வெளியிட்டது.இதுவரை ஆண்ட்ராய்டு Q…

11 hours ago

கணினியை இப்படி எல்லாம் பயன்படுத்தி இருக்கிறீங்களா?

இன்றைய உலகில் கணினியின் தேவை அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. ஒவ்வொருவரும் கணினியின் பயனை உணர்ந்துக்கொள்வது அவசியமாகிவிட்டது. கணினியைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாதாகிவிட்டது. இன்று கணினியை எளிய முறையில் கையாள…

11 hours ago

RS 13,999 விலையில் அறிமுகமானது MOTOROLA ONE ACTION.

மோட்டோரோலா ஒன் அதிரடி இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த புதிய மோட்டோரோலா தொலைபேசி ஆகஸ்ட் 30 முதல் விற்பனைக்கு வருகிறது. நிறுவனத்தின் மற்ற ஸ்மார்ட்போன்களைப் போலவே,…

11 hours ago

200 ஆண்டுகள் ஏலியனாக வாழ்வேன் : நித்தியானந்தா ! வைரலாகும் வீடியோ !

நித்தியானந்தா என்றாலே எப்போதும், பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. சுவாமி நித்தியானந்தா ஆன்மீகத்தையும் தாண்டி அறிவியல் பூர்வமாகவும், ஐன்டீன்ஸ் விதியை தவறு என்று கூறி உலகத்தையும் திருப்பி போட்டார்.இந்நிலையில்,…

11 hours ago

சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.!

இப்போது வரும் புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் மக்களுக்கு பயன்படும் வகையில் தான் இருக்கிறது, ஆனால் அந்த தொழில்நுட்பத்தை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும், எந்த இடத்தில் பயன்படுத்தக்…

11 hours ago

உணவாக மாறிய டைட்டானிக் கப்பல்! என்ன நடந்தது தெரியுமா?

ஒரு நூற்றாண்டிற்கு முன்னால் கடலுக்குள் மூழ்கிய ஆர்எம்எஸ் டைட்டானிக் கப்பல், அதன் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக ஒரு புதிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.கடலில் உள்ள உப்பு…

11 hours ago