இரத்த போக்கை உடனே நிறுத்தும் “பயோ சிந்தெடிக் க்ளூ”.! விஞ்ஞானிகள் சாதனை.!

விபத்து அல்லது பெரிதும் காயம் அடைந்த நபர்களின் உயிரிழப்பிற்குக் காரணமாக இரத்த போக்கு இருக்கிறது. அதிகப்படியான இரத்தம் வீணாவதினால் பல உயிர்கள் இறக்கிறது என்பதே உண்மை. இதனைச் சரிப்படுத்தச் சீனா விஞ்ஞானிகள் சேர்ந்து புதிய பயோ சிந்தெடிக் க்ளூவை உருவாக்கியுள்ளனர்.

காயம் அல்லது உடலில் எந்த பகுதியில் கிழித்தல் ஏற்பட்டாலும், இரத்த போக்கு உள்ள பகுதியில் இந்த பயோ சிந்தெடிக் க்ளூவை தடவினால் வெறும் 20 வினாடிகளில் இரத்த போக்கை உடனே தடுத்து நிறுத்திவிட முடியும் என்ற விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட க்ளூகளால், உங்கள் உடலில் உள்ள தமனிகள் மற்றும் மூட்டுகளில் ஏற்படும் இரத்த போக்கை மட்டுமே தடுக்க முடியும்.
ஆனால் இதயம் மற்றும் பெருநாடி போன்ற ஈரமான பகுதிகளில், முன்பு கண்டுபிடிக்கப்பட்ட க்ளூக்கள் வேலை செய்யாது. ஆனால் இந்த பயோ சிந்தெடிக் க்ளூ இதயம் போன்ற ஈரமான இடங்கள் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ள இடங்களிலும் சிறப்பாகச் செயல்படுகிறது.

உங்கள் மூட்டுகளில், உங்கள் தசைகள், உங்கள் பற்கள் மற்றும் உங்கள் ஈறுகளுடன் பற்களை இணைக்க பெரும்பாலும் காணப்படும் இந்த திசுக்களின் மூலக்கூறுகளைக் கொண்டு இந்த பயோ சிந்தெடிக் க்ளூ உருவாக்கப்பட்டுள்ளது.

துடிக்கும் இதயத்தில் ஏற்பட்ட 6 மில்லிமீட்டர் விட்டம் கொண்ட உயர் அழுத்த இரத்த போக்கைத் தையல் எதுவும் இன்றி வெறும் 20 வினாடிகளில் பயோ சிந்தெடிக் க்ளூ மூலம் உடனே நிறுத்தப்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை பன்றிகள், மற்றும் விலங்குகள் மீது வெற்றிகரமாகச் இந்த பயோ சிந்தெடிக் க்ளூ சோதனை செய்யப்பட்டுள்ளது. மனிதர்கள் மேல் இன்னும் இந்த பயோ சிந்தெடிக் க்ளூ சோதனை செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

source: gizbot.com

Share

Recent Posts

கூகுள் புதிய ஆண்ட்ராய்டு பெயரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு Q இயங்குதளம் ஆண்ட்ராய்டு 10 என்ற பெயரில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இத்துடன் புதிய இயங்குதளத்துக்கான லோகோவையும் வெளியிட்டது.இதுவரை ஆண்ட்ராய்டு Q…

13 hours ago

கணினியை இப்படி எல்லாம் பயன்படுத்தி இருக்கிறீங்களா?

இன்றைய உலகில் கணினியின் தேவை அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. ஒவ்வொருவரும் கணினியின் பயனை உணர்ந்துக்கொள்வது அவசியமாகிவிட்டது. கணினியைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாதாகிவிட்டது. இன்று கணினியை எளிய முறையில் கையாள…

13 hours ago

RS 13,999 விலையில் அறிமுகமானது MOTOROLA ONE ACTION.

மோட்டோரோலா ஒன் அதிரடி இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த புதிய மோட்டோரோலா தொலைபேசி ஆகஸ்ட் 30 முதல் விற்பனைக்கு வருகிறது. நிறுவனத்தின் மற்ற ஸ்மார்ட்போன்களைப் போலவே,…

13 hours ago

200 ஆண்டுகள் ஏலியனாக வாழ்வேன் : நித்தியானந்தா ! வைரலாகும் வீடியோ !

நித்தியானந்தா என்றாலே எப்போதும், பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. சுவாமி நித்தியானந்தா ஆன்மீகத்தையும் தாண்டி அறிவியல் பூர்வமாகவும், ஐன்டீன்ஸ் விதியை தவறு என்று கூறி உலகத்தையும் திருப்பி போட்டார்.இந்நிலையில்,…

13 hours ago

சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.!

இப்போது வரும் புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் மக்களுக்கு பயன்படும் வகையில் தான் இருக்கிறது, ஆனால் அந்த தொழில்நுட்பத்தை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும், எந்த இடத்தில் பயன்படுத்தக்…

13 hours ago

உணவாக மாறிய டைட்டானிக் கப்பல்! என்ன நடந்தது தெரியுமா?

ஒரு நூற்றாண்டிற்கு முன்னால் கடலுக்குள் மூழ்கிய ஆர்எம்எஸ் டைட்டானிக் கப்பல், அதன் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக ஒரு புதிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.கடலில் உள்ள உப்பு…

13 hours ago