ட்ரூ காலரில் வெளிவரும் புத்தம் புதிய வசதி: என்ன தெரியுமா?

ட்ரூ காலர் செயலியை உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர், என்று தான் கூறவேண்டும், தற்சமயம் இந்த ட்ரூ காலர் செயலியில் வாய்ஸ் கால் செய்யும் சோதனை செய்யப்பட்டு வருகிறது என்றும், விரைவில் இது நடைமுறைக்கு வரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்வீட்ன் நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ட்ரூ காலர் செயலி பயனாளர்களை கவரும் விதமாக புதுப்புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. குறிப்பாக மொபைல் யாருடையது, எங்கிருந்து பேசுகிறார்கள் என்பது பற்றிய

தகவல்களை மிக தெளிவாக கொடுக்கும் என்பதால் அதிக பிரபலமடைந்துள்ளது.

இருந்தபோதிலும் வெறும் வர்த்தக ரீதியாக வெற்றி பெறுவது என்பது சற்று கடினம் என்பதை உணர்ந்த ட்ரூ காலர் நிறுவனம் தற்சமயம் மற்ற செயலிகளுக்கு போட்டியாக பல்வேறு வசதிகளை ட்ரூ காலர் செயலியில் கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

அதன்படி வாய்ஸ் கால் சேவையை விரைவில் கொண்டுவருகிறது ட்ரூ காலர் நிறுவனம். தற்சமயம் ட்ரூ காலர் செயலி பீட்டா வெர்ஷனில் (10.31.6) வாய்ஸ் கால் டெஸ்டிங் நடைபெற்று வருகிறது. இது வெற்றியடைந்த பிறகு, அனைவருக்கும் வாய்ஸ் கால் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து வாட்ஸ்ஆப் போல், ட்ரூ காலர் மூலமாகவும் வாய்ஸ் கால் செய்யலாம், ஆனால் அதற்கு எதிர்முனையில் இருப்பவரும் ட்ரூ காலர் செயலியை வைத்திருக்க வேண்டும். குறிப்பாக வாட்ஸ்ஆப் செயலியை விட மிக அருமையானவசதிகளை கொண்டுவர திட்டமிட்டுள்ளது ட்ரூ காலர் நிறுவனம்.

ஒரு உரையாடல் எப்படி நடந்தது என்பதை பின்னர் யோசித்து பார்ப்பதற்கும், உண்மையாக நடந்த உரையாடலுக்கும் நிச்சயம் சிறு வித்தியாசமாவது இருக்கும். நடந்த உரையாடலை மீண்டும் கேட்டால் ஏற்கனவே செய்த சில தவறுகளை திருத்திக்கொள்ளலாம். சில ஸ்மார்ட்போன்களிலும் மட்டுமே போன் உரையாடல்களை பதிவு செய்யும் வசதி இருக்கும் நிலையில், மற்றவற்றில் மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்தி மட்டுமே நம்மால் உரையாடல்களை பதிவு செய்ய முடியும்.

போன் செய்பவர்களின் விவரங்களை அறிவதற்கு உதவும் பிரபல செயலியான ட்ரூகாலர், சமீபத்தில் அழைப்புகளை ரெக்கார்ட் செய்யும் வசதியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்வசதியை படிப்படியாக அனைவருக்கும் வழங்கிவருகிறது.

துருதிஷ்டவசமாக, இந்தவசதியை பயனர்கள் பயன்படுத்த வேண்டுமெனில் பீரிமியம் மெம்பர்சிப் பெற்றிருக்கவேண்டும். ஆனால் இச்செயலியை 14 நாட்களுக்கு பரிச்சார்த்த முறையில் இலவசமாக பயன்படுத்தலாம். பீரிமியம் மெம்பர்சிப் பெறுவதற்கு மாதகட்டணமாக ரூ49அல்லது ஆண்டு கட்டணமாக ரூ449 செலுத்தவேண்டும். ட்ரூகாலர் செயலியில் அழைப்புகளை பதிவு செய்யும் வசதியை பயன்படுத்த பின்வரும் வழிமுறையை பின்பற்ற வேண்டும்.

உங்களிடம் ஏற்கனவே ட்ரூகாலர் செயலி இல்லையென்றால், டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்துகொள்ளவும். செயலி இருந்தால் லேட்டஸ்ட் வெர்சனுக்கு அப்டேட் செய்யவும்.

ஏற்கனவே இருக்கும் ட்ரூகாலர் ஐடி அல்லது ஐடி இல்லையெனில் புதிய ஐடி உருவாக்கி, செயலியில் உள்நுழையவும்.

ட்ரூகாலர்செயலியின் ஹோம்பேஜ்-க்கு செல்லவும். இடது புறம் உள்ள ‘ஹம்பர்கர்’ மெனுவை கிளிக் செய்து , ‘கால் ரெக்கார்டிங்’ வசதியை கிளிக் செய்யவும்.

நீங்கள் ஏற்கனவே ப்ரிமியம் வெர்சனை பெறவில்லை எனில், ட்ரையல் வெர்சனை துவங்குவதற்கான தேர்வுகளை அங்கு காணமுடியும். அதற்கான விதிமுறைகளை ஒப்புக்கொண்ட பிறகு, அச்செயலி பதிவு செய்வதற்கும், பதிவு செய்தவற்றை உள்ளார்ந்த சேமிப்பில் சேமிக்கவும் அனுமதி அளிக்க வேண்டும்.

மேற்கூறிய அனைத்து படிகளையும் செய்து முடித்த பின்னர், அடுத்த திரையில் உள்ள ‘வ்யூ ரெக்கார்டிங் செட்டிங்ஸ்’ஐ கிளிக் செய்யவும். அங்கு ‘ஆட்டோ’ அல்லது ‘மேனுவல்’என்ற இரு மோட்களில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். ‘ஆட்டோ’ வசதியை பயன்படுத்தினால்,அழைப்புகள் வரும் போது தானாகவே பதிவு செய்யப்படும். ‘மேனுவல்’ வசதியில், ஒவ்வொரு முறை அழைப்பு வரும்போதும் ரெக்கார்ட் செய்யலாமா என உறுதி செய்ய சிறு ஐகான் திரையில் தோன்றும். இம்முறையில் பதிவு செய்ய துவங்கும் போதும், முடிக்கும் போதும் அதற்கேற்ப பொத்தான்களை தெரிவு செய்ய வேண்டும்.

நீங்கள் பதிவு செய்யும் ஒவ்வொரு உரையாடலும் தனித்தனியாக, போனின் உள்ளார்ந்த சேமிப்பில் சேமிக்கப்படும். ஆனால் இவற்றை வெளிப்புற சேமிப்பில் சேமிக்கும் வசதி இல்லை என்பது ஒரு குறையாக உள்ளது. ஆண்ராய்டு 9 பை-ல் அழைப்புகளை ரெக்கார்ட் செய்யும் வசதியை கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளதை நினைவிற்கொள்க. பிக்சல் 2 எக்ஸ்.எல்-ஐ பரிசோதிக்கும் போது இவ்வசதியை பயன்படுத்த முடியாது என்பது கண்டறியப்பட்டது. எனவே நீங்கள் ஆண்ராய்டு பை பயன்படுத்த நேர்ந்தால், கூகுள் இவ்வசதியை அனுமதிக்கும் வரை ட்ரூகாலர் பயன்படுத்தியும் அழைப்புகளை பதிவு செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

source: gizbot.com

Share

Recent Posts

பயங்கரவாதம், ஆப்கன் குறித்து டிரம்ப்-இம்ரான் ஆலோசனை

வாஷிங்டன்:அமெரிக்க அதிபர், டிரம்பை, பாகிஸ்தான் பிரதமர், இம்ரான் கான், நேற்று சந்தித்து பேசினார். அப்போது, ஆப்கன் மற்றும் பயங்கரவாத பிரச்னைகள் பற்றி, இருவரும் தீவிரமாக ஆலோசித்தனர்.பாகிஸ்தான் பிரதமராக…

9 hours ago

பிரிட்டன் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு

லண்டன்:பிரிட்டன் புதிய பிரதமராக, 'கன்சர்வேடிவ்' கட்சியின் மூத்த தலைவர், போரிஸ் ஜான்சன், 55, தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.ஐரோப்பிய நாடான, பிரிட்டனின் பிரதமராக தற்போது பதவி வகிப்பவர், தெரசா…

9 hours ago

சீன, ‘மாஜி’ அதிபர் லீ பெங்க், மரணம்

பீஜிங்: சீனாவின் அதிபராக, 1987 -- 1998ம் ஆண்டு வரை இருந்தவர், லீ பெங்க், 90. இவர், 1998 - 2003ம் ஆண்டு வரை, தேசிய மக்கள்…

9 hours ago

ஹாங்காங் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்: 6 பேர் கைது

ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவுப் போராட்டக்காரர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த 6 பேரை அந்த நகர போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:…

9 hours ago

சீனா: முன்னாள் பிரதமர் லீ பெங் மரணம்

சீன முன்னாள் பிரதமர் லீ பெங், தனது 90-ஆவது வயதில் மரணமடைந்தார். சீனாவின் 4-ஆவது பிரதமரான லீ பெங், அந்தப் பொறுப்பை 1987-ஆம் ஆண்டு முதல், 1998-ஆம்…

9 hours ago

பின்லேடன் இருப்பிடம் ஐஎஸ்ஐ-க்கு தெரியும்: இம்ரான் மறைமுக ஒப்புதல்

அல்-காய்தா தலைவர் பின்லேடனைப் பிடிப்பதில் அமெரிக்காவுக்கு தங்களது உளவு அமைப்பு உதவியதாகக் கூறியதன் மூலம், அவரது இருப்பிடம் குறித்து தங்களுக்கு ஏற்கெனவே தெரியும் என்பதை பாகிஸ்தான் பிரதமர்…

9 hours ago