செல்போன் மூலம் ஆதார் எண்ணை முடக்கும் வசதி வந்தாச்சு.!

ஒருவரின் ஆதார் எண்ணை மற்றொருவர் தவறாக பயன்படுத்துவதை தவிர்க்க புதிய வசதியாக, செல்போன் குறுஞ்செய்தி மற்றும் இணையதளம் வாயிலாக ஆதார் எண்ணை, லாக் மற்றும் அன்லாக் செய்யும் வசதியை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஒருவரின் ஆதார் எண்ணை மற்றொருவர் தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் படி, தனித்துவ அடையாள ஆணைய இணைய பக்கத்தின் வாயிலாகவோ, அல்லது செல்போன் குறுஞ்செய்தி மூலமாகவோ, ஒருவர் தன்னுடைய ஆதார் எண்ணை லாக் செய்யவோ, அன்லாக் செய்யவோ முடியும்.

குறுஞ்செய்தி மூலம் இந்த வசதியைப் பெற 1947 என்ற எண்ணுக்கு GETOTP என்று டைப் செய்து ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்க எண்களை பதிவிட வேண்டும்.
இதை அடுத்து ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு 6 இலக்க ஓடிபி கடவுச்சொல் வந்து சேரும். அது வந்தவுடன், LOCKUID ஸ்பேஸ், ஆதாரின் கடைசி நான்கு இலக்க எண் – ஸ்பேஸ் – 6 இலக்க ஓடிபி கடவுச்சொல்லை டைப் செய்து அனுப்ப வேண்டும்.

அவ்வாறு அனுப்பினால் ஆதார் எண் லாக் ஆகி விடும். அதற்கான தகவலும் செல்போனுக்கு வந்து சேரும். அதேவேளையில், குறுஞ்செய்தி மூலம்,. அன்லாக் செய்ய வேண்டும் என்றால், விர்ச்சுவல் நம்பர் எனப்படும் ஆதார் மெய்நிகர் எண்ணின் கடைசி 6 இலக்க எண்ணை இதே போல் அனுப்ப வேண்டும்.

ஓடிபி வந்தவுடன், UNLOCKUID – ஸ்பேஸ் – மெய்நிகர் எண்ணின் கடைசி 6 இலக்கம்- ஸ்பேஸ் – 6 இலக்க ஓடிபியை டைப் செய்து அனுப்பினால் அன்லாக் ஆகி விடும். www.uidai.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் ஆதார் எண்ணை லாக் செய்யவோ அன்லாக் செய்யவோ முடியும்.அந்த தளத்திற்குள் சென்று மை ஆதாரை கிளிக் செய்தால் ஆதார் சர்வீசஸ் என்று பட்டியல் விரியும்.

அதில் ஆதார் லாக் மற்றும் அன்லாக் என்பதை கிளிக் செய்ய வேண்டும். எது தேவையோ அதை கிளிக் செய்து, தேவையான விவரங்களை பதிவு செய்தாலே, ஆதார் எண்ணை லாக் செய்யவும், அன்லாக் செய்யவும் முடியும்.

source: gizbot.com

Share

Recent Posts

கறுப்பு பணம் பரம ரகசியமாம்… தகவல் சொல்லக் கூடாதாம்

டெல்லி: நாட்டில் எவ்வளவு கறுப்புப் பணப் புழக்கம் எவ்வளவு உள்ளது என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப் பட்ட கேள்விக்கு அது இரு நாடுகளுக்கு…

2 hours ago

இன்றைய (20.05.2019) பெட்ரோல், டீசல் விலை: இன்று அதிரடி மாற்றத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி!!

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை நிர்ணயித்து வந்தது. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டு, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை…

2 hours ago

இன்றைய(மே 20) பெட்ரோல் , டீசல் நேற்றைய விலையை விட அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொருத்து இந்தியாவில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றனர்.இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள…

2 hours ago

பிரச்சினையை டெபாசிட் பண்ணிட்டு வன்முறையை வட்டிக்கு வாங்கும் ட்ரம்ப் – வரி இல்லாத வர்த்தகம்

வாஷிங்டன்: சர்வதேச வர்த்தகத்தில் இந்தியா சீனாவுடன் கடும் மோதல் போக்கை கடைபிடித்து வரும் அமெரிக்க தன் அண்டை நாடுகளான கனடா மற்றும் மெக்ஸிகோ உடன் இணக்கமான போக்கை…

2 hours ago

பங்குச் சந்தையில் திடீர் உற்சாகம்: சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு

பங்குச் சந்தையில் வர்த்தகம் துவங்கிய போது மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.முந்தைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 37…

2 hours ago

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்வு

அந்நியச் செலாவணி சந்தையில் இன்று திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 79 காசுகள் உயர்ந்தது.சீனா-அமெரிக்கா இடையில் ஏற்பட்டுள்ள வர்த்தக நெருக்கடிக்கு பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல தீர்வு…

2 hours ago