அமேசானை தீயாக வருத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்கள்- வைரல்.! காரணம் என்ன தெரியுமா?

கடந்த ஆண்டில் நடைபெற்றது போல், இந்த ஆண்டும் அமேசான் நிறுவனம் மாபெரும் சிக்கலைச் சந்தித்துள்ளது.

இந்தியத் தேசிய கோடி மற்றும் ஹிந்து மதத்தை அவமானம் செய்யும் விதத்தில் பொருட்களைத் தனது தளத்தில் விற்பனை செய்வதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தனது தளத்தில் ஹிந்து மதத்தைக் கொச்சை படுத்தும் விதத்திலும், இந்தியத் தேசிய கோடியை அவமானப் படுத்தும் விதத்திலும் இரண்டு சின்னங்களையும் விற்பனை செய்யப்படுவதாகக் குற்றம் சாற்றப்பட்டு டிவிட்டர் பதிவு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது

டோர் மேட், செருப்பு, காலணிகள், கழிவறை சீட்டர்களில் தேசியக் கொடியின் படம் மற்றும் ஹிந்து மதத்தின் சின்னங்கள் பதிவிடப்பட்டுள்ளது.
இதை வன்மையாகக் கண்டித்து அனைவரும் டிவிட்டரில் அமேசானிற்கு எதிராகக் கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

அமேசானை புறக்கணிக்கிறோம் #boycottamazon என்ற ஹேஷ்டேக் உடன் டிவீட் செய்யப்பட்டுள்ளது. இந்த பதிவை சுமார் ஒரு மணி நேரத்தில் 5,700 நபர்கள் லைக் செய்து ரீடிவீட் செய்துள்ளனர். தற்பொழுது சமூக வலைத்தளம் முழுதும் இந்த பதிவு வைரல் ஆகி வருகிறது.

கடந்த ஆண்டில் மகாத்மா காந்தியின் படம் செருப்பில் பதிவிடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டில் இப்படி ஒரு சிக்கலில் அமேசான் சிக்கியுள்ளது. கடந்த ஆண்டில் இதுபோன்ற ஒரு சர்ச்சையில் ஸ்னாப்டீல் நிறுவனமும் சிக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

source: gizbot.com

Share

Recent Posts

கறுப்பு பணம் பரம ரகசியமாம்… தகவல் சொல்லக் கூடாதாம்

டெல்லி: நாட்டில் எவ்வளவு கறுப்புப் பணப் புழக்கம் எவ்வளவு உள்ளது என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப் பட்ட கேள்விக்கு அது இரு நாடுகளுக்கு…

2 hours ago

இன்றைய (20.05.2019) பெட்ரோல், டீசல் விலை: இன்று அதிரடி மாற்றத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி!!

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை நிர்ணயித்து வந்தது. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டு, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை…

2 hours ago

இன்றைய(மே 20) பெட்ரோல் , டீசல் நேற்றைய விலையை விட அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொருத்து இந்தியாவில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றனர்.இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள…

2 hours ago

பிரச்சினையை டெபாசிட் பண்ணிட்டு வன்முறையை வட்டிக்கு வாங்கும் ட்ரம்ப் – வரி இல்லாத வர்த்தகம்

வாஷிங்டன்: சர்வதேச வர்த்தகத்தில் இந்தியா சீனாவுடன் கடும் மோதல் போக்கை கடைபிடித்து வரும் அமெரிக்க தன் அண்டை நாடுகளான கனடா மற்றும் மெக்ஸிகோ உடன் இணக்கமான போக்கை…

2 hours ago

பங்குச் சந்தையில் திடீர் உற்சாகம்: சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு

பங்குச் சந்தையில் வர்த்தகம் துவங்கிய போது மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.முந்தைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 37…

2 hours ago

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்வு

அந்நியச் செலாவணி சந்தையில் இன்று திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 79 காசுகள் உயர்ந்தது.சீனா-அமெரிக்கா இடையில் ஏற்பட்டுள்ள வர்த்தக நெருக்கடிக்கு பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல தீர்வு…

2 hours ago