பட்ஜெட் விலையில் தெறிக்கவிடும் நோக்கியா ஸ்மார்ட்போன்.!

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. வரும் நாட்களில் ஹெச்.எம்.டி. குளோபல் பல்வேறு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த போன் பட்ஜெட் விலையில் களமிறங்குகின்றது. மேலும், இதில் ஐந்து கேமராக்கள் இருக்கின்றன.

ஐந்து கேமரா கொண்ட நோக்கியா 9, டிஸ்ப்ளேவில் துளை கொண்ட நோக்கியா 8.1 பிளஸ் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகமாகலாம் என கூறப்பட்டு வந்த நிலையில், நோக்கியா 6.2 (2019) ஸ்மார்ட்போனும் அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

நோக்கியா 8.1 பிளஸ் போன்றே நோக்கியா 6.2 ஸ்மார்ட்போனிலும் டிஸ்ப்ளேவினுள் கேமரா வழங்கப்படுகிறது.

நோக்கியா 6.2 (2019) ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர், 4 ஜி.பி., 6 ஜி.பி. ரேம் என இருவித வேரியன்ட்களில் வெளியாக இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 16 எம்.பி. டூயல் பிரைமரி கேமரா, செய்ஸ் லென்ஸ், OZO ஆடியோ வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமாகி அதன்பின் மற்ற நாடுகளில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

ஆண்ட்ராய்டு ஒன் சாதனமாக வெளியாகும் நோக்கியா 6.2 (2019) ஸ்மார்ட்போனின் விவரங்கள் முதல் முறையாக வெளியாகி இருக்கிறது. வெளியீட்டை பொருத்த வரை சீனாவில் இந்த ஸ்மார்ட்போன் இம்மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாத துவக்கத்தில் நடைபெறலாம் என தெரிகிறது.

முன்னதாக ப்ளிப்கார்ட் வலைதளத்தில் நோக்கியா ஸ்மார்ட்போன்கள் விலை குறைக்கப்பட்டு, கூடுதலாக தள்ளுபடி மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டது.

source: gizbot.com

Share

Recent Posts

கறுப்பு பணம் பரம ரகசியமாம்… தகவல் சொல்லக் கூடாதாம்

டெல்லி: நாட்டில் எவ்வளவு கறுப்புப் பணப் புழக்கம் எவ்வளவு உள்ளது என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப் பட்ட கேள்விக்கு அது இரு நாடுகளுக்கு…

2 hours ago

இன்றைய (20.05.2019) பெட்ரோல், டீசல் விலை: இன்று அதிரடி மாற்றத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி!!

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை நிர்ணயித்து வந்தது. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டு, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை…

2 hours ago

இன்றைய(மே 20) பெட்ரோல் , டீசல் நேற்றைய விலையை விட அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொருத்து இந்தியாவில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றனர்.இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள…

2 hours ago

பிரச்சினையை டெபாசிட் பண்ணிட்டு வன்முறையை வட்டிக்கு வாங்கும் ட்ரம்ப் – வரி இல்லாத வர்த்தகம்

வாஷிங்டன்: சர்வதேச வர்த்தகத்தில் இந்தியா சீனாவுடன் கடும் மோதல் போக்கை கடைபிடித்து வரும் அமெரிக்க தன் அண்டை நாடுகளான கனடா மற்றும் மெக்ஸிகோ உடன் இணக்கமான போக்கை…

2 hours ago

பங்குச் சந்தையில் திடீர் உற்சாகம்: சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு

பங்குச் சந்தையில் வர்த்தகம் துவங்கிய போது மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.முந்தைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 37…

2 hours ago

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்வு

அந்நியச் செலாவணி சந்தையில் இன்று திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 79 காசுகள் உயர்ந்தது.சீனா-அமெரிக்கா இடையில் ஏற்பட்டுள்ள வர்த்தக நெருக்கடிக்கு பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல தீர்வு…

2 hours ago