48 MP கேமரா, 4000 mAh பேட்டரி கொண்ட மொபைல் வெறும் ரூ.10,000 ! மிரட்டலாக வருகிறது ரெட்மீ நோட் 7!

இந்திய ஸ்மார்போன் சந்தையில் சியோமி நிறுவனம் தான் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், 48 MP கேமரா- 4000 mAh பேட்டரி கொண்ட ஒரு புதிய ஸ்மார்ட்போனை சியோமி நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது.

சீன நிறுவனமான சியோமியின் கீழ் தயாராகும் முதல் ரெட்மீ ஸ்மார்ட்போன் ரெட்மீ நோட் 7 ஆகும். இந்த போன் அண்மையில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன் விரைவில் இந்தியாவில் வெளியாகும் என தகவல் வந்துள்ளது.

இந்த போனின் சிறப்பு அம்சங்கள் பற்றி தற்போது பார்க்கலாம்.

விலை : சீனாவில் வெளியிடப்பட்ட இந்த போனை இந்திய விலையில் ஒப்பிடும் போது ரெட்மீ நோட் 7 -னின் விலை ( 3 ஜிபி ரேம் 32 ஜிபி மெமரி) ரூ.10,500 க்குள் இருக்கும்.

இந்த போன்ற 3 வேரியண்ட்டில் வெளியாகிறது.

3 ஜிபி ரேம் 32 ஜிபி மெமரி : ரூ.10 ,500 (தோரயமாக)4 ஜிபி ரேம் 64 ஜிபி மெமரி : ரூ.12,500 (தோரயமாக)6 ஜிபி ரேம் 64 ஜிபி மெமரி : ரூ.14,500 (தோரயமாக)சீனாவில் வருகிற 15 தேதி முதல் விற்பனைக்கு வர இருக்கிறது.

நிறங்கள் : ட்வைலைட் கோல்டு, ஃவான்டசி கோல்டு, பிரையிட் பிளாக் உள்ளிட்ட 3 நிறங்களில் வெளியாகும்.

மென்பொருள் : அண்ட்ராய்டு ஓரியோ

டிஸ்பிளே : 6.3 இஞ்ச் கொண்ட டிஸ்பிளேவையும் கொண்டிருக்கும்.

பிரசாசர் : Qualcomm Snapdragon 660 MSM8956 கேமரா : பின்புறமாக 48 மெகா பிக்சல் + 5 மெகா பிக்சல் கேமரா; முன்புறமாக 13 மெகா பிக்சல் கொண்ட கேமரா.

பேட்டரி : 4,000mAh பேட்டரி. இதனால் சுமார் 7 மணி நேரம் வரை கேமிங்கிற்கு பயன்படுத்த முடியும். மேலும் வேகமாக சார்ஜை ஏற்றிக்கொள்ளும் வசதி இருப்பதால் இந்த ஸ்மார்ட் போனுக்கு அதிகபடியான வரவேற்பு கிடைத்துள்ளது.

கூடிய விரைவில் இந்தியாவில் இந்த போன் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Recent Posts

ஹிப்ஹாப் ஆதியின் நட்பே துணை படத்தின் ரிலீஸ் தேதி வெளியிட்ட படக்குழு

பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் `நட்பே துணை'. ஹாக்கி விளையாட்டு மற்றும் நட்பை மையப்படுத்திய இந்த படத்தில் ஆதி ஜோடியாக…

2 hours ago

படப்பிடிப்பில் இயக்குனருடன் பிரபல நடிகை மோதல்

தமிழில் பாயும் புலி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம், சத்ரியன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா தத்தா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார்.தற்போது…

2 hours ago

காஷ்மீரில் அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி

ஜம்மு:ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த பிப்ரவரி மாதம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவ படையினர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு சென்று தீவிரவாத முகாம்கள்…

2 hours ago

கன்னியாகுமரி தொகுதியில் கோடீஸ்வர வேட்பாளர்களுக்கு இடையே போட்டியா?

கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ், பாஜக மற்றும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களின் சொத்து பட்டியல் அடிப்படையில் பார்த்தால் அங்கு கோடீஸ்வர வேட்பாளர்களுக்கு இடையிலான போட்டி போல் காட்சியளிக்கிறது.17-ஆவது…

2 hours ago

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும்; அமைச்சர் அருண் ஜெட்லி உறுதி!

2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் மாற்றத்தை கொண்டுவருபவர் மோடி தான் எனவும், வரும் தேர்தலில் பாஜக வெற்றிப் பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என மத்திய நிதி…

2 hours ago

Exclusive Interview: மோடி அலை குறித்து மே 23 அன்று தெரியும் -அருண் ஜேட்லி

மத்திய அமைச்சர் நிதி மந்திரி அருண் ஜெட்லியிடம் ஜி நியூஸ் பத்திரிகை தலைமை ஆசிரியர் சுதிர் சௌத்ரி நேர்காணலை மேற்க்கொண்டார். அப்பொழுது அவர் வரும் மக்களவை தேர்தலைக்…

2 hours ago