ஹானர் பேண்ட் 4 – இந்தியாவின் மிகச்சிறந்த பட்ஜெட் ஃபிட்னெஸ் ட்ராக்கர்

இந்திய தொழில்நுட்ப சந்தையில், பட்ஜெட் ஃபிட்னெஸ் ட்ராக்கருக்கான தேவை மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. உலகளாவிய தகவல் நிர்ணய ஆணயமான IDC- ன் அறிக்கைப்படி கடந்த 2018 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் 102,௦௦௦ ஃபிட்னெஸ் ட்ராக்கர்கள் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் இளைய தலைமுறை மக்களிடையே உடல் நலம் குறித்த அக்கறை பெருகி வருவதே இதற்கு முக்கிய காரணமாகும். இந்தியாவில், ஃபிட்னெஸ் ட்ராக்கர் சந்தையில் சியோமி நிறுவனம் 41% பங்குகளுடன் முன்னிலை வகுக்கிறது.

அதற்கு அடுத்த படியாக முறையே GOQii, டைட்டன், சாம்சங் மற்றும் ஃபாசில் நிறுவனங்கள் உள்ளன. இவற்றுள் நாம் இன்று முக்கியமாக பார்க்கவிருப்பது ஹானர் பேண்ட் 4.

ஹானர் பேண்ட் 4, இந்திய சந்தையில் தற்பொழுதுதான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
2500 ரூபாயில், மிகச்சிறந்த அம்சங்களுடன் மலிவு விலை பயனாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேண்ட் ஆனது தற்போது வெளியாகி இருக்கும் சியோமி பேண்ட் 3-ன் போட்டியாளராக பார்க்கப்படுகிறது.

ஹானர் பேண்ட் 4 , கருப்பு, நீலம் மற்றும் பிங்க் போன்ற மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. சியோமி பேண்ட் உடன் ஒப்பிடுகையில் இது சற்றே வித்தியாசனமதாக உள்ளது. ஹானர் பேண்ட் அணைத்து விதமான உடைகளுக்கும் பொருத்தமாக உள்ளது. இதில் உள்ள

ஒரு குறை என்னவென்றால், ஹானர் பேண்ட் 4 ஆனது சிலிக்கான் வாருடன் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளது. நம்மால் இதன் வாரை(ஸ்ட்ராப்) மாற்ற முடியாது. அதே சமயம் சியோமி வகை பேண்ட்களில் நம்மால் மாற்றிக்கொள்ள முடியும். வெவ்வேறு வண்ணம்

மற்றும் வடிவங்களில் சியோமிக்கான வார்கள் அமேசான் போன்ற இணையதள சந்தைகளில் கிடைக்கின்றன.

சியோமி பேண்ட் 3 மற்றும் ஹானர் பேண்ட் 4 என்ற இரண்டுமே சிலிகானால் செய்யப்பட்ட வார்களை கொண்டுள்ளது. இந்த சிலிக்கான் வார் சிறந்த தரமிக்க மூலப்பொருட்களால், தோலுக்கு எந்த பாதிப்பும் உருவாக்கா வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும்

சியோமி பேண்ட்-ன் வார் சற்று உயர்ந்த தரத்துடன் உள்ளது. சியோமி நிறுவனம் தனது பேண்ட்-ஐ கையில் கட்டுவதற்கு பழைய பட்டன்-லாக் பொறியமைப்பு முறையை உபயோகப்படுத்தியுள்ளது, அதேசமயம் ஹானர் பக்கள்-லாக் பொறியமைப்பு முறையை

உபயோகப்படுத்தியுள்ளது. இது சியோமியின் பொறியமைப்புடன் ஒப்பிடும்போது நல்ல பிடிமானத்துடன் உறுதியாக இருக்கவல்லது

முக்கியமாக, ஹானர் பேண்ட் 4 ஆனது 5 ATM மதிப்பீடுடன் வருகிறது. அதாவது, இதனை கட்டிக்கொண்டு தண்ணீரில் நம்மால் 50 மீட்டர் ஆழம் வரை செல்ல முடியும். சியோமி நிறுவன பேண்டும் இதே தர நிர்ணயத்துடன் வருகிறது.

சியோமி மற்றும் ஹானர் பேண்டகளுக்கிடையில், திரையின் வடிவமைப்பானது முக்கியமான தீர்மானிக்கும் காரணியாக உள்ளது. சியோமி நிறுவனம் தனது பேண்ட்-ல் ௦.78 இன்ச் கருப்பு மற்றும் வெள்ளை நிற OLED திரையினை கொண்டுள்ளது. திரையுடன் தொடர்பு

கொள்ள ஒரு கெபாசிட்டிவ் டச் பொத்தான் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஹானர் பேண்ட் 4 -ல், முழுவதும் வண்ணமயமான, 204 * 120 பிக்சல் ரெசொலூஷனில் ௦.95 இன்ச் அமோல்ட்(AMOLED) தொடுதிரை கொடுக்கப்பட்டுள்ளது. தொடுதிரை மற்றும் வண்ணமயமான

திரை உங்கள் தேர்வாக இருந்தால், ஹானர் பேண்ட் உங்களுக்கு மிகவும் பொருத்தமான ஒன்றாக இருக்கும்.

ஹானர் பேண்ட்-ன் வண்ணமயமான தொடுதிரையில் நம்மால் நேரம், தேதி, வானிலை நிலவரம், ப்ளூடூத் நிலவரம் மற்றும் உடற்பயிற்சியால் எரித்த கலோரி அளவு போன்றவற்றை தெளிவாக காண முடியும். அது மட்டுமில்லாமல் மூன்று வெவ்வேறு வடிவங்களில்

நேரம் கட்டியை, நாம் நீண்ட நேரம் திரையில் அழுத்துவதன் மூலம் தெரிவு செய்து கொள்ளலாம். திரையின்மேலும் கீழும் தேய்ப்பதன் மூலம் நம்மால், இதய துடிப்பு, தூங்கிய நேரம், அமைப்பு மற்றும் பல முக்கிய தகவல்களை காண முடியும். நம் கையடக்க பேசியில்

வரும் வாட்ஸாப், பேஸ்புக் மற்றும் குறுந்தகவல் அறிவிப்புகளை நம்மால் ஹானர் பேண்ட்-ல் காண முடிந்தாலும், தவற விட்ட அழைப்புகளுக்கான அறிவிப்பு வராமல் இருப்பது ஒரு முக்கியமான குறையாகும். அதேசமயத்தில் நமக்கு வரும் அழைப்புகளை ஹானர் பேண்ட்-ல் இருந்து ஏற்கவோ, நிராகரிக்கவோ முடியும். மற்ற ஃபிட்னெஸ் ட்ராக்கர்களை போலவே ஹானர் பேண்டிலும், நம்மால் நடந்த தூரம், தூக்கத்தின் தரம், இதய துடிப்பு, ஓட்டம், நடை பயற்சி மற்றும் நீச்சல் போன்ற பல உடற்பயிற்சிகளை கண்காணித்துக்கொள்ள முடியும். இவை அனைத்தையும் நாம் ஒர்கவுட்(workout) என்ற ஆப்ஷனில் பார்க்க முடியும்.

மற்ற ஃபிட்னெஸ் ட்ராகர்களுடன் ஒப்பிடுகையில், ஹானர் பேண்ட் சிறந்த முறையில் நம் தூக்கத்தின் தரத்தை கணிக்கிறது. தில் ஹுவாய் நிறுவனத்தின் ட்ருஸ்லீப் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆழ்ந்த உறக்கம், லேசான உறக்கம் போன்றவற்றை

கண்காணிப்பதுடன் துரித கண்ணசைவு தூக்கம் (REM), தூங்கிய நேரம், மூச்சுவிடுதலின் தரம் போன்ற மற்ற அம்சங்களையும் ஹானர் பேண்ட் 4 கண்காணிக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த தகவல்களை பயன்படுத்தி, கிட்டதட்ட 200 -கும் அதிகப்படியான பரிந்துரைகளை சிறந்த தூக்கத்திற்காக தருகிறது. இந்த பயன்பாட்டில் சியோமி பேண்ட் மிகவும் பின்தங்கியுள்ளது.

ஹானர் பேண்ட், நாள் முழுவதும் நம் இதய துடிப்பை எந்தவொரு இடையாறு இல்லாமல் கண்காணிக்கவல்லது. இந்த சிறப்பம்சத்தின் மூலம், பயனாளிக்கு ஏதெனும் இதய சம்பத்தப்பட்ட பிரச்சனைகள் தென்பட்டால், உடனே ஹானர் பேண்ட் எச்சரிக்கை செய்தி

அனுப்பிவிடும். இவற்றுடன் ஹானர் பேண்ட்-ல் உள்ள 6 அச்சு சென்சார் உதவியுடன், நம்மால் நீச்சல் பயிற்சியின் தரத்தையும் சிறந்த முறையில் கண்காணிக்க முடியும்.

ஹானர் பேண்ட் 4 -ல் 100mAh பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ச்சியன இதய துடிப்பு மற்றும் தூக்க கண்காணிப்பை முடக்குவதன் மூலம், இது இரண்டு வாரங்களுக்கு நீடித்து இருக்கக்கூடியது. அந்த இரண்டு அம்சங்களை செயல்படுத்தினால் 4 முதல் 5

நாட்களுக்கு பேட்டரி நெடிக்கும். இது சியோமி பேண்ட் உடன் ஒப்பிடுகையில் சிறிது குறைவாகும்.

எதனை வாங்கலாம்?2500 ரூபாய் மதிப்பில் ஹானர் பேண்ட் சிறப்பான அம்சங்களை வழங்குகிறது. இருப்பினும், மலிவு விலை, நீடித்த பேட்டரி மற்றும் வண்ணமயமான வார்கள் உங்கள் தேர்வாக இருந்தால் சியோமி பேண்ட் 3 உங்களுக்கு சரியானதாக இருக்கும்.

வண்ணமயமான தொடுதிரை, சிறந்த தூக்க கண்காணிப்பு, நீச்சல் பயற்சி கண்காணிப்பு மற்றும் பல ஃபிட்னெஸ் ட்ராக்கர்க்கு உண்டான சிறப்பம்சங்களுக்காக ஹானர் பேண்ட்- ஐ தெரிவு செய்யலாம்.

source: gizbot.com

Share

Recent Posts

பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு வைத்த ஆசிரியை ‘போக்சோ’ சட்டத்தில் கைது

ஆரணி:ஆரணியை அடுத்த பையூர் காலனி பகுதியை சேர்ந்தவர் உமேஷ்குமார் (வயது 45), ஆசிரியர். இவரது மனைவி நித்யா (30). வேலூர் மாவட்டம் மாமண்டூர் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக…

25 mins ago

குடியாத்தம் அருகே பிளாஸ்டிக் கிடங்கில் தீ விபத்து

குடியாத்தம்: குடியாத்தம் அருகே பழைய பிளாஸ்டிக் பொருள்கள் சேமித்து வைக்கும் கிடங்கில் ஏற்பட்ட திடீா் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருள்கள் எரிந்து…

25 mins ago

கிளி ஜோசியத்தை நம்பி நான் அரசியல் செய்யவில்லை- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

சென்னை:தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகளும் புதுச்சேரி தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. தமிழ்நாடு…

25 mins ago

அ.தி.மு.க. சிறைக்கு செல்வதை தவிர்க்கவே பா.ஜ.க.வுடன் கூட்டணி- ஸ்டாலின் குற்றச்சாட்டு

அரூர்:அரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கிருஷ்ணகுமாருக்கு ஆதரவாக அரூரில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது, அமித்ஷாவிடம் அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமி அடகு…

25 mins ago

ஈரோடு தொகுயில் உதய சூரியன் சின்னம்… பணிந்தது ம.தி.மு.க

திமுக கூட்டணியில் மதிமுக ஈரோடு தொகுதியில் போட்டியிடுகிறது. அந்த கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கையில் மதிமுக தனி சின்னத்தில் நிற்கும் என்று அறிவித்தார்.ஆனால்…

25 mins ago

திருப்பூர் தொகுதியில் 27-ந்தேதி பிரசாரத்தை தொடங்குகிறார் பிரேமலதா

சென்னை:அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க. 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து கடந்த காலங்களில் விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் செய்தார். தற்போது உடல் நலம்…

25 mins ago