டேட்டா, இலவச கால் பிரமாண்டத்தை தொடர்ந்து நமது பொங்கல் விழாவிலும் சாதனப்படைத்த ஜியோ.!

ஜியோ நிறுவனம் இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது என்று தான் கூறவேண்டும், குறிப்பாக இந்நிறுவனம் குறைந்த விலையில் சிறந்த கால் அழைப்பு வசதிகள் மற்றும் டேட்டா நன்மைகளை வழங்கிவருகிறது. பின்பு இந்த ஆண்டு பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்ய தயார் நிலையில் உள்ளது ஜியோ நிறுவனம்.

மேலும் தமிழர்களின் திருவிழாவான பொங்கல் பண்டிகை வருகிற 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது,பின்பு பண்டிகைக்காக மக்கள் அனைவரும் அவரவர் சொந்த ஊர்களுக்குச் சென்று பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடரந்து நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே கே.எஸ்.
ஆர் கல்லூரியில் மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து பொங்கல் வைத்து சாதனை படைக்க திட்டமிட்டனர், இதில் ஜியோ நிறுவனமும் இணைந்து மாணவிகள் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியை உலக சாதனைக் கொண்டு சென்றது.

இந்நிகழ்ச்சி நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது, குறிப்பாக இந்த யூனிக் உலக சாதனை நிகழ்ச்சியை திருச்செங்கோடு காவல்துறை துணை கண்காணிப்பாளர் சண்முகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சம் என்னவென்றால், மாணவர்கள் ஒரே நேரத்தில் ஜியோ லோகோ வடிவில் நின்று விறகு அடுப்பில் பொங்கல் வைத்தனர். பின்பு பொங்கல் நிகழ்ச்சியை யூனிக் உலக சாதனை தலைமை தீர்ப்பாளர் ரஹீமான் கண்காணித்தார்.

மேலும் இந்த யூனிக் உலக சாதனைக்காக 1800 மாணவிகள் ஒரே நேரத்தில் ஜியோ லோகோ வடிவில் நின்று அனைவரும் சேர்ந்து மொத்தம் 450 கிலோ பொங்கல் வைத்து உலக சாதனை படைத்ததாக ரஹீமான் என்பர் தெரிவித்தார். பின்பு இந்த உலக சாதனைக்காக சான்றிதழ் வழங்கப்பட்டது.

source: gizbot.com

Share

Recent Posts

ஹிப்ஹாப் ஆதியின் நட்பே துணை படத்தின் ரிலீஸ் தேதி வெளியிட்ட படக்குழு

பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் `நட்பே துணை'. ஹாக்கி விளையாட்டு மற்றும் நட்பை மையப்படுத்திய இந்த படத்தில் ஆதி ஜோடியாக…

2 hours ago

படப்பிடிப்பில் இயக்குனருடன் பிரபல நடிகை மோதல்

தமிழில் பாயும் புலி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம், சத்ரியன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா தத்தா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார்.தற்போது…

2 hours ago

காஷ்மீரில் அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி

ஜம்மு:ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த பிப்ரவரி மாதம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவ படையினர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு சென்று தீவிரவாத முகாம்கள்…

2 hours ago

கன்னியாகுமரி தொகுதியில் கோடீஸ்வர வேட்பாளர்களுக்கு இடையே போட்டியா?

கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ், பாஜக மற்றும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களின் சொத்து பட்டியல் அடிப்படையில் பார்த்தால் அங்கு கோடீஸ்வர வேட்பாளர்களுக்கு இடையிலான போட்டி போல் காட்சியளிக்கிறது.17-ஆவது…

2 hours ago

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும்; அமைச்சர் அருண் ஜெட்லி உறுதி!

2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் மாற்றத்தை கொண்டுவருபவர் மோடி தான் எனவும், வரும் தேர்தலில் பாஜக வெற்றிப் பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என மத்திய நிதி…

2 hours ago

Exclusive Interview: மோடி அலை குறித்து மே 23 அன்று தெரியும் -அருண் ஜேட்லி

மத்திய அமைச்சர் நிதி மந்திரி அருண் ஜெட்லியிடம் ஜி நியூஸ் பத்திரிகை தலைமை ஆசிரியர் சுதிர் சௌத்ரி நேர்காணலை மேற்க்கொண்டார். அப்பொழுது அவர் வரும் மக்களவை தேர்தலைக்…

2 hours ago