பேட்ட [2019] “Get Rajinified”

வி டுதி காப்பாளராக வரும் ரஜினி அங்கே உள்ள ஒரு மாணவனின் காதல் பிரச்சனைக்கு உதவுகிறார். அந்தப் பையனை கொல்ல பலர் முயற்சிக்க, எதனால் கொல்ல முயற்சிக்கிறார்கள், அதன் பின்னணி என்ன? ரஜினியின் பின்னணி என்ன? என்பது தான் கதை.

கார்த்திக் ஒரு முடிவோட தான் படம் எடுத்து இருப்பார் போல. பழைய ரஜினியை கொண்டே வந்தே ஆகணும் என்று முடிவு செய்து அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார்.

படம் முழுக்க ரசிகர்கள் கொண்டாடும் ரஜினியாக உலவ விட்டு இருக்கிறார். இந்தத் தலைமுறை ரசிகர்களுக்கு இது போல ஒரு ரஜினியை திரையில் காண ஒரு வாய்ப்பு.

நக்கல், கோபம், கிண்டல், மாஸ், ஆக்ரோஷம், ஸ்டைல் என்று அனைத்தையும் இதில் கண்டுகளிக்கலாம்.
இது மாதிரி பார்த்து எவ்வளோ வருடங்கள் ஆகி விட்டது.

த்ரிஷாக்குக் காட்சிகள் குறைவு என்று முன்பே தெரியும் என்றாலும், சிம்ரனுக்கும் குறைவு.

இப்படத்தில் சிம்ரன் தேவையே இல்லை. அடுத்தப் படத்திலையாவது சிம்ரன் படம் முழுக்க வரும்படி யாராவது எடுங்கப்பா! இருவர் பொருத்தம் அவ்வளவு அசத்தல்.

இடைவேளை சண்டை காட்சிகள் எல்லாம் பட்டாசா இருக்கு, ரஜினி எப்படி Nunchaku செய்தார்? எனக்கு புரியலை! செமையா சுத்துறாரு. என்னால இப்பவரை நம்ப முடியல!!

மிகப்பெரிய நடிகனான நவாஸுதீன் சித்திக்கை வைத்துக்கொண்டு எப்படியெல்லாம் அசத்தி இருக்கலாம் ஆனால், அவரை டம்மியாகக் காட்டியது ஏனோ?

படத்துக்குக் கெத்து தருவதும், நாயகனை ஒரு படி மேலே தூக்கி வைப்பதும் வில்லனோட முக்கியத்துவம் தான். மிகப்பெரிய வாய்ப்பை கார்த்திக் தவறவிட்டுள்ளார்.

“உல்லாலா” பாடலில் ரஜினி ஆடுவது.. ப்ப்பா! எப்படிங்க இந்த வயசுல இது எல்லாம் சாத்தியம்! நான் மிகைப்படுத்தி கூறவில்லை, படம் பார்த்தால் நீங்களே இப்படித்தான் நினைப்பீங்க.

கலக்கலான ஆட்டம். ரொம்ப ரசித்துப் பார்த்தேன் 🙂 .

விஜய்சேதுபதிக்கு இதில் முக்கியமான வேடம் ஆனால், கெத்தான வேடம் என்று சொல்ல முடியாது. இன்னும் சிறப்பா பயன்படுத்தி இருக்கலாம். சசிகுமாருக்கும் சொல்லிக்கொள்ளும்படி காட்சிகள் இல்லை, வந்து போகிறார் அவ்வளவே.

இரண்டாம் பாதியில் உத்திரபிரதேச காட்சிகள் வருகிறது அதோடு இந்தி வசனங்களும். சப் டைட்டில் கூட இல்லை, சில காட்சிகள் என்ன பேசுறாங்க என்றே புரியலை.

மாஸ் காட்சிகள் ரஜினி செய்தால் மட்டுமே ரசிக்கும்படி உள்ளது. மற்றவர்கள் செய்தால் மிகை நடிப்பாகவோ எரிச்சல் வரும்படியோ உள்ளது தான் ரஜினிக்கு கிடைத்த வரம்.

படத்துக்கு அழகு சேர்ப்பது சந்தேகத்துக்கு இடமில்லாமல், திரு ஒளிப்பதிவு. மலைப்பிரதேச பகுதி என்பதால், புகையை விட்டுக் கடுப்படிக்காமல் இயல்பான பனி மூட்டத்தோட எடுத்து இருக்கிறார்கள். அதோட காட்சிகள் பளிச்சுன்னு இருக்கு.

பாடல்கள் எல்லாம் ஏற்கனவே பெரிய வெற்றி. பின்னணி இசையையும் அனிருத் சரியான இடத்தில் நுழைத்து ரசிக்க வைத்து இருக்கிறார்.

படம் துவக்கத்திலேயே Goosebump கொடுத்து விட்டார். உங்களுக்கு ஆகுதா பாருங்க 🙂 .

பாபி சிம்ஹா, முனீஸ்காந்த், இயக்குநர் மகேந்திரன் சார் போன்றவர்களுக்கு குறைவான காட்சிகளே! ஆனால், மனதில் நிற்கும் காட்சிகள்.

ஆடுகளம் நரேன் வீட்டில் சென்று ரஜினி அலப்பறை செய்வதெல்லாம், அக்மார்க் ரஜினி நடிப்பு. இதையெல்லாம் தான் எல்லோரும் தவறவிட்டு இருந்தார்கள், இதோடு சில வசனங்களும்.

ஜிகர்தண்டா போலப் பலமான கதாப்பாத்திரங்கள், காட்சியமைப்புகள் இல்லை, இரண்டாம் பாதி காட்சிகளை குறைக்கலாம், லாஜிக் இடறல்கள் போன்ற குறைகள் இருந்தாலும், சுவாரசியமான திருப்பங்களும், காட்சிகளும், ரஜினியுமே படம் ரசிக்கப்பட காரணங்கள்.

பேட்டயை படமாக பார்க்காமல் ஒரு கொண்டாட்டமாகத் தான் பார்க்கிறார்கள். அப்படியென்ன படத்தில் இருக்கு?! என்று குழம்புவர்களுக்கு இது தான் பதிலாக எனக்குத் தோன்றுகிறது 🙂 .

கொசுறு 1

பேட்ட கதையை விட நான் படம் பார்த்தது பெரிய கதை. அடேய் ரோகிணி! உன்னால FDFS பார்க்க முடியலடா! 22 வருடங்களாக கொண்டாடியதை பேட்டக்கு காலி பண்ணிட்டான் 🙁 .

மாலை 4 மணிக்கு தான் போக முடிந்தது. அதுவும் நண்பர்கள் யாரும் இல்லாமல், தனியாளாக.

பேட்ட படத்தை எப்படி ரணகளமாகப் பார்த்து இருக்க வேண்டியது ஆனால், கையில் குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் கொடுத்த மாதிரி உட்கார வைத்துட்டான்.

இவனை மறக்கவே மாட்டேன். இனி ரோகிணி திரையரங்கம் பக்கமே போக மாட்டேன்.

என்னுடைய தளத்துக்குப் புதிது, ரஜினி பட FDFS கட்டுரையை இதுவரை நீங்கள் படித்தது இல்லையென்றால், இதைப் படித்துப் பாருங்கள், சுவாரசியமாக இருக்கும் 😀 .

கொசுறு 2

Copyright பிரச்னை என்று கூறி என்னுடைய Blog FB Page ல் மூன்று நாட்களுக்கு ஃபேஸ்புக் தடை போட்டு விட்டது. எனவே, இதை என்னுடைய page ல் பகிர முடியாது. ஒன்றையும் காணோமே என்று நினைத்தவர்களுக்கான விளக்கம்.

Share

Recent Posts

ஹிப்ஹாப் ஆதியின் நட்பே துணை படத்தின் ரிலீஸ் தேதி வெளியிட்ட படக்குழு

பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் `நட்பே துணை'. ஹாக்கி விளையாட்டு மற்றும் நட்பை மையப்படுத்திய இந்த படத்தில் ஆதி ஜோடியாக…

2 hours ago

படப்பிடிப்பில் இயக்குனருடன் பிரபல நடிகை மோதல்

தமிழில் பாயும் புலி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம், சத்ரியன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா தத்தா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார்.தற்போது…

2 hours ago

காஷ்மீரில் அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி

ஜம்மு:ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த பிப்ரவரி மாதம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவ படையினர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு சென்று தீவிரவாத முகாம்கள்…

2 hours ago

கன்னியாகுமரி தொகுதியில் கோடீஸ்வர வேட்பாளர்களுக்கு இடையே போட்டியா?

கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ், பாஜக மற்றும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களின் சொத்து பட்டியல் அடிப்படையில் பார்த்தால் அங்கு கோடீஸ்வர வேட்பாளர்களுக்கு இடையிலான போட்டி போல் காட்சியளிக்கிறது.17-ஆவது…

2 hours ago

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும்; அமைச்சர் அருண் ஜெட்லி உறுதி!

2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் மாற்றத்தை கொண்டுவருபவர் மோடி தான் எனவும், வரும் தேர்தலில் பாஜக வெற்றிப் பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என மத்திய நிதி…

2 hours ago

Exclusive Interview: மோடி அலை குறித்து மே 23 அன்று தெரியும் -அருண் ஜேட்லி

மத்திய அமைச்சர் நிதி மந்திரி அருண் ஜெட்லியிடம் ஜி நியூஸ் பத்திரிகை தலைமை ஆசிரியர் சுதிர் சௌத்ரி நேர்காணலை மேற்க்கொண்டார். அப்பொழுது அவர் வரும் மக்களவை தேர்தலைக்…

2 hours ago