Xiaomi Mi TV இரண்டு புதிய வகை ஸ்மார்ட்டிவி அறிமுகம் செய்துள்ளது.

முக்கிய செய்தி

சியோமி நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்களை அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து அந்நிறுவனம் Mi எல்.இ.டி. டி.வி. 4X ப்ரோ 55 இன்ச் மற்றும் Mi எல்.இ.டி. டி.வி. 4ஏ ப்ரோ 43 இன்ச் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

சியோமி Mi LED டி.வி. 4X ப்ரோ 55 இன்ச்:

சியோமி Mi எல்.இ.டி.
டி.வி. 4X ப்ரோ 55 இன்ச் மாடலில் 55-இன்ச் 4K UHD HDR 10-பிட், 4840×2160 பிக்சல் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இந்த டி.வி.யில் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ARM கார்டெக்ஸ் A 53 பிராசஸர் மற்றும் மாலி 450 GPU வழங்கப்பட்டுள்ளது.

அழகிய வடிவமைப்பு மற்றும் தலைசிறந்த UI . கொண்டிருக்கும் Mi LED டி.வி. 4X ப்ரோ 55 இன்ச் மாடலில் சிறப்பான அனுபவம் கிடைக்கும். மெட்டாலிக் கிரே வடிவமைப்பு கொண்டிருப்பதால் டி.வி. பார்க்க பிரீமியம் தோற்றத்தில் 11 எம்.எம். அளவில் மெல்லிய பெசல்களை கொண்டிருக்கிறது.

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த டி.வி. ஓ.எஸ். மற்றும் பேட்ச் வால் ஓ.எஸ். கொண்டு இயங்குகிறது. டைனமிக் பேக்கிரவுண்டு மற்றும் ஸ்கிரீன் ஆஃப் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இன்பில்ட் பிளே ஸ்டோர், க்ரோம்காஸ்ட் மற்றும் யூடியூப் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளது .

ஆடியோ அனுபவத்தை பொருத்தவைர லாஸ்லெஸ் FLAC ஆடியோ ஃபார்மேட் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 12 பட்டன்களை கொண்ட Mi ரிமோட் மற்றும் ப்ளூடுத், பிரத்யேக வாய்ஸ் பட்டன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதை கொண்டு டி.வி. மற்றும் செட் டாப் பாக்ஸ்களில் சேனல்களை மாற்றிக் கொள்ளலாம்

சியோமி Mi LED டி.வி. 4ஏ ப்ரோ 43 இன்ச்:

இந்த டி.வி.யில் ஃபிளாக்‌ஷிப் குவாட்-கோர் 64 பிட் அம்லாஜிக் சிப்செட், 1 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. 3 HDMI போர்ட்கள், 3 யு.எஸ்.பி. போர்ட், ஏ/வி, வைபை, ஈத்தர்நெட் மற்றும் பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. சக்திவாய்ந்த 20 வாட் ஸ்பீக்கர்கள் மற்றும் DTS கோடெக் வசதி கொண்டிருக்கிறது. 55 இன்ச் மாடலை போன்று இந்த டி.வி.யிலும் இன்பில்ட் பிளே ஸ்டோர், க்ரோம்காஸ்ட் மற்றும் யூடியூப் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன.

விலை மற்றும் விற்பனை:

சியோமி Mi எல்.இ.டி. டி.வி. 4X ப்ரோ 55 இன்ச் மாடலின் விலை இந்தியாவில் ரூ.39,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் அறிமுகமான Mi எல்.இ.டி. டி.வி. 4ஏ ப்ரோ 43 இன்ச் மாடலின் விலை ரூ.22,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் ஜனவரி 15 ஆம் தேதி மதியம் 12.00 மணிக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Share

Recent Posts

மும்மொழி கொள்கை கட்டுரை போட்டி

சென்னை: மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை குறித்து, பள்ளி, கல்லுாரி மாணவ, - மாணவியருக்கு, தனியார் தொண்டு நிறுவனம் சார்பில், கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டு உள்ளது.&'பள்ளிகளில், மும்மொழிக்…

6 hours ago

கலை கல்லூரிகள் திறப்பு: ராகிங் தடுக்கப்படுமா?

சென்னை: கோடை விடுமுறை முடிந்து, நாளை மறுநாள், கலை, அறிவியல் கல்லுாரிகள் திறக்கப்படுகின்றன.தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், இறுதியாண்டு தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுகள், ஏப்ரலில் முடிந்து, கோடை…

6 hours ago

முதல் ஆயிரம் மாணவர்களில் 30 பேர் மட்டும் தமிழர்கள் – ஜெஇஇ ரிசல்ட்

ஐஐடி, என்ஐடி கல்லூரிகளில் சேர தேசிய அளவில் நடத்தப்பட்ட ஜெஇஇ முதன்மைத் தேர்வில் முதல் ஆயிரம் இடங்களைப் பிடித்த மாணவர்களில் 30 பேர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்…

6 hours ago

பத்தாம் வகுப்பு படித்த ஆண்களுக்கு மத்திய அரசு பணி

மத்திய அரசின் கீழ் செயல்படும் எல்லை சாலை கழகத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள ஆண்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள்…

6 hours ago

உங்கள் வேலைவாய்ப்பை அதிகப்படுத்துவதற்கான திறன்கள்…!

வேலைவாய்ப்பு திறன்எழுத்தாளர்: வினோத் குமார் சங்கரன்Gyanamite, தமிழில் திறமை மற்றும் வேலைவாய்ப்பை வளர்க்க நிறைய வீடியோக்கள் மற்றும் வலைப்பதிவுகளைகொண்ட தளம்.நம் நாட்டில் உள்ள மாணவர்களையும் இளைஞர்களையும்,அவர்களுக்குத் தொடர்புடைய…

6 hours ago

ரூ.60,000 ஊதியத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை

ONGC நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.காலிப் பணியிடங்கள்:Medical Officer பிரிவில் 45 பணியிடங்களும், Security Officer…

6 hours ago