இதுக்கு தான் MBA படிக்க கூடாதுனு சொல்றது!! வாட்ஸாப் வைரல் காமெடி!!

தற்பொழுது இணையதள உலகில் பல்வேறு விதமான ஜோக்குகளை நாம் பார்க்க முடியும் அவற்றில் நகைச்சுவை துளிகள் நம்மை சிரிக்க வைக்கும். சில சிந்திக்க வைக்கும். கீழே உள்ள உரையாடல் உங்களை சிரிக்க வைத்தால் நீங்கள் ஞானி., சிந்திக்க வைத்தால் நீங்கள் விஞ்ஞானி என்பதை இறுதியில் முடிவு செய்யுங்கள்!!

வாட்ஸாப்பில் வைரலான காமெடி பின்வருமாறு:-

MBA படிச்சஒருத்தன் கிராமத்துக்குபோறான்..

அங்கே ஒருசெக்கு மாடு மட்டும் , தனியா செக்கு சுத்திட்டுஇருக்கு..

அவனுக்குஆச்சரியமாஇருக்கு..,

பக்கத்தில ஒரு குடிசைக்குள்ள ஒரு விவசாயிசாப்பிட்டுட்டுஇருந்தாரு..

அவர்கிட்டகேட்டான்.

MBA : மாடு மட்டும் தனியா செக்கு சுத்திட்டு இருக்கே..?

விவசாயி: அதுபழகினமாடுதம்பி..,அதுவே சுத்திக்கும்..,

MBA : நீங்கஉள்ளேவந்தஉடனே அது சுத்தறதநிறுத்திட்டா.!எப்படி கண்டுபிடிப்பீங்க..?

விவசாயி: அதுகழுத்திலஒருசலங்கை இருக்குதம்பி.., சுத்தறதை நிறுத்திட்டாஅந்த சலங்கை சத்தம்வராது.. அதை வெச்சிகண்டுபிடிச்சிடுவேன்..

MBA : அதுசுத்தறதைநிறுத்திட்டு.,ஒரே இடத்துலநின்னு.., தலைய மட்டும்ஆட்டினா..! அப்ப எப்படிகண்டுபிடிப்பீங்க..?

விவசாயி: இதுக்குதான்தம்பி., நான் என்மாட்டை காலேஜூக்கெல்லாம் MBA படிக்க அனுப்பலை..!

இந்த நகைச்சுவை துளியின் இறுதியில் அந்த விவசாயி கூறும் வார்த்தைகளை கூர்ந்து கவனிக்கையில், ‘ படிக்காதவர்கள் செய்யும் வேலைக்கும் படித்தவர்கள் செய்யும் வேலைக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.

படித்தவர்கள் வேலையை சரியாக செய்யாவிட்டாலும், வேலை செய்வது போல் நடித்து முதலாளியை ஏமாற்றி விடுவார்கள், ஆனால், படிக்காதவர்களுக்கு அத்தகைய எண்ணம் தெரியாது’ என்று அந்த விவசாயி கூறுவதாக அமைந்துள்ளது.

என்னதான் படித்தவர்களுக்கு இது கோபத்தை வரவழைக்கும் விஷயமாக இருந்தாலும், ஆனால், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஒவ்வொருவரும் தன்னை சுயபரிசோதனை செய்து இந்த பட்டியலில் நாம் இல்லை என மனதை தேற்றிக் கொள்வது சிறந்தது.

Share

Recent Posts

ஹிப்ஹாப் ஆதியின் நட்பே துணை படத்தின் ரிலீஸ் தேதி வெளியிட்ட படக்குழு

பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் `நட்பே துணை'. ஹாக்கி விளையாட்டு மற்றும் நட்பை மையப்படுத்திய இந்த படத்தில் ஆதி ஜோடியாக…

2 hours ago

படப்பிடிப்பில் இயக்குனருடன் பிரபல நடிகை மோதல்

தமிழில் பாயும் புலி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம், சத்ரியன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா தத்தா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார்.தற்போது…

2 hours ago

காஷ்மீரில் அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி

ஜம்மு:ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த பிப்ரவரி மாதம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவ படையினர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு சென்று தீவிரவாத முகாம்கள்…

2 hours ago

கன்னியாகுமரி தொகுதியில் கோடீஸ்வர வேட்பாளர்களுக்கு இடையே போட்டியா?

கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ், பாஜக மற்றும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களின் சொத்து பட்டியல் அடிப்படையில் பார்த்தால் அங்கு கோடீஸ்வர வேட்பாளர்களுக்கு இடையிலான போட்டி போல் காட்சியளிக்கிறது.17-ஆவது…

2 hours ago

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும்; அமைச்சர் அருண் ஜெட்லி உறுதி!

2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் மாற்றத்தை கொண்டுவருபவர் மோடி தான் எனவும், வரும் தேர்தலில் பாஜக வெற்றிப் பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என மத்திய நிதி…

2 hours ago

Exclusive Interview: மோடி அலை குறித்து மே 23 அன்று தெரியும் -அருண் ஜேட்லி

மத்திய அமைச்சர் நிதி மந்திரி அருண் ஜெட்லியிடம் ஜி நியூஸ் பத்திரிகை தலைமை ஆசிரியர் சுதிர் சௌத்ரி நேர்காணலை மேற்க்கொண்டார். அப்பொழுது அவர் வரும் மக்களவை தேர்தலைக்…

2 hours ago