கூகுள் குரோமுக்கு போட்டியா ‘ஜியோ’ ப்ரௌசர். செம ஸ்பீடு!

இணையம் பயன்படுத்தும் பெரும்பாலானோர் தற்போது நாடுவது கூகுள் குரோம் ப்ரௌசரையே! குரோம் வருவதற்கு முன்னர், விண்டோஸின் எக்ஸ்ப்ளோரர், மோஸில்லா ஃபயர்ஃபாக்ஸ், நெட்ஸ்கேப், ஓபரா இவை எல்லாம் பிரபலமான ப்ரௌஸர் வகைகளாக இருந்தன. கூகுள் குரோம் வந்த பின்னர், குரோம் ப்ரௌசரே முக்கிய இடத்தைப் பிடித்தது.

இந்திய மயமாக்கல் என்ற தத்துவத்தில், மோஸில்லா பயர்ஃபாக்ஸின் அடிப்படையைக் கொண்டு, இண்டிக் ப்ரௌசர் அறிமுகம் செய்யப் பட்டது. ஆனால் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இந்திய மொழிகளில் உருவாக்கப்பட்ட அந்த பிரௌசரைக்குப் பின்னர், கூகுள் குரோமே இந்திய மயமாக்கம் கண்டது.

இந்நிலையில், தொலைத்தொடர்புத் துறையில் கோலோச்சும் ரிலையன்ஸ் ஜியோ இப்போது ப்ரௌசரையும் புதிதாக விட்டுள்ளது.
ஆண்ட்ராய்ட் செல்போன் பயன்படுத்துபவர்களுக்கு என்று சில வித்தியாசமான ப்ரௌஸர்கள் புழக்கத்தில் உள்ளன. யுசி ப்ரௌசர், குரோம், ஃபயர்ஃபாக்ஸ், எட்ஜ் உள்ளிட்ட பல ப்ரௌசர்கள் இருந்தாலும், சாம்சங்க் மொபைல் போன் தனக்கென்று பிரத்யேக ப்ரௌஸரை பதிந்தே மொபைல் போன்களை விற்பனை செய்கிறது.

தற்போது ஆண்ட்ராய்ட் சந்தையில், புதிதாக நுழைந்திருக்கிறது ஜியோ ப்ரௌசர். இந்திய பயனாளர்களை கருத்தில் கொண்டு, இந்த ப்ரெளசர் உருவாக்கப்பட்டுள்ளது. மற்ற ப்ரெளசர்களை போன்று செய்திகள், வீடியோக்களை பகிரும் வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.‌

ஆண்ட்ராய்டு போன்களில் இந்த ப்ரெளசரை பயன்படுத்தலாம். இன்னமும் டெஸ்க்டாப் கணினிகளுக்கான வடிவமைப்பு வெளியாகவில்லை. ஆண்ட்ராய் போன்களில் பதிந்து கொள்ள கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்துகொள்ளலாம். தமிழ், தெலுங்கு, மராத்தி, மலையாளம், கன்னடம், ஹிந்தி, குஜராத்தி, பெங்காலி உள்ளிட்ட 8 இந்திய மொழிகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த ப்ரௌசர் வெளியாகியுள்ளது. .

இதனை பயன்படுத்திப் பார்த்த போது, மற்ற ப்ரைஸர்களைக் காட்டிலும் வேகம் மிக அதிகமாகவே இருந்தது. இணையப் பக்கங்கள் விரைவில் தரவிறக்கம் செய்யப் பட்டன.

Share

Recent Posts

ஹிப்ஹாப் ஆதியின் நட்பே துணை படத்தின் ரிலீஸ் தேதி வெளியிட்ட படக்குழு

பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் `நட்பே துணை'. ஹாக்கி விளையாட்டு மற்றும் நட்பை மையப்படுத்திய இந்த படத்தில் ஆதி ஜோடியாக…

3 hours ago

படப்பிடிப்பில் இயக்குனருடன் பிரபல நடிகை மோதல்

தமிழில் பாயும் புலி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம், சத்ரியன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா தத்தா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார்.தற்போது…

3 hours ago

காஷ்மீரில் அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி

ஜம்மு:ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த பிப்ரவரி மாதம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவ படையினர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு சென்று தீவிரவாத முகாம்கள்…

3 hours ago

கன்னியாகுமரி தொகுதியில் கோடீஸ்வர வேட்பாளர்களுக்கு இடையே போட்டியா?

கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ், பாஜக மற்றும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களின் சொத்து பட்டியல் அடிப்படையில் பார்த்தால் அங்கு கோடீஸ்வர வேட்பாளர்களுக்கு இடையிலான போட்டி போல் காட்சியளிக்கிறது.17-ஆவது…

3 hours ago

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும்; அமைச்சர் அருண் ஜெட்லி உறுதி!

2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் மாற்றத்தை கொண்டுவருபவர் மோடி தான் எனவும், வரும் தேர்தலில் பாஜக வெற்றிப் பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என மத்திய நிதி…

3 hours ago

Exclusive Interview: மோடி அலை குறித்து மே 23 அன்று தெரியும் -அருண் ஜேட்லி

மத்திய அமைச்சர் நிதி மந்திரி அருண் ஜெட்லியிடம் ஜி நியூஸ் பத்திரிகை தலைமை ஆசிரியர் சுதிர் சௌத்ரி நேர்காணலை மேற்க்கொண்டார். அப்பொழுது அவர் வரும் மக்களவை தேர்தலைக்…

3 hours ago