சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பூங்கா

தேசிய புலிகள் காப்பக ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனச்சுற்றுலா பூங்காவுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

தென்னந்தியாவில் மிக செழிப்புடன் காணப்படும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், 1 லட்சத்து 4 ஆயிரம் ஏக்கர் நிரப்பரப்பை கொண்டுள்ளது. இங்கு புலிகள் வாழ்வதற்கான ஏற்ற வனச்சூழல் உள்ளதால் புலிகளின் எண்ணிக்கை 65 மேல் தாண்டியுள்ளது.

இயற்கை எழில்கொஞ்சும் இந்தப் புலிகள் காப்பக பகுதிகளை கண்டு களிக்க வனச்சுற்றுலாத் திட்டம் கடந்த 2017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு படையெடுத்தனர். இதனால் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் சுற்றுலாப் பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் வனவிலங்குகளை சுற்றுலாப் பயணிகள் பார்த்து மகிழ பாதுகாப்புடன் கூடிய சுற்றுலா அனுபவத்தை ஏற்படுத்தும் வகையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனச்சுற்றுலாவுக்கு அரசு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அதில் சுற்றுலாப் பயணிகளை கவருவதற்கு பண்ணாரியில் 5 ஏக்கரில் ரூ.3 கோடி செலவில் டிக்கெட் கவுன்டர், பயணிகள் ஓய்வறை மற்றும் குழந்தைகள் விளையாட புல் தரை ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றது.

மேலும் வனத்தில் புலி உலாவுவது போன்ற சிலைகள், யானைகள், சறுக்கு விளையாட்டு, மான், இயற்கை குடில் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளை விலங்குகள் தாக்காதபடி பேட்டரி மின் வேலி அமைக்கப்பட்டுள்ளது.

அதே போல ஆசனூரில் புலி உருவம்போன்று சுற்றுலா பயணிகள் டிக்கெட் கவுன்டர் மற்றும் ஓய்வறை அமைக்கப்பட்டுள்ளது. தாளவாடி, கேர்மாளம், தலமலை ஆகிய வனச்சரங்களிலும் வனச்சுற்றுலாப் பூங்கா அமைக்கும் பணி தீவரமாக நடந்து வருகிறது. இந்த வனப்பூங்காவில் கிடைக்கும் வருவாய் வனக்குழுவிற்கு வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share

Recent Posts

இலங்கை குண்டுவெடிப்பு.. இந்தியர்களின் பலி எண்ணிக்கை 5-ஆக உயர்வு.. இந்திய வெளியுறவுத் துறை தகவல்

டெல்லி: இலங்கையில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டதில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உட்பட 8…

6 hours ago

மேற்கு வங்கத்தில் மோடி போட்டி? அமித் ஷா விளக்கம்

மேற்கு வங்கத்தில் நரேந்திர மோடி போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவியதற்கு அக்கட்சித் தலைவர் அமித் ஷா திங்கள்கிழமை விளக்கமளித்தார்.மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் சூழலில் அனைத்து கட்சித்…

6 hours ago

அமேதியில் ராகுல் வேட்புமனுவில் சிக்கல் – இன்று விசாரணை !

அமேதி தொகுதியில் வேட்புமனு செய்துள்ள ராகுல் காந்தியின் வேட்புமனுவில் கல்வித்தகுதி மற்றும் குடியுரிமை தொடர்பான சந்தேகங்கள் எழுந்துள்ளதால் சில சிக்கல்கள் எழுந்துள்ளன. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மூன்றாவது…

6 hours ago

மக்களவை தேர்தல் : டில்லி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியல்

டில்லிடில்லியின் 6 மக்களவை தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவிஹ்த்துள்ளது.டில்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்கும் என பல அரசியல் ஆர்வலர்கள் எதிர்பார்த்து…

6 hours ago

டிக்-டாக் செயலி மீதான தடை குறித்து சுப்ரீம் கோர்ட் முக்கிய அறிவிப்பு

டிக் டாக் செயலியை சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்த நிலையில் இதுகுறித்த வழக்கு ஒன்றில் சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதுஇதன்படி டிக்-டாக் செயலி மீதான…

6 hours ago

இந்தியா முழுவதும் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் டிஜிட்டல் சேவையில் இணைப்பு

இந்தியாவில் உள்ள ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான தபால் நிலையங்கள், டிசிஎஸ் எனப்படும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் வழங்கிய புதிய சாப்ட்வேர் தொழில்நுட்பம் வாயிலாக நவீன மயமாக்கப்பட்டுள்ளன.இதற்கான…

6 hours ago