ஒட்டகக் கோமியத்தை குடிக்குமாறு சென்னையில் பள்ளிக்குழந்தைகள் மீது தாக்குதல்

சென்னையை அருகே உள்ள திருமழிசையில் ஒட்டகக் கோமியத்தை குடிக்குமாறு பள்ளிக்குழந்தைகளை தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையை அருகே உள்ள திருமழிசையில் சென்னை தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளை ஒருநாள் சுற்றுலா அழைத்துச்செல்ல திட்டமிட்டுள்ளனர். ஆனால் மழையின் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட அந்தச் சுற்றுலாப் பயணம் அண்மையில் அரங்கேறியுள்ளது. ஸ்ரீபெரும்பதூரில் உள்ள சோகி தானி என்ற ஹோட்டல் ஒன்றிற்கு குழந்தைகளை பள்ளி நிர்வாகம் அழைத்துச்சென்றுள்ளது. அந்த ஹோட்டல் ராஜஸ்தானிய பாரம்பரியத்துடன் அமைக்கப்பட்டதாகும்.

22 ஆசிரியர்களின் பார்வையில் மொத்தம் 400 குழந்தைகள் அங்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.
ஆனால் அங்கு சென்றதும் குழந்தைகளை ஆசிரியர்கள் சரியாக கவனிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் குழந்தைகள் அவர்களின் விருப்பத்திற்கு சுற்றியுள்ளனர். இந்நிலையில் மதிய நேர உணவு இடைவெளியின் போது குழந்தைகளை, விட்டு ஆசிரியர்கள் தனியாக உணவு உண்ண சென்றதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் சோகி தானி ஹோட்டலில் பணிபுரியும் இரண்டு ஊழியர்கள் குழந்தைகளை ஒரு அறையில் அடைத்துள்ளனர்.

அத்துடன் ஒரு தண்ணீர் கேனில் ஒட்டகத்தின் கோமியத்தை கொண்டு வந்து அதைக்குடிக்குமாறு வற்புறுத்தியுள்ளனர். கோமியத்தை குடிக்க சில குழந்தைகள் மறுத்துள்ளனர். அப்போது அருகே இருந்த கழிவறையில் இருந்து இரும்பு பைப் ஒன்றை கொண்டு வந்து குழந்தைகளை அந்த இருவரும் தாக்கியுள்ளனர். இதனால் அங்கிருந்த குழந்தைகள் அனைவரும் அலறியுள்ளனர். இதையடுத்து அந்த அறையில் இருந்து சிறிய நுழைவு ஒன்றில் வழியாக குழந்தைகள் புகுந்து ஓடியுள்ளன. பின்னர் தகவலறிந்து குழந்தைகள் அனைவரும் மீட்கப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக குழந்தைகளின் பெற்றோர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில், சோகி தானி ஊழியர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகத்தின் மீதும் பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளதால், அதுதொடர்பாகவும் விசாரிக்கபட்டு வருகிறது.

(தகவல்கள் : தி நியூஸ் மினிட்)

Share

Recent Posts

கறுப்பு பணம் பரம ரகசியமாம்… தகவல் சொல்லக் கூடாதாம்

டெல்லி: நாட்டில் எவ்வளவு கறுப்புப் பணப் புழக்கம் எவ்வளவு உள்ளது என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப் பட்ட கேள்விக்கு அது இரு நாடுகளுக்கு…

2 hours ago

இன்றைய (20.05.2019) பெட்ரோல், டீசல் விலை: இன்று அதிரடி மாற்றத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி!!

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை நிர்ணயித்து வந்தது. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டு, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை…

2 hours ago

இன்றைய(மே 20) பெட்ரோல் , டீசல் நேற்றைய விலையை விட அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொருத்து இந்தியாவில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றனர்.இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள…

2 hours ago

பிரச்சினையை டெபாசிட் பண்ணிட்டு வன்முறையை வட்டிக்கு வாங்கும் ட்ரம்ப் – வரி இல்லாத வர்த்தகம்

வாஷிங்டன்: சர்வதேச வர்த்தகத்தில் இந்தியா சீனாவுடன் கடும் மோதல் போக்கை கடைபிடித்து வரும் அமெரிக்க தன் அண்டை நாடுகளான கனடா மற்றும் மெக்ஸிகோ உடன் இணக்கமான போக்கை…

2 hours ago

பங்குச் சந்தையில் திடீர் உற்சாகம்: சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு

பங்குச் சந்தையில் வர்த்தகம் துவங்கிய போது மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.முந்தைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 37…

2 hours ago

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்வு

அந்நியச் செலாவணி சந்தையில் இன்று திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 79 காசுகள் உயர்ந்தது.சீனா-அமெரிக்கா இடையில் ஏற்பட்டுள்ள வர்த்தக நெருக்கடிக்கு பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல தீர்வு…

2 hours ago