செயற்கையாகவாவது மழை பெய்யவைத்து குளத்தை நிரப்பி தாமரையை மலரச்செய்வோம்-தமிழிசை!!

மேகதாது அணை கட்ட அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் திமுக தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது

ஆர்ப்பாட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,

தற்போதைய போராட்டம் அரசியலுக்காக அல்ல. உழவர் கண்ணிரை துடைப்பதற்காக நடக்கும் போராட்டம். மேகதாது அணை பற்றி முதல் அறிவிப்பு வந்தபோதே திமுக எதிர்ப்பு தெரிவித்தது. மேகதாது அணைக்கு தடை உத்தரவை கூட ஜெயலலிதா, ஓ.பி.எஸ். – இ.பி.எஸ். அரசுகளால் பெற முடியவில்லை. இடைக்காதல தடை உத்தரவு பெற்றிருந்தல் மேகதாது அணை கட்ட கர்நாடகம் துணிந்து இருக்காது. மேகதாது அணை கட்டும் முயற்சியை தமிழக அரசு எதிர்க்காமல் தூங்கி வருகிறது.

கர்நாடக அரசின் அணை திட்டத்துக்கு அனுமதி கிடைத்ததற்கு முழு காரணம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுதான்.
மேகதாது அணை பிரச்சனை பற்றி விவாதிக்க சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என கூறிய அவர் தமிழகத்தில் மழையே இல்லை புல் முளைக்கவே இடம் இல்லை எந்த முகத்தை வைத்துக்கொண்டு தாமரை மலரும் என கூறுகிறார்கள் தமிழ்நாட்டில் என பேசியிருந்தார்.

இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில்,

தமிழகத்தில் மழையே வராது புல்லே முளைக்காது எனும்போது தாமரை எப்படி மலரும் என கேள்வி எழுப்பியுள்ளார் ஸ்டாலின், மழை வருகிறதே. அவர் பேசும் பொழுதே மழை வந்துவிட்டதே. ஒன்று சொல்லவிரும்புகிறேன் இயற்கையாகவே மழை வரவில்லை என்றாலும் சரி மோடியுடைய அரசு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செயற்கையாகவாவது மழையை வரவைத்து குளத்தை நிரப்பி தமிழகத்தில் தாமரையை மலர செய்வோம். தாமரை மலர்ந்தே தீரும் என கூறினார்.

Share

Recent Posts

7-ம் கட்ட மக்களவைத் தேர்தல்; 1 மணிநிலவரம்: 38% வாக்குகள் பதிவு

7-ம் கட்டத் தேர்தல் நடைபெறும் 59 தொகுதிகளிலும் மதியம் 1 மணி நிலவரப்படி 39.85 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19…

3 hours ago

7-ம் கட்ட மக்களவைத் தேர்தல் : பிற்பகல் 1 மணி வரையிலான வாக்குப்பதிவு நிலவரம்

8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பகல் ஒரு மணி நிலவரப்படி மாநிலவாரியாக பதிவான வாக்கு சதவீதம் தொடர்பான தகவல் தற்போது…

3 hours ago

தேர்தல சவ்வா இழுக்கறத தவிர்க்கலாம்: நிதிஷ் குமார்!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இன்று கடைசிக் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கிய மக்களவை தேர்தல், 6 கட்டங்களை…

3 hours ago

கேதாரத்தைத் தொடர்ந்து பத்ரிநாத் கோயிலில் மோடி வழிபாடு!

உத்தரகாண்ட் மாநிலம், கேதார்நாத்தை தொடர்ந்து பத்ரிநாத் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு மேகொண்டார்.நாடு முழுவதும் இன்று மக்களவைக்கான இறுதிக் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. நேற்று…

3 hours ago

கத்திமுனையில் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை; டிவி நடிகர் கைது..!

2 இளம் பெண்களை கத்திமுனையில் பலாத்காரம் செய்த டிவி நடிகர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனா்.உலகில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.…

3 hours ago

Exit Poll Results 2019: எக்ஸிட் போல் முடிவுகள் எங்கு? எப்போது?

மக்களவைத் தேர்தல் எக்ஸிட் போல் முடிவுகளை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழில் லைவ்வாக காணலாம். முன்னணி தொலைக்காட்சிகள் அனைத்தும் இதையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருக்கின்றன.2019-ம் ஆண்டுக்கான மக்களவைத்…

3 hours ago