தமிழக தேர்தல் அதிகாரியுடன் சுனில் அரோரா ஆலோசனை

18 தொகுதி இடைத் தேர்தல் தொடர்பாக தமிழக தேர்தல் அதிகாரியோடு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஆலோசனை நடத்தி உள்ளார்.

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்தால் காலியாக இருக்கும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளின் நிலவரம் குறித்து தமிழக தேர்தல் அதிகாரியிடம் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லியில் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது 18 தொகுதி இடைத் தேர்தல் தொடர்பாக விவரம் கேட்டறிந்துள்ளார். டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்க வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அக்டோபர் 24ம் தேதி தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை என டிடிவி தரப்பினர் தெரிவித்ததால், அங்கு எப்போது இடைத்தேர்தல் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் 18 தொகுதிகளின் நிலவரம் குறித்து தமிழக தேர்தல் அதிகாரியிடம் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கடிதம் மூலம் கேட்டிருந்தார். டிடிவி தரப்பினர் மேல்முறையீடு செய்துள்ளார்களா என அதில் வினவியிருந்தார். இதுகுறித்து சட்டப்பேரவை செயலரிடம் தகவல் பெற்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் டிடிவி தரப்பினர் மேல்முறையீடு செய்யவில்லை என்பதை கூறியுள்ளார்.

மேலும் காலியாக இருக்கும் திருவாரூர் தொகுதியில் பிப்ரவரி 7ம் தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் எனத் தேர்தல் ஆணையம் கூறியிருந்த நிலையில், 18 தொகுதிகளின் நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருவது இதன் மூலம் தெரிந்தது. அதேவேளையில் திருப்பரங்குன்றம் தொகுதி தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால், தீர்ப்பைப் பொருத்து அடுத்த முடிவு எடுக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

Share

Recent Posts

இதுக்கு ஒரு எண்டே இல்லையா? – சீதக்காதி படத்துக்கு சிக்கல்

விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி வற்புறுத்தியுள்ளது.நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் இயக்குனர் பாலாஜி…

4 hours ago

ஏ ஆர் முருகதாஸ் இயக்க இருக்கும் ரஜினி படத்தின் ஹீரோயின் இந்த வளர்ந்து வரும் நடிகையா.?

ஏ ஆர் முருகதாஸ் விஜய்யின் சர்கார் படத்தை இயக்கிய கையேடு அடுத்ததாக சூப்பர்ஸ்டார் ரஜினி படத்தை இயக்க இருக்கிறார் என தகவல் வெளியாகிகொண்டே இருக்கிறது ஆனால் இதைப்பற்றி…

4 hours ago

தல-59 படத்தின் இசையமைப்பாளர் இவர்தான்.! அதுவும் அஜித் ரசிகர்களின் ஃபேவரட் இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு.!

தல அஜித் சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகிற பொங்கலுக்கு பிரமாண்டமாக வெளியாகும், இந்தநிலையில் அஜித் அடுத்ததாக வினோத் இயக்கத்தில் நடிக்க…

4 hours ago

தல-59, பிங்க் ரீமேக் பூஜையை போட்ட அஜித்.! வைரலாகும் புகைப்படம்

விவேகம் படத்திற்கு பிறகு அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விஸ்வாசம் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா டூயட் பாடி ஆடி உள்ளார், சத்யஜோதி…

4 hours ago

தல-59 பட பூஜை – எஸ்க்ளுசிவ் போட்டோஸ் உள்ளே. ஒளிப்பதிவாளர் யார் தெரியுமா ?

கடந்த சில நாட்களாக்கவே நம் கோலிவுட்டில் கிசு கிசுக்கப்படும் விஷயம் பாலிவுட் படமான பிங்க் இன் ரிமேக் தான். பிங்க் ஒரிஜினல் வெர்ஷன் சோஷியல் மெசேஜ் சொல்லும்…

4 hours ago

Thuppakki Munai Review: ஷார்ப்பான மெசேஜ் சொல்லும் விக்ரம் பிரபுவின் ‘துப்பாக்கி முனை’

Vikram-Hansika Starrer Thuppakki Munai Review in Tamil: பல மெசேஜ்களை ஒரே படத்தில் சொல்ல நினைத்து, அதில் வெற்றியும் கண்டிருக்கிறது கலைப்புலி எஸ்.தாணுவின் தயாரிப்பில் வெளியாகியிருக்கும்…

4 hours ago