குரூப்-2 தேர்வு திட்டமிட்டபடி நவம்பர் 11 ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பில், குரூப்-2 தேர்வு திட்டமிட்டபடி நவம்பர் 11 ஆம் தேதி நடைபெறும். குரூப்-2 தேர்வு வினாத்தாள் பற்றிய ஆதாரமற்ற, தவறான செய்திகள் குறித்து தேர்வர்கள் கவலைப்பட வேண்டாம். குரூப்- 2 தேர்வு வினாத்தாள் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளிலும் தயாரிக்கப்படுகிறது என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply