`மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை இப்படிச் செயல்படுத்துங்கள்!’ – அரசுக்கு ஆலோசனை சொல்லும் ஓய்வூதியதாரர்கள்

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர்களுக்கும் முழுமருத்துவக் காப்பீட்டுத்திட்டம் கோரியும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கக் கோரியும் சேலம் கலெக்டர் அலுவலத்தின் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டார்கள். இதில் 50-க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்துகொண்டார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மாநிலச் செயலாளர் முருகேசன் கூறுகையில், ”தமிழக அரசில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கும், குடும்ப ஓய்வூதியர்களுக்கும், யுனைடெட் இந்தியா நிறுவனத்துடன் ஒப்பந்தத்தின் அடிப்படையில் 1.7.2014 முதல் செயல்படுத்தப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 30.6.2018-ம் தேதியுடன் முடிவடைகிறது.

தமிழ்நாட்டில் 2016 ம் ஆண்டு ஜனவரி மாத நிலவரத்தின்படி 4,78,581 ஓய்வூதியர்களும் 2,31,396 குடும்ப ஓய்வூதியர்களும் இருக்கிறார்கள்.
4 ஆண்டு காலத்திற்கு இவர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்படும் தொகை தோராயமாக ரூ.455 கோடி ஆகும். இதில் 4 ஆண்டு காலத்திற்கு மருத்துவக் காப்பீட்டிற்காக ரூ.100 கோடி கூட செலவழிக்கப்படுவதில்லை. அரசு இதனை கவனத்தில் கொண்டு இத்திட்டத்தை பயனுடையதாக மாற்றி அமைத்துத் தர வேண்டும். கடந்த ஆண்டுகளில் இத்திட்டம் செயல்படுத்துவதில் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு ஏற்பட்ட குறைபாடுகள் மற்றும் சிரமங்களை நீக்கிடவும், 1.7.2018 முதல் 30.6.2022 வரை உள்ள காலங்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை ஓய்வூதியர்களுக்குச் செயல்படுத்த சில ஆலோசனைகளை அரசுக்கு வழங்குகிறோம்.

மருத்துவச் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை இரண்டுக்கும் முழுமையான செலவுத்தொகையை காப்பீட்டு நிறுவனம் மருத்துவ மனைக்கு வழங்க வேண்டும். அரசு பொது மருத்துவமனை, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவமனை ஆகியவற்றில் முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அனுமதிப்பது போல ஓய்வூதியர்கள் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திலும் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல 4 ஆண்டு காலத்திற்கு ரூ 4 லட்சம் மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும். சில சிகிச்சைகளுக்கு அரசே உச்சவரம்பை தளர்த்திச் செலவு முழுவதையும் ஏற்க வேண்டும். மெடிக்கல் அட்டெண்டன்ஸ் சட்டத்தின்படி செலவுத் தொகை முழுவதையும் அரசே காப்பீட்டு நிறுவனமோ வழங்க வேண்டும். செலவுத் தொகை மறுக்கின்ற அதிகாரம் நிறுவனத்திற்கு, அரசுக்கு இருக்கக் கூடாது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மருத்துவக் குழுக்களில் ஓய்வூதியர்கள் சங்கப் பிரதிநிதிகளும் அரசு மருத்துவர்களும் இடம் பெற வேண்டும். இதற்கு மாவட்ட கருவூல அதிகாரி வழி நடத்துபவராக இருக்க வேண்டும். மாதந்தோறும் கூட்டங்களைக் கூட்டி தீர்வு காண வேண்டும்” என்றார்.

Share
Tags: vikatan

Recent Posts

தேதி, நேரம் குறித்த ஆஸ்தான ஜோதிடர்… நாளை காலை திமுகவில் இணைகிறார் செந்தில் பாலாஜி!

கடந்த சில நாட்களாக உலாவிவந்த செய்தி கிட்டத்தட்ட கிளைமேக்ஸை நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஆமாம், நாளை காலை, அதாவது 13ஆம் தேதி காலை 10.45 மணிக்கு திமுக தலைமைக்கு கழகம்…

41 mins ago

இந்தாளு நம்மளை நிம்மதியா வாழவிட்டமாட்டார்…! ரஜினி வெளிப்படையாக இப்படி புலம்பித் தீர்த்தது யாரால்?

எல்லாமே வேஷம், அனைத்தும் மேக் - அப் என்று நிரம்பி வழியும் சினிமா உலகில், இமேஜைப் பற்றிக் கவலைப்படாமல் திறந்த புத்தகமாக திரிபவர் ரஜினிகாந்த்தான். இதோ சில…

41 mins ago

ரகசியமாக 2 கோடி கொடுத்த நடிகர்! துணிச்சலாக ஒப்புக்கொண்ட நடிகை!

'குளிர்ச்சி' யான கதாநாயகி தற்போது ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வருகிறார். இப்போதுதான் இவருடைய மார்க்கெட் மெல்ல மெல்ல களைகட்டி வருகிறது. அவருக்கு நிறைய பட…

41 mins ago

ம.பி.,யில் ஆட்சி அமைக்க காங்கிரஸுக்கு அகிலேஷ் ஆதரவு

மத்தியப் பிரதேசத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸுக்கு ஆதரவுக் கரம் நீட்டத் தயாராக இருப்பதாக சமாஜ்வாடி கட்சியின் தலைவரும் உ.பி. முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்திருக்கிறார்.மத்தியப் பிரதே…

41 mins ago

ராகுல் காந்தி பாஸாகிவிட்டார்; மூத்த தலைவர் புகழாரம்

5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் காங்கிரஸ் கட்சி 3 மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றியது. இதனையடுத்து பல்வேறு தலைவர்களும் பிரபலங்களும் இந்த தேர்தல்…

41 mins ago

தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளரை ட்விட்டரில் அடிச்சிதூக்கிய தல ரசிகர்கள்

தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயினின் ட்விட்டர் பக்கத்தில் அஜித் ரசிகர்கள் விஸ்வாசம் போஸ்டரை பதிவிட்டு திணறடித்துள்ளனர்.சினிமாவின் ஆரம்ப கட்டத்தில் இருந்தே நடிகர்கள் நடிகைகள் மத்தியில்…

41 mins ago