`இலவச மடிக்கணினி பெற மாணவர்களிடம் கட்டாய வசூல்’ – அரசுப் பள்ளி தலைமையாசிரியர் மீது குற்றச்சாட்டு

தமிழக அரசின் இலவச மடிக்கணினி பெறுவதற்கு மாணவர்களிமிருந்து கட்டாய பண வசூல் செய்ததாக அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மீது புகார் எழுந்திருக்கிறது.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே திருவாஞ்சியத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. மாணவர்களின் கல்வி நலன் கருதியும், கம்ப்யூட்டர் அறிவு வளர்ச்சி பெறவும் தமிழக அரசு இலவச மடிக்கணினிகளை மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. அதன்படி 2017-18 ஆண்டுக்குரிய 70 மாணவர்களுக்கு திருவாஞ்சியம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ராஜேந்திரன் மடிக்கணினி வழங்கியிருக்கிறார்.

அப்போது, ஒவ்வொரு மாணவரிடமிருந்தும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் அறிவுறுத்தலின்படி பள்ளிக் கல்வி வளர்ச்சி நிதி என்ற பெயரில் தலா ரூ.200 வசூலித்திருக்கிறார்.
இதுபற்றி புகார் எழவே பள்ளியின் தலைமையாசிரியர் ராஜேந்திரனிடம் விளக்கம் கேட்டோம். “பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் அறிவுறுத்தலின்படி பள்ளி கல்வி வளர்ச்சி நிதிக்காக, மடிக்கணினி பெறும் ஒவ்வொரு மாணவரிடமிருந்தும் தலா ரூ.200 பெற்றது உண்மைதான். அந்தப் பணத்தில் ஒரு பைசாகூட நான் தொடவில்லை. பள்ளிக் கல்வி வளர்ச்சி நிதிக் கணக்கில் செலுத்திவிட்டேன்’ என்றார்.

தலைமையாசிரியரின் இந்த விளக்கத்தை பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பழனிவேலு மறுக்கிறார். அவரிடம் பேசியபோது, “நாங்கள் நன்கொடை பெறுவதற்கு ரசீது புத்தகம் வைத்துள்ளோம். தலைமையாசிரியர் மாணவர்களிடம் வசூலித்த பணத்திற்காக, யாருக்காவது ரசீது கொடுத்துள்ளாரா?. உண்மை என்னவென்றால், எங்களைக் கேட்காமல் தன்னிச்சையாகப் பணம் வசூல் செய்து, பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு அவமானத்தை தேடித் தந்திருக்கிறார். ஏழை மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுப்பதற்கு ரூ.200 லஞ்சம் பெற்றதற்காக தலைமையாசிரியர் ராஜேந்திரன் மீது கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று முடித்தார்.

Share
Tags: vikatan

Recent Posts

பேஸ்புக், டுவிட்டருக்கு போட்டியாக தமிழரின் சமூக வலைத்தளம்

இணையத்தில் சமூக வலைத்தளம் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஃபேஸ்புக், ட்விட்டர் தான். இவை தவிர பல்வேறு இதர சேவைகள் இருந்தாலும் இந்த சேவைகள் பெரும்பாலும் வெளிநாட்டு…

1 hour ago

உஷார்.! உங்கள் பேஸ்புக் புகைப்படங்களும் கூட லீக் ஆகி இருக்கலாம்.!

பேஸ்புக் நிறுவனத்திற்கு 2018 ஆம் ஆண்டு மிகவும் மோசமான ஆண்டாகவே இருந்திருந்தது. வருடத்தின் இறுதியை நெருங்கிவிட்ட நிலையில் தற்பொழுது இன்னொரு பெரிய பிரச்சனையில் பேஸ்புக் நிறுவனம் சிக்கியுள்ளது.6.8…

1 hour ago

டிஜிட்டலில் தெறிக்க விடும் பள்ளி கல்விதுறை.! வியக்கும் பிற மாநிலங்கள்.!

தமிழக பள்ளி கல்விதுறை பல்வேறு மாற்றங்களை கண்டு வருகின்றது. மேலும், டிஜிட்டல் யுகத்தில் தற்போது வேகமாக சென்று கொண்டிருகின்றது. இதனால் மற்ற மாநிலங்களை காட்டிலும் பல்வேறு நடவடிக்கைகள்…

1 hour ago

இணையத்தில் லீக் ஆன பேஸ்புக் புகைப்படங்கள் – பயனாளர்கள் அதிர்ச்சி

பேஸ்புக்கில் இருந்து 6.8 மில்லியனுக்கும் அதிகமான புகைப்பட்டங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.உலகம் முழுவதும் சுமார் 200 கோடிக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளம்…

1 hour ago

ரூ.6,100க்கு செம்ம ஸ்டைலான ஸ்மார்ட்போன்… சியோமிக்கு போட்டியாக களம் இறங்கும் மொபிஸ்டார்

Mobiistar C1 Shine : வியட்நாம் நாட்டினைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான மொபிஸ்டார் (Mobiistar C1 Shine) தற்போது புதிய போன் ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது.Mobiistar…

1 hour ago

வானிலிருந்து வந்து 244000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..

இன்று வரை உலகத்தில் பெரும் மர்மம் நிறைந்த பகுதியாகவே மெசபடோமியா இருக்கின்றது. அங்கு ஏராளமான வினோதங்களும் நிறைந்துள்ளதாவே இருக்கின்றது. இன்று வரை பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் முகாமிட்டு வருகின்றனர்.அங்கு…

1 hour ago