`பாறையில் மோதிய படகு!’ – நடுக்கடலில் தவிக்கும் 12 மீனவர்கள்

தெற்கு இலங்கை, மாலத்தீவு மற்றும் கன்னியாகுமரிக்கு இடையே இந்தியப் பெருங்கடலில் கடந்த 10ம் தேதி காற்றழுத்த தாழ்வுநிலை உருவானது. அந்தக் காற்றழுத்த தாழ்வுநிலை அரபிக்கடலை நோக்கி நகர்ந்து தற்போது திருவனந்தபுரத்திலிருந்து 310 கிலோ மீட்டர் தொலைவில் அரபிக்கடலில் மையம் கொண்டிருக்கிறது. இதனால், தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாவதற்கு முன்பே குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடலுக்கு விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றுவிட்டனர். சுமார் 20 நாள்கள் வரை அவர்கள் ஆழ்கடலில் தங்கி மீன் பிடிப்பார்கள்.

இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக மீனவர்கள் கரை திரும்புமாறு தமிழக அரசு எச்சரித்தது.
இதையடுத்து ஆழ்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் அவசரமாக கரை திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். நேற்றைய நிலவரப்படி 51 விசைப்படகுகள் கரை திரும்பிக்கொண்டிருந்தன. அதில் ஒவ்வொரு படகுகளிலும் 12 முதல் 20 மீனவர்கள் வரை இருக்கிறார்கள். இன்றைய நிலவரப்படி 4 விசைப்படகுகள் லட்சத்தீவு பகுதியில் கரை சேர்ந்திருக்கின்றன. 10 விசைப்படகுகள் கர்நாடக மாநிலம் கர்வார் பகுதியில் கரை திரும்பியிருக்கின்றன. அவசரமாக கரை திரும்பிய ஒரு படகு கர்வார் பகுதியில் பாறையில் மோதி இன்று காலை விபத்துக்குள்ளானது. கேரள மாநிலம் வேப்பூர் பகுதியிலிருந்து மீன்பிடிக்கச்சென்ற நாதபாத்திமா என்ற பெயருடைய அந்தப் படகில், குமரி மாவட்டம் குறும்பனையைச் சேர்ந்த 7 மீனவர்கள், வாணியக்குடியை ஒரு மீனவர் மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்த 4 மீனவர்கள் என மொத்தம் 12 மீனவர்கள் இருக்கிறார்கள். பாறையில் மோதி சேதமடைந்த படகில் இருக்கும் 12 மீனவர்களையும் உடனடியாக மீட்க நடவடிக்கை வேண்டும் எனத் தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச்செயலாளர் சர்ச்சில், அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Share
Tags: vikatan

Recent Posts

பேஸ்புக், டுவிட்டருக்கு போட்டியாக தமிழரின் சமூக வலைத்தளம்

இணையத்தில் சமூக வலைத்தளம் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஃபேஸ்புக், ட்விட்டர் தான். இவை தவிர பல்வேறு இதர சேவைகள் இருந்தாலும் இந்த சேவைகள் பெரும்பாலும் வெளிநாட்டு…

2 hours ago

உஷார்.! உங்கள் பேஸ்புக் புகைப்படங்களும் கூட லீக் ஆகி இருக்கலாம்.!

பேஸ்புக் நிறுவனத்திற்கு 2018 ஆம் ஆண்டு மிகவும் மோசமான ஆண்டாகவே இருந்திருந்தது. வருடத்தின் இறுதியை நெருங்கிவிட்ட நிலையில் தற்பொழுது இன்னொரு பெரிய பிரச்சனையில் பேஸ்புக் நிறுவனம் சிக்கியுள்ளது.6.8…

2 hours ago

டிஜிட்டலில் தெறிக்க விடும் பள்ளி கல்விதுறை.! வியக்கும் பிற மாநிலங்கள்.!

தமிழக பள்ளி கல்விதுறை பல்வேறு மாற்றங்களை கண்டு வருகின்றது. மேலும், டிஜிட்டல் யுகத்தில் தற்போது வேகமாக சென்று கொண்டிருகின்றது. இதனால் மற்ற மாநிலங்களை காட்டிலும் பல்வேறு நடவடிக்கைகள்…

2 hours ago

இணையத்தில் லீக் ஆன பேஸ்புக் புகைப்படங்கள் – பயனாளர்கள் அதிர்ச்சி

பேஸ்புக்கில் இருந்து 6.8 மில்லியனுக்கும் அதிகமான புகைப்பட்டங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.உலகம் முழுவதும் சுமார் 200 கோடிக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளம்…

2 hours ago

ரூ.6,100க்கு செம்ம ஸ்டைலான ஸ்மார்ட்போன்… சியோமிக்கு போட்டியாக களம் இறங்கும் மொபிஸ்டார்

Mobiistar C1 Shine : வியட்நாம் நாட்டினைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான மொபிஸ்டார் (Mobiistar C1 Shine) தற்போது புதிய போன் ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது.Mobiistar…

2 hours ago

வானிலிருந்து வந்து 244000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..

இன்று வரை உலகத்தில் பெரும் மர்மம் நிறைந்த பகுதியாகவே மெசபடோமியா இருக்கின்றது. அங்கு ஏராளமான வினோதங்களும் நிறைந்துள்ளதாவே இருக்கின்றது. இன்று வரை பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் முகாமிட்டு வருகின்றனர்.அங்கு…

2 hours ago