குடிசை மாற்று வாரியம் கட்ட எதிர்ப்பு – பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த மாவட்ட ஆட்சியர்

Last Modified புதன், 14 மார்ச் 2018 (19:37 IST) கரூர் அருகே உள்ள காந்திகிராமம் பகுதியை அடுத்த நரிக்கட்டியூர் பகுதியில் சுமார் 222 குடியிருப்புகள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம், கட்டப்பட்டு அந்த வீடுகளை, தனித்தனி நபர்களாக, அரசு அதிகாரிகள், அலுவலர்கள் மட்டுமில்லாமல், பொதுமக்களும் சிறுக, சிறுக பணம் கொடுத்து வாங்கியுள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக வசித்து வரும் அவர்களுக்கு, அதே பகுதியில் வீட்டு வசதி வாரியமும் காலி மனைகளை விளையாட்டு திடலுக்கு ஒதுக்கிய நிலையில், அந்த இடத்தில் கரூர் மாவட்ட நிர்வாகம், துப்புரவு தொழிலாளர்களுக்கு குடிசை மாற்று வாரியம் வீடு கட்டித்தர 192 வீடுகளை ஒதுக்கிய நிலையில், அதற்கான வேலைகள் செய்ய, முழு முனைப்புடன் நிர்வாகம் மேற்கொண்டு வரும் நிலையில், அந்த பகுதி பொதுமக்கள் இன்றுடன் மூன்றாவது நாளாக, பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
இந்த நிலையில் இன்று ஆயுதப்படை போலீஸார் அங்கு குவிக்கப்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், அதே பகுதிக்கு நேரிலேயே வந்து குடிசை மாற்று வாரியத்தின் மேப்பையும், அதற்கான முழு விபரத்தையும் ஆராய்ந்ததோடு, அந்த பகுதி மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றதோடு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்கள் குறைகளை கேட்க எப்போதும் நான் (கலெக்டர் அன்பழகன்)இருப்பேன் என்று வாக்குறுதியும் கொடுத்தார். மேலும் இதே வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வாசிகள், இதே பகுதியில், குடிசை மாற்று வாரியத்தினர் வீடுகள் கட்டினால், பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படுமென்றும் கூறினார்கள். கரூர் சி.ஆனந்தகுமார்

Share

Recent Posts

பேஸ்புக், டுவிட்டருக்கு போட்டியாக தமிழரின் சமூக வலைத்தளம்

இணையத்தில் சமூக வலைத்தளம் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஃபேஸ்புக், ட்விட்டர் தான். இவை தவிர பல்வேறு இதர சேவைகள் இருந்தாலும் இந்த சேவைகள் பெரும்பாலும் வெளிநாட்டு…

2 hours ago

உஷார்.! உங்கள் பேஸ்புக் புகைப்படங்களும் கூட லீக் ஆகி இருக்கலாம்.!

பேஸ்புக் நிறுவனத்திற்கு 2018 ஆம் ஆண்டு மிகவும் மோசமான ஆண்டாகவே இருந்திருந்தது. வருடத்தின் இறுதியை நெருங்கிவிட்ட நிலையில் தற்பொழுது இன்னொரு பெரிய பிரச்சனையில் பேஸ்புக் நிறுவனம் சிக்கியுள்ளது.6.8…

2 hours ago

டிஜிட்டலில் தெறிக்க விடும் பள்ளி கல்விதுறை.! வியக்கும் பிற மாநிலங்கள்.!

தமிழக பள்ளி கல்விதுறை பல்வேறு மாற்றங்களை கண்டு வருகின்றது. மேலும், டிஜிட்டல் யுகத்தில் தற்போது வேகமாக சென்று கொண்டிருகின்றது. இதனால் மற்ற மாநிலங்களை காட்டிலும் பல்வேறு நடவடிக்கைகள்…

2 hours ago

இணையத்தில் லீக் ஆன பேஸ்புக் புகைப்படங்கள் – பயனாளர்கள் அதிர்ச்சி

பேஸ்புக்கில் இருந்து 6.8 மில்லியனுக்கும் அதிகமான புகைப்பட்டங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.உலகம் முழுவதும் சுமார் 200 கோடிக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளம்…

2 hours ago

ரூ.6,100க்கு செம்ம ஸ்டைலான ஸ்மார்ட்போன்… சியோமிக்கு போட்டியாக களம் இறங்கும் மொபிஸ்டார்

Mobiistar C1 Shine : வியட்நாம் நாட்டினைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான மொபிஸ்டார் (Mobiistar C1 Shine) தற்போது புதிய போன் ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது.Mobiistar…

2 hours ago

வானிலிருந்து வந்து 244000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..

இன்று வரை உலகத்தில் பெரும் மர்மம் நிறைந்த பகுதியாகவே மெசபடோமியா இருக்கின்றது. அங்கு ஏராளமான வினோதங்களும் நிறைந்துள்ளதாவே இருக்கின்றது. இன்று வரை பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் முகாமிட்டு வருகின்றனர்.அங்கு…

2 hours ago