அதிர்ச்சி! வேலை செய்யாமல் தடுப்பணை; வெற்று கல்வெட்டினால் வேதனை

உடுமலை : உடுமலை அருகே, குடிமங்கலத்தில் வேலை செய்யாமலேயே, தடுப்பணை மேம்படுத்தப்பட்டுள்ளதாக வைக்கப்பட்டுள்ள வெற்று கல்வெட்டினால், மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.குடிமங்கலம் ஒன்றியத்தில், 23 ஊராட்சிகளில், 90க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மத்திய அரசின் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டத்தின் கீழ், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.அதன்படி, 2017 – 18ம் நிதியாண்டில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், ஊராட்சிகளிலுள்ள தடுப்பணை மேம்படுத்துதல், குளம், குட்டைகள் சீரமைத்தல், பொது இடங்களில் மரக்கன்றுகள் வைத்தல், இயற்கை உரத்தொட்டி அமைத்து மண்புழு உரம் உற்பத்தி மேற்கொள்ளுதல் உட்பட பல்வேறு திட்டங்கள் நடந்து வந்தன.இந்த நிதியாண்டு மார்ச் 31ம் தேதியுடன் முடிவதால், தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற வேலைகளுக்கு, கல்வெட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன.மேம்பாடு எங்கே?அதன்படி, குடிமங்கலம் ஊராட்சி, முத்துசமுத்திரம் செல்லும் வழியில், 16.15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை மேம்படுத்தப்பட்டுள்ளதாக, கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது. ஆனால், தடுப்பணை பராமரிப்பில்லாமல் சிதிலமடைந்த நிலையிலே தற்போதும் காட்சியளிக்கிறது.பணிகள் மேற்கொள்ளாமலேயே மேம்படுத்தப்பட்டுள்ளதாக, வெற்று கல்வெட்டு மட்டுமே வைக்கப்பட்டுள்ளதால், மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தடுப்பணை மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட, 16.15 லட்சம் ரூபாய் நிதி எங்கே சென்றது என்று தெரியாமல் மக்கள் குழப்பத்தில் உள்ளனர். இதுபோன்று, திட்டங்களை செயல்படுத்தாமல், மக்களை ஏமாற்றி வரும் அதிகாரிகள் மற்றும் ஒன்றிய நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்:பொதுமக்கள் கூறுகையில், ‘இங்கு மட்டும் தான் இதுபோல், வெற்று கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளதா, அனைத்து பகுதிகளிலும் வேலைகள் மேற்கொள்ளப்படாமல் கல்வெட்டுடன் பணியை ஒன்றிய நிர்வாகம் முடித்துவிட்டதா என்று ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்யவேண்டும்’ என்றனர்.மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை அறிவித்த போதிலும், கிராமங்களுக்கும், மக்களுக்கும் சென்றுசேராத நிலையே காணப்படுகிறது.

Share

Recent Posts

ஹிப்ஹாப் ஆதியின் நட்பே துணை படத்தின் ரிலீஸ் தேதி வெளியிட்ட படக்குழு

பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் `நட்பே துணை'. ஹாக்கி விளையாட்டு மற்றும் நட்பை மையப்படுத்திய இந்த படத்தில் ஆதி ஜோடியாக…

3 hours ago

படப்பிடிப்பில் இயக்குனருடன் பிரபல நடிகை மோதல்

தமிழில் பாயும் புலி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம், சத்ரியன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா தத்தா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார்.தற்போது…

3 hours ago

காஷ்மீரில் அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி

ஜம்மு:ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த பிப்ரவரி மாதம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவ படையினர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு சென்று தீவிரவாத முகாம்கள்…

3 hours ago

கன்னியாகுமரி தொகுதியில் கோடீஸ்வர வேட்பாளர்களுக்கு இடையே போட்டியா?

கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ், பாஜக மற்றும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களின் சொத்து பட்டியல் அடிப்படையில் பார்த்தால் அங்கு கோடீஸ்வர வேட்பாளர்களுக்கு இடையிலான போட்டி போல் காட்சியளிக்கிறது.17-ஆவது…

3 hours ago

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும்; அமைச்சர் அருண் ஜெட்லி உறுதி!

2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் மாற்றத்தை கொண்டுவருபவர் மோடி தான் எனவும், வரும் தேர்தலில் பாஜக வெற்றிப் பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என மத்திய நிதி…

3 hours ago

Exclusive Interview: மோடி அலை குறித்து மே 23 அன்று தெரியும் -அருண் ஜேட்லி

மத்திய அமைச்சர் நிதி மந்திரி அருண் ஜெட்லியிடம் ஜி நியூஸ் பத்திரிகை தலைமை ஆசிரியர் சுதிர் சௌத்ரி நேர்காணலை மேற்க்கொண்டார். அப்பொழுது அவர் வரும் மக்களவை தேர்தலைக்…

3 hours ago