`பாம்பன் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு’ – பாலத்தை கடக்க முடியாமல் காத்திருக்கும் கப்பல்!

இந்திய பெருங்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையினால் பாம்பன் துறைமுகத்தில் 3-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் பாம்பன் பாலத்தை கடக்க முடியாமல் இழுவைக் கப்பல் ஒன்று குந்துக்கால் கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தென் மேற்கு இலங்கை – மாலத்தீவு இடையே உள்ள இந்திய பெருங்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறும் வாய்ப்புள்ளதாகவும், இதனால் காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இது திருவனந்தபுரத்திற்கு தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் 390 கி.மீ தூரத்தில் மையம் கொண்டிருக்கும் இந்தக் காற்றழுத்த தாழ்வு நிலை அரபிக்கடலை நோக்கி நகர்வதால் தென்மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி பாம்பன் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இதனிடையே தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கடலூர் துறைமுகத்திற்கு பாம்பன் பாலம் வழியாகச் செல்ல இழுவைக் கப்பல் ஒன்று பாம்பன் கடல் பகுதிக்கு வந்தது. காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் இந்தக் கப்பல், பாலத்தினை கடந்து செல்ல துறைமுக அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை. இதனால் குந்துக்கால் கடல் பகுதியில் இந்தக் கப்பல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு பாம்பன் பாலத்தை கடக்க இருந்த கப்பல் ஒன்று காற்றின் வேகத்தினால் இழுத்துச் செல்லப்பட்டு ரயில்பாலத்தில் மோதியதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது பாலத்தினை கடக்க கப்பலுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
Tags: vikatan

Recent Posts

தேதி, நேரம் குறித்த ஆஸ்தான ஜோதிடர்… நாளை காலை திமுகவில் இணைகிறார் செந்தில் பாலாஜி!

கடந்த சில நாட்களாக உலாவிவந்த செய்தி கிட்டத்தட்ட கிளைமேக்ஸை நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஆமாம், நாளை காலை, அதாவது 13ஆம் தேதி காலை 10.45 மணிக்கு திமுக தலைமைக்கு கழகம்…

2 hours ago

இந்தாளு நம்மளை நிம்மதியா வாழவிட்டமாட்டார்…! ரஜினி வெளிப்படையாக இப்படி புலம்பித் தீர்த்தது யாரால்?

எல்லாமே வேஷம், அனைத்தும் மேக் - அப் என்று நிரம்பி வழியும் சினிமா உலகில், இமேஜைப் பற்றிக் கவலைப்படாமல் திறந்த புத்தகமாக திரிபவர் ரஜினிகாந்த்தான். இதோ சில…

2 hours ago

ரகசியமாக 2 கோடி கொடுத்த நடிகர்! துணிச்சலாக ஒப்புக்கொண்ட நடிகை!

'குளிர்ச்சி' யான கதாநாயகி தற்போது ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வருகிறார். இப்போதுதான் இவருடைய மார்க்கெட் மெல்ல மெல்ல களைகட்டி வருகிறது. அவருக்கு நிறைய பட…

2 hours ago

ம.பி.,யில் ஆட்சி அமைக்க காங்கிரஸுக்கு அகிலேஷ் ஆதரவு

மத்தியப் பிரதேசத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸுக்கு ஆதரவுக் கரம் நீட்டத் தயாராக இருப்பதாக சமாஜ்வாடி கட்சியின் தலைவரும் உ.பி. முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்திருக்கிறார்.மத்தியப் பிரதே…

2 hours ago

ராகுல் காந்தி பாஸாகிவிட்டார்; மூத்த தலைவர் புகழாரம்

5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் காங்கிரஸ் கட்சி 3 மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றியது. இதனையடுத்து பல்வேறு தலைவர்களும் பிரபலங்களும் இந்த தேர்தல்…

2 hours ago

தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளரை ட்விட்டரில் அடிச்சிதூக்கிய தல ரசிகர்கள்

தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயினின் ட்விட்டர் பக்கத்தில் அஜித் ரசிகர்கள் விஸ்வாசம் போஸ்டரை பதிவிட்டு திணறடித்துள்ளனர்.சினிமாவின் ஆரம்ப கட்டத்தில் இருந்தே நடிகர்கள் நடிகைகள் மத்தியில்…

2 hours ago