தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான புயல்சின்னம் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நிலைக் கொண்டுள்ளது. இதனால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 3-ஆம் எண் எச்சரிக்கை புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் , இலங்கையின் தென்பகுதியில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி மாலத்தீவு அருகில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இதனால் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கன்னியாகுமரி கடல் மற்றும் மாலத்தீவு பகுதிகளுக்கு இடையே நிலை கொண்டிருப்பதால் கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரம் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடல்பகுதியில் 45 முதல் 60 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் தென் தமிழகம், கன்னியாகுமரி, மாலத்தீவு பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வரை, 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் மீனவர்களுக்கு எச்சரிகை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மீனவர்கள் மற்றும் கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, கடந்த 4 நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் பெரியதாழை வரையிலான கடற்கரையோரப் பகுதிகளில் 3,500க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ஆகியவை கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. இந்நிலையில் மேலும் 2 நாட்கள் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மாவட்ட மீன்வளத்துறை மூலம் மீனவர் சங்கங்கள் வழியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் கடந்த 2 நாட்களாக வெயிலே தெரியாமல் பலத்த காற்று வீசியும், அவ்வப் போது மழையும் பெய்தும் வருகிறது.

Share
Tags: vikatan

Recent Posts

TRAI அறிமுகப்படுத்தியுள்ள புதிய அப்ளிகேஷன் இப்பொழுது உங்களுக்கு எளிதாகும்

சிறப்பு செய்திசமீபத்தில் Telecom Regulatory Authority of India ஒரு சேனலின் விலை நிர்ணயிக்கும் வழங்குநர்களால் ஒளிபரப்பப்பட வேண்டும் என்று சேனல் தீர்மானிக்கிறபடி, ஆணை வழங்கியது இதை…

6 hours ago

சியோமி வேறலெவல்: மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ வீடியோ வெளியீடு.!

சியோமி நிறுவனம் தொடர்ந்து அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது, மேலும் இந்நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திக் கொண்டு தான…

6 hours ago

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத கும்பலுடன் தொடர்புடைய 9 ஸ்லீப்பர் செல்ஸ்கள் கைது.!

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் உள்ள அவுரங்காபாத் பகுதியில், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத கும்பலுடன் தொடர்பிலிருந்த 9 ஸ்லீப்பர் செல்ஸ் இளைஞர்களை மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.குடியரசு…

6 hours ago

paytm Republic Day Sale பவர்பேங்கில் அதிரடி ஆபர்

paytm Republic Day Sale:ஆபர் அறிவித்துள்ளது. இதனுடன் இந்த குடியரசு தின விழாவில் எக்கச்சக்க ஆபர்கள் இந்த ஆபரின் கீழ் நல்ல டிஸ்கவுண்ட் வாரி வழங்குகிறது இதனுடன்…

6 hours ago

Honor View 20 Vs Redmi Note 7 எந்த போன் வழங்குகிறது மிக சிறந்த அம்சம்..!

2019 ஸ்மார்ட்போன் சந்தையில் மிக சிறந்த சாதனையுடன் வந்துள்ளது இதனுடன் இதில் பிங்கர்ப்ரின்ட் டிஸ்பிளே சென்சாரும் வருகிறது. Honor View 20 மற்றும் Redmi Note 7…

6 hours ago

இந்தியாவின் பெஸ்ட் டேப்லெட்கள்..!

Here's is the summary list of Digit Top 10 Best Smartphones in India

6 hours ago