பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை காங்கிரஸார் பக்கோடா விற்பனை!

பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மாவட்ட காங்கிரஸ் பட்டதாரி அணியின் சார்பாக பக்கோடா தயாரித்து விற்பனை செய்யும் நூதனப் போராட்டம் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பேசிய பிரதமர் மோடி, ‘பக்கோடா தயாரித்து விற்பனை செய்வதும் ஒரு வேலை வாய்ப்பு தான். அந்தத் தொழில் செய்பவர்கள் நாளொன்றுக்கு 200 ரூபாய் சம்பாதிக்கிறார்கள். அதனால் அதனையும் நாம் ஒரு வேலை வாய்ப்பாகவே கருத வேண்டும்’ எனத் தெரிவித்து இருந்தார். பிரதமரின் இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. எதிர்க்கட்சியினர் இந்தக் கருத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

நாடுமுழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர், பிரதமர் மோடியின் இந்தப் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பக்கோடா தயாரித்து விற்பனை செய்து தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில், நெல்லை மாவட்ட காங்கிரஸ் பட்டதாரி அணியின் சார்பாக பக்கோடா தயாரித்து விற்பனை செய்யும் போராட்டம் நடத்தப்பட்டது. நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் கட்சி அலுவலகம் முன்பாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், அங்கேயே அடுப்பை மூட்டி பக்கோடா தயாரித்தனர். பின்னர் அவற்றை அந்த வழியாகச் சென்றவர்களுக்கு விற்பனை செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், ‘பிரதமர் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக பேசுகையில், தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்பதாக பொய்யான வாக்குறுதி கொடுத்தார்கள். ஆனால் அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், படித்த இளைஞர்களை அவமதிக்கும் வகையில் பக்கோடா விற்பனை செய்யுமாறு கூறி உள்ளார். இது நாடுமுழுவதும் உள்ள படித்த இளைஞர்களுக்கு பெரும் அவமானத்தை கொடுத்திருக்கிறது என்பதை ஆட்சியாளர்களுக்குப் புரிய வைக்கும் வகையில் இந்த போராட்டத்தில் ஈடுபட்டோம்’ என்றார்கள்.

Share
Tags: vikatan

Recent Posts

கூகுள் புதிய ஆண்ட்ராய்டு பெயரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு Q இயங்குதளம் ஆண்ட்ராய்டு 10 என்ற பெயரில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இத்துடன் புதிய இயங்குதளத்துக்கான லோகோவையும் வெளியிட்டது.இதுவரை ஆண்ட்ராய்டு Q…

11 hours ago

கணினியை இப்படி எல்லாம் பயன்படுத்தி இருக்கிறீங்களா?

இன்றைய உலகில் கணினியின் தேவை அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. ஒவ்வொருவரும் கணினியின் பயனை உணர்ந்துக்கொள்வது அவசியமாகிவிட்டது. கணினியைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாதாகிவிட்டது. இன்று கணினியை எளிய முறையில் கையாள…

11 hours ago

RS 13,999 விலையில் அறிமுகமானது MOTOROLA ONE ACTION.

மோட்டோரோலா ஒன் அதிரடி இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த புதிய மோட்டோரோலா தொலைபேசி ஆகஸ்ட் 30 முதல் விற்பனைக்கு வருகிறது. நிறுவனத்தின் மற்ற ஸ்மார்ட்போன்களைப் போலவே,…

11 hours ago

200 ஆண்டுகள் ஏலியனாக வாழ்வேன் : நித்தியானந்தா ! வைரலாகும் வீடியோ !

நித்தியானந்தா என்றாலே எப்போதும், பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. சுவாமி நித்தியானந்தா ஆன்மீகத்தையும் தாண்டி அறிவியல் பூர்வமாகவும், ஐன்டீன்ஸ் விதியை தவறு என்று கூறி உலகத்தையும் திருப்பி போட்டார்.இந்நிலையில்,…

11 hours ago

சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.!

இப்போது வரும் புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் மக்களுக்கு பயன்படும் வகையில் தான் இருக்கிறது, ஆனால் அந்த தொழில்நுட்பத்தை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும், எந்த இடத்தில் பயன்படுத்தக்…

11 hours ago

உணவாக மாறிய டைட்டானிக் கப்பல்! என்ன நடந்தது தெரியுமா?

ஒரு நூற்றாண்டிற்கு முன்னால் கடலுக்குள் மூழ்கிய ஆர்எம்எஸ் டைட்டானிக் கப்பல், அதன் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக ஒரு புதிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.கடலில் உள்ள உப்பு…

11 hours ago