இனி தபால் நிலையங்களிலேயே பாஸ்போர்ட் கிடைக்கும் – சேலம், வேலூரில் அறிமுகம்

மக்களின் வசதிக்காக தபால் அலுவலங்களில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் வசதி அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

பாஸ்போர்ட்டுக்கு காலதாமதம்

இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல தேவையான பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்க அலுவலகங்கள் நாடு முழுவதும் உள்ள முக்கிய பெருநகரங்களில் இயங்கி வருகின்றன. இங்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

முக்கிய பெருநகரங்களில் உள்ள இந்த அலுவலகங்களில் லட்சக்கணக்கான விண்ணப்பங்கள் குவிந்து வருவதால் பாஸ்போர்ட்களை பெற சில இடங்களில் கால தாமதம் ஏற்படுகிறது.
மேலும், கடைக்கோடி பகுதிகளில் வாழும் மக்கள் பெருநகரங்களை தேடி வரும் நிலையும் இருந்து வருகிறது.

தபால் நிலையங்களில் விண்ணப்பிக்கலாம்

இந்த சிரமத்தை குறைக்கவும் பாஸ்போர்ட் பெறும் நடைமுறைகளை எளிமைப்படுத்தவும் தீர்மானித்த மத்திய அரசு நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள தலைமை தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் வசதியை நடைமுறைப்படுத்த திட்டமிட்டது.

இதனையடுத்து, முதல்கட்டமாக தமிழ்நாடு, கர்நாடகம், ஜார்கண்ட், ராஜஸ்தான், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களின் முக்கிய நகரங்களில் உள்ள தலைமை தபால் நிலையங்களில் வரும் மார்ச் மாதத்தில் இருந்து பாஸ்போர் சேவை மையங்கள் உருவாக்கப்படும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில்…

தமிழ்நாட்டில் சேலம் மற்றும் வேலூர் தலைமை தபால் நிலையங்களிலும், கர்நாடக மாநிலத்தில் பெல்காம், தவங்கரே, ஹஸ்ஸன், குல்பர்கா, மைசூர் தலைமை தபால் நிலையங்களிலும் இதர மாநிலங்களிலும் சில முக்கிய தபால் நிலையங்களிலும் மார்ச் மாதம் 31-ந் தேதிக்கு முன்னதாக பாஸ்போட் வழங்கும் சேவை மையங்கள் செயல்பட தொடங்கும் என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

கறுப்பு பணம் பரம ரகசியமாம்… தகவல் சொல்லக் கூடாதாம்

டெல்லி: நாட்டில் எவ்வளவு கறுப்புப் பணப் புழக்கம் எவ்வளவு உள்ளது என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப் பட்ட கேள்விக்கு அது இரு நாடுகளுக்கு…

1 hour ago

இன்றைய (20.05.2019) பெட்ரோல், டீசல் விலை: இன்று அதிரடி மாற்றத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி!!

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை நிர்ணயித்து வந்தது. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டு, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை…

1 hour ago

இன்றைய(மே 20) பெட்ரோல் , டீசல் நேற்றைய விலையை விட அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொருத்து இந்தியாவில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றனர்.இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள…

1 hour ago

பிரச்சினையை டெபாசிட் பண்ணிட்டு வன்முறையை வட்டிக்கு வாங்கும் ட்ரம்ப் – வரி இல்லாத வர்த்தகம்

வாஷிங்டன்: சர்வதேச வர்த்தகத்தில் இந்தியா சீனாவுடன் கடும் மோதல் போக்கை கடைபிடித்து வரும் அமெரிக்க தன் அண்டை நாடுகளான கனடா மற்றும் மெக்ஸிகோ உடன் இணக்கமான போக்கை…

1 hour ago

பங்குச் சந்தையில் திடீர் உற்சாகம்: சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு

பங்குச் சந்தையில் வர்த்தகம் துவங்கிய போது மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.முந்தைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 37…

1 hour ago

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்வு

அந்நியச் செலாவணி சந்தையில் இன்று திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 79 காசுகள் உயர்ந்தது.சீனா-அமெரிக்கா இடையில் ஏற்பட்டுள்ள வர்த்தக நெருக்கடிக்கு பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல தீர்வு…

1 hour ago