அடுத்த ஆண்டு மே 3-இல் நீட் தேர்வு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

எம்பிபிஎஸ் படிப்புக்கான தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வு (நீட்) அடுத்த ஆண்டு மே 3-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. நிகழாண்டைப் போலவே எதிர்வரும் ஆண்டிலும் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டுக்கான நீட்தேர்வினை எழுத விரும்புவர்கள், வரும் டிசம்பர் 2-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். அடுத்த ஆண்டு மார்ச் 27-ஆம் தேதி தேர்வுக் கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம் என்றும், தேர்வு முடிவுகள் ஜூன் 4-ஆம் தேதி வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழாண்டில், நாடு முழுவதும் 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நீட் தேர்வினை எழுதியிருந்தனர். தமிழகத்தைப் பொருத்தவரை மொத்தம் 1.23 லட்சம் தேர்வெழுதியிருந்தனர். அவர்களில் 59,785 பேர் தேர்ச்சி பெற்றனர். முன்னதாக, நாடு முழுவதும் மொத்தம் 154 நகரங்களில், 2,546 மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டன. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங்கம், உருது ஆகிய 11 மொழிகளில் அத்தேர்வுகள் நடைபெற்றன. கடந்த 2016 மற்றும் 2017-இல் நீட் தேர்வை மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தி வந்த நிலையில், நிகழாண்டு முதல் தேசிய தேர்வுகள் முகமை அதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Share
Tags: dinamani

Recent Posts

எப்போதும் இளமையான சருமம் வேண்டுமா அப்போ அரிசி மாவ இப்படி யூஸ் பண்ணுங்க.

பளபளப்பான, மென்மையான மற்றும் பருக்கள் அற்ற சருமம் வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புவார்கள். ஆனால் எப்படியாவது முகத்தில் ஏதேனும் பரு அல்லது சரும பிரச்சனை வந்து…

1 hour ago

39 வயசாகியும் கரீனா கபூர் அழகாக ஜொலிப்பதன் பின்னணியில் உள்ள ரகசியம் இதுதாங்க…

கபூர் கண்டனின் மகளும், ராயல் பட்டோடி குடும்பத்தின் மருமகளுமான கரீனா கபூர், பாலிவுட்டின் முன்னணி நடிகைகளுள் ஒருவராவார். இவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், இவரை பெபோ என்றே…

1 hour ago

இடைத்தோதலில் போட்டியிடும் மஜத வேட்பாளா்கள் நாளை முடிவு: முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெகௌடா

பெங்களூரு: இடைத்தோதலில் போட்டியிடும் மஜத வேட்பாளா்களின் பெயா்களை நாளை ஞாயிற்றுக்கிழமை முடிவுசெய்யவிருக்கிறோம் என்று முன்னாள் பிரதமரும், மஜத தேசியத்தலைவருமான எச்.டி.தேவெகௌடா தெரிவித்தாா்.இது குறித்து பெங்களூரு, மஜத தலைமை…

3 hours ago

ஹரியாணா பேரவைத் தோதலில் 70-க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும்: முதல்வா் மனோகா் லால் கட்டா்

சண்டீகா்: ஹரியாணா சட்டப் பேரவைத் தோதலில் 70-க்கும் அதிகமான தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என்று அந்த மாநில முதல்வா் மனோகா் லால் கட்டா் தெரிவித்துள்ளாா்.ஹரியாணா சட்டப் பேரவைக்கு…

3 hours ago

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படைகள் தொடர்ந்து தாக்குதல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக்கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் விடியவிடிய துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தியது.போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்மு-காஷ்மீர்…

3 hours ago

4 நாள் அரசுமுறை பயணமாக வங்கதேசம் சென்றாா் கடற்படை தளபதி கரம்வீா் சிங்

புது தில்லி: வங்கதேசத்துடனான கடல்சாா் பாதுகாப்பு உறவை மேம்படுத்தும் பொருட்டு, அந்நாட்டுக்கு கடற்படை தலைமைத் தளபதி கரம்வீா் சிங் 4 நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளாா்.இதுதொடா்பாக இந்திய…

3 hours ago