நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 7 பேரை சிறைப்பிடித்த இலங்கை கடற்படை

ராமேஸ்வரம்

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக விசைப்படகை கைப்பற்றி அதிலிருந்த 7 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர்.

நேற்று ராமேஸ்வரத்திலிருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். செவ்வாய்க்கிழமை அதிகாலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த கிசிங்கர் என்பவருக்குச் சொந்தமான ஒரு விசைப்படகை ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கைப்பற்றி அதிலிருந்து கிசிங்கர், மரிய கிதியோன், சிம்சோன், மரிய மில்லர், இன்னாசி, ஜார்ஜ், மெல்சன், ஆகிய 7 மீனவர்களை சிறைப்பிடித்தனர்.

சிறைப்பிடிக்கப்பட்ட 7 மீனவர்களும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

7 மீனவர்கள் மீதும் இலங்கை கடல் பகுதியில் எல்லை தாண்டி நுழைந்து மீன்பிடிக்கும் வெளிநாட்டுப் படகுகளுக்கு அபராதம் மற்றும் தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து யாழ்ப்பாணம் சிறையில் மீனவர்கள் அடைக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.

Share

Recent Posts

அங்கீகரிக்கப்பட்ட மருந்துக் கடைகளுக்கு குறைந்தவிலையில் மருந்துகள் வழங்கப் பரிசீலனை: மத்திய அமைச்சா் சதானந்த கௌடா

அங்கீகரிக்கப்பட்ட மருந்துக் கடைகளுக்கு குறைந்த விலையில் மாத்திரைகள், மருந்துகள் வழங்கப் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சா் சதானந்த கெளடா காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை…

8 hours ago

கீழடி முன்னாள் கண்காணிப்பாளர் அமர்நாத் அஸ்ஸாமில் இருந்து கோவாவுக்கு மாற்றம்

டெல்லி: கீழடி அகழாய்வின் கண்காணிப்பாளராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணா அஸ்ஸாமில் இருந்து கோவாவுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் சென்னைக்கு இடமாறுதல் கேட்டிருந்த நிலையில் கோவாவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.கீழடி…

8 hours ago

அரசியல், கிரிக்கெட்டில் எதுவும் நடக்கலாம்: கட்கரி

புதுடில்லி: அரசியல், கிரிக்கெட்டில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என மஹாராஷ்டிர அரசியல் குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய…

8 hours ago

மே 17ம் தேதி சபரிமலை செல்வேன் – திருப்தி தேசாய் மீண்டும் உறுதி!

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று தொடரப்பட்டிருந்த வழக்கில் அனைத்துப் பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் முன்பு தீர்ப்பு வழங்கியிருந்தது. இதனை மறுசீராய்வு…

8 hours ago

“ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்” – அமித் ஷா

ரஃபேல் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு உண்மைக்கு கிடைத்த வெற்றி என பாஜக கூறியுள்ளது. மேலும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க…

8 hours ago

300 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் உயிருடன் மீட்பு!

மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள கல்வான் என்ற கிராமத்தில், 300 அடி ஆழ்துளை கிணற்றில் 6 வயது சிறுவன் இன்று காலை தவறி விழுந்தான். இதுகுறித்து…

8 hours ago