பாசத்துக்கு முன்னாடி பனி; பகைக்கு முன்னாடி புலி: கொள்ளையர்களுக்கு எதிராகப் போராடிய முதியவர்கள் குறித்து ஹர்பஜன் ட்வீட்

பாசத்துக்கு முன்னாடி பனி. ஆனால், பகைக்கு முன்னாடி புலி என்று கொள்ளையர்களுக்கு எதிராகப் போராடிய முதியவர்கள் குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பதிவிட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம், கடையம் அருகே உள்ள கல்யாணிபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகவேல் (70). இவரது மனைவி செந்தாமரை (65). இவர்கள், தங்களுக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இவர்களுடைய பிள்ளைகள் சென்னையில் வசித்து வருகின்றனர். எனவே, சண்முகவேல், செந்தாமரை மட்டும் அங்கு வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்றிரவு (ஞாயிறு இரவு) வீட்டின் போர்டிகோ பகுதியில் சண்முகவேலு நாற்காலியில் அமர்ந்திருந்தபோது, முகத்தைத் துணியால் மூடிக்கொண்டு 2 கொள்ளையர்கள் வீட்டில் புகுந்தனர்.

இதனைத் தொடர்ந்து கொள்ளையர்களை தைரியமாக எதிர்கொண்டு அவர்களை நாற்காலியைக் கொண்டு இரு முதியவர்களும் விரட்டி அடித்தனர். இது தொடர்பான சிசிடிவி காட்சி திங்கட்கிழமை வெளியிடப்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி அனைவராலும் பகிரப்பட்டது.

மேலும், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நெல்லை முதியவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவர்களை இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்பஜன் சிங் பாராட்டியுள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் ஹர்பஜன் பதிவிடுகையில், ”திருட்டுப் பசங்க எல்லாத்துக்கும் இந்த வீடியோ பாத்தா அல்லு விடும் .என்ன #வீரம் பாசத்துக்கு முன்னாடி நான் பனி. பகைக்கு முன்னாடி #புலின்னு சொல்ற மாதிரி #மெர்சல் காட்டிட்டாங்க. இது தமிழனின் #நேர்கொண்டபார்வை.

திருடர்களுக்கு எதிராகப் போராடிய திருநெல்வேலியின் முதியவர்களுக்குத் தலை வணங்குகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

function catchException() {try{ twitterJSDidLoad(); }catch(e){}}

Share

Recent Posts

கூகுள் புதிய ஆண்ட்ராய்டு பெயரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு Q இயங்குதளம் ஆண்ட்ராய்டு 10 என்ற பெயரில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இத்துடன் புதிய இயங்குதளத்துக்கான லோகோவையும் வெளியிட்டது.இதுவரை ஆண்ட்ராய்டு Q…

10 hours ago

கணினியை இப்படி எல்லாம் பயன்படுத்தி இருக்கிறீங்களா?

இன்றைய உலகில் கணினியின் தேவை அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. ஒவ்வொருவரும் கணினியின் பயனை உணர்ந்துக்கொள்வது அவசியமாகிவிட்டது. கணினியைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாதாகிவிட்டது. இன்று கணினியை எளிய முறையில் கையாள…

10 hours ago

RS 13,999 விலையில் அறிமுகமானது MOTOROLA ONE ACTION.

மோட்டோரோலா ஒன் அதிரடி இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த புதிய மோட்டோரோலா தொலைபேசி ஆகஸ்ட் 30 முதல் விற்பனைக்கு வருகிறது. நிறுவனத்தின் மற்ற ஸ்மார்ட்போன்களைப் போலவே,…

10 hours ago

200 ஆண்டுகள் ஏலியனாக வாழ்வேன் : நித்தியானந்தா ! வைரலாகும் வீடியோ !

நித்தியானந்தா என்றாலே எப்போதும், பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. சுவாமி நித்தியானந்தா ஆன்மீகத்தையும் தாண்டி அறிவியல் பூர்வமாகவும், ஐன்டீன்ஸ் விதியை தவறு என்று கூறி உலகத்தையும் திருப்பி போட்டார்.இந்நிலையில்,…

10 hours ago

சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.!

இப்போது வரும் புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் மக்களுக்கு பயன்படும் வகையில் தான் இருக்கிறது, ஆனால் அந்த தொழில்நுட்பத்தை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும், எந்த இடத்தில் பயன்படுத்தக்…

10 hours ago

உணவாக மாறிய டைட்டானிக் கப்பல்! என்ன நடந்தது தெரியுமா?

ஒரு நூற்றாண்டிற்கு முன்னால் கடலுக்குள் மூழ்கிய ஆர்எம்எஸ் டைட்டானிக் கப்பல், அதன் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக ஒரு புதிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.கடலில் உள்ள உப்பு…

10 hours ago