பா.ரஞ்சித் குற்றச்சாட்டுக்கு சான்று உள்ளதா ? சீமான் கேள்வி

பிரபல இயக்குநர் பா. ரஞ்சித் மீது திருப்பனந்தாள் போலீஸார் சமீபத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது திரைத்துறையினர் மத்தியிலும், அவரது ஆதரவாளர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் : ரஞ்சித்தின் குற்றச்சாட்டுக்கு சரித்திரச் சான்றுகள் உள்ளதா என்று கேள்வி எழுப்பியுள்ளார். அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி , காலா ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குநர் பா. ரஞ்சித். அவர் அவ்வப்போது அரசியல் தொடர்பான கருத்துக்களை கூறிவருகிறார். ஆனால் சில நேரங்களில் அவர் கூறும் கருத்துகள் சர்ச்சைகளை ஏற்படுத்துகிறது. கடந்த 5 ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் திருப்பனந்தாள் என்ற பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பா.ரஞ்சித் கலந்துகொண்டார்.
அப்பொது பேசிய ரஞ்சித் மன்னர் ராஜ ராஜ சோழன் பற்றி கடுமையான விமர்சித்தார். அதில் முக்கியமாக மன்னர் ராஜராஜனை அவன்,இவன் என ஒருமையில் விமர்சித்தார். ஒருகட்டத்தில் ராஜ ராஜ சோழன் ஒரு அயோக்கியன் என்றும் ராஜ ராஜ சோழன் காலத்தில் தான் தலித்களின் நிலங்கள் பறிக்கப்பட்டது என்று கூறினார். இது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது. பா. ரஞ்சித்தின் பேச்சுக்கு சமுக வலைதளங்களிலும் கடுமையான விமர்சங்கள் எழுந்தது. பல இந்துஅமைப்புகளும் அவருக்கு எதிராக கண்டனம் தெரிவித்தன. இதனையடுத்து பா.ரஞ்சித் மீது திருப்பனந்தாள் போலிஸார் சமீபத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கலவரத்தைத்தூண்டும் விதமாகப் பேசியதாக 153,153A ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும் கலவரத்தைத் தூண்டும் விதமாக பேசியதாக பா,.ரஞ்சித் மீது திருப்பனந்தாள் போலீஸார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து விசாரணை விரைவில் நடைபெறவுள்ளது. இயக்குநர் பா. ரஞ்சித் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் சினிமாதுறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் : ரஞ்சித்தின் குற்றச்சாட்டுக்கு சரித்திரச் சான்றுகள் உள்ளதா என்று கேள்வி எழுப்பியுள்ளார் மேலும் , பல்வேறு நாடுகளை வென்று வல்லரவை நிறுவிய மன்னர் சொந்த நாட்டு குடிமக்களின் நிலத்தை எடுத்துக்கொண்டார் என்பதற்கு என்ன சான்று உள்ளது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Share

Recent Posts

திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் ரவிக்குமார் வெற்றி!

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கே.எஸ்.ரவிக்குமார் வெற்றி பெற்றுள்ளார்.தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல்…

18 hours ago

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து வந்து லொஸ்லியா இடம்பெற்றது எப்படி என உண்மையை வெளியிட்ட அவரது நெருங்கிய தோழி

பிரபல தமிழ் டிவி சேனலில் வரும் பிக்பாஸின் மூன்றாவது சீசனில் ரசிகர்களிடம் வேகமாக பிரபலமாகி வருவது லொஸ்லியா தான். அவ்வாறு நாட்கள் செல்ல செல்ல இவருக்கென புதுபுது…

18 hours ago

திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் ஆர்.கே.செல்வமணி வெற்றி

திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் 1,386 வாக்குகள் பெற்று வெற்றி ஆர்.கே.செல்வமணி பெற்றார். இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவு நிறைவடைந்து, உடனே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.…

18 hours ago

காப்பான் படத்தில் ஐந்து பாடல்கள் இவைதான்

இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள். இந்த நிலையில் 'காப்பான்' திரைப்படத்தின் டிராக்லிஸ்ட் சற்று முன் வெளியாகி உள்ளதுஇந்த படத்தின்…

18 hours ago

அனைத்து சிம்பு ரசிகர்களும் தெறிக்க விடும் ஒரு முக்கியமான தருணம்

தமிழ் திரையுலகில் நடிகர் சிம்பு மிகுந்த திறமை கொண்டவர் என்பது பெரும்பான்மையான ரசிகர்களுக்கு தெரியும். மேலும் குழந்தையாக இருக்கும் போது தன் தந்தை டி.ராஜேந்தரால் சினிமாவில் நடிகராக…

18 hours ago

சூப்பர் ஹிட்டான 96 படத்தின் ரீமேக்கில் அதே மஞ்சள் நிற சுடிதாரில் அசத்தும் நடிகை சமந்தா

சென்ற வருடம் தமிழில் விஜய்சேதுபதி, த்ரிஷாவின் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் 96 . ஏற்கனவே கன்னடத்தில் ரீமேக்கானதை தொடர்ந்து தெலுங்கிலும் தற்போது ரீமேக்காகி வருகிறது. இந்த…

18 hours ago