காவல்துறை விசாரணையில் உயிரை இழப்பது ஏழைகள்தான்! -சிவகாசி லாக்கப் மரணம் சொல்லும் சேதி!

காவல் நிலையத்தில் விசாரணை கைதிகள் இறப்பது தொடர்ந்து நடக்கிறது. சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் இன்று விசாரணை கைதி ராமச்சந்திரன் மர்மமான முறையில் உயிரிழந்திருக்கிறார்.

சிவகாசி – பள்ளபட்டி – முத்துராமலிங்கபுரம் காலனியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் என்ற பாபு. 31 வயதே ஆன இவர், மின் மோட்டார் வயர் திருடிய வழக்கிற்காக சிவகாசி கிழக்கு காவல் நிலையத்திற்கு நேற்று அழைத்துச் செல்லப்பட்டார்.

விசாரணையின்போது, மது மற்றும் கஞ்சா போதையில் அவர் இருந்ததாகவும், லாக்கப் அறையில் தூங்க வைத்ததாகவும், இன்று காலை விசாரித்தபோது மயங்கி விழுந்ததாகவும், சிவகாசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றபோது, ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதாகவும், நடந்ததை பூடகமாக விவரித்தனர் காவல்துறையினர்.
ஆனாலும், இந்த மரணத்தால் மிகவும் பதற்றமாகக் காணப்படுகின்றனர்.

இறந்தவரின் உடலை வீடியோ எடுப்பதற்கு ஊடகங்களை அனுமதிக்கவில்லை. அதனால், காவல்துறையினர் மீது சந்தேகம் வலுப்பெற்று, ஊடகவியலாளர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்க, கப்சிப் ஆனார்கள் காக்கிகள். இறந்த ராமச்சந்திரன் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், சிவகாசி அரசு மருத்துவமனை வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

காவல் மரணங்களைச் சட்டம் ஏற்பதில்லை. பாதுகாப்பை மையமாக வைத்துத்தானே காவல்துறையே இயங்குகிறது. பொதுவாக, காவல் துறை விசாரணையின் போக்கானது, ஏழைகளிடமும் பணக்காரர்களிடமும் ரொம்பவே மாறுபடுகிறது. அதனால், காவலில் மரணமடைபவர்கள் பெரும்பாலும் ஏழைகளாகவே இருக்கின்றனர்.

ஏழைகள் என்றால் விசாரணையின்போது கண்மூடித்தனமாக அடிக்கலாம் என்ற மனநிலை காக்கிகளிடம் காணப்படுகிறது. அதுவும், திருட்டு வழக்குகளில்தான் கண்மூடித்தனமாக தாக்கப்படுகிறார்கள். காவல்துறையினரைப் பொறுத்தமட்டிலும், எந்த வழக்கானாலும், அதற்கு ஒரு குற்றவாளி தேவைப்படுகிறார். அவர் குற்றம் செய்தாரோ, இல்லையோ, குற்றத்தை ஒப்புக்கொள்ள வைப்பதற்காக அடிக்கின்றனர்.

ராமச்சந்திரன் மரணத்தில், , எஸ்.எஸ்.ஐ. மற்றும் தலைமைக்காவலர் என சந்தேக வளையத்திற்குள் இருவர் வருகின்றனர். எத்தனையோ லாக்கப் மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இதுவரை எத்தனை போலீஸ் அதிகாரிகள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்? இந்தக் கேள்விக்கெல்லாம் விடையே இல்லை.

-அதிதேஜா

Share

Recent Posts

கூகுள் புதிய ஆண்ட்ராய்டு பெயரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு Q இயங்குதளம் ஆண்ட்ராய்டு 10 என்ற பெயரில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இத்துடன் புதிய இயங்குதளத்துக்கான லோகோவையும் வெளியிட்டது.இதுவரை ஆண்ட்ராய்டு Q…

12 hours ago

கணினியை இப்படி எல்லாம் பயன்படுத்தி இருக்கிறீங்களா?

இன்றைய உலகில் கணினியின் தேவை அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. ஒவ்வொருவரும் கணினியின் பயனை உணர்ந்துக்கொள்வது அவசியமாகிவிட்டது. கணினியைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாதாகிவிட்டது. இன்று கணினியை எளிய முறையில் கையாள…

12 hours ago

RS 13,999 விலையில் அறிமுகமானது MOTOROLA ONE ACTION.

மோட்டோரோலா ஒன் அதிரடி இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த புதிய மோட்டோரோலா தொலைபேசி ஆகஸ்ட் 30 முதல் விற்பனைக்கு வருகிறது. நிறுவனத்தின் மற்ற ஸ்மார்ட்போன்களைப் போலவே,…

12 hours ago

200 ஆண்டுகள் ஏலியனாக வாழ்வேன் : நித்தியானந்தா ! வைரலாகும் வீடியோ !

நித்தியானந்தா என்றாலே எப்போதும், பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. சுவாமி நித்தியானந்தா ஆன்மீகத்தையும் தாண்டி அறிவியல் பூர்வமாகவும், ஐன்டீன்ஸ் விதியை தவறு என்று கூறி உலகத்தையும் திருப்பி போட்டார்.இந்நிலையில்,…

12 hours ago

சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.!

இப்போது வரும் புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் மக்களுக்கு பயன்படும் வகையில் தான் இருக்கிறது, ஆனால் அந்த தொழில்நுட்பத்தை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும், எந்த இடத்தில் பயன்படுத்தக்…

12 hours ago

உணவாக மாறிய டைட்டானிக் கப்பல்! என்ன நடந்தது தெரியுமா?

ஒரு நூற்றாண்டிற்கு முன்னால் கடலுக்குள் மூழ்கிய ஆர்எம்எஸ் டைட்டானிக் கப்பல், அதன் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக ஒரு புதிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.கடலில் உள்ள உப்பு…

12 hours ago