கமல் பேச்சை சீரியசாக எடுத்து கொள்ள வேண்டாம்! அன்புமணி பகீர் பேட்டி

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அவருடைய மனைவி சவுமியா மற்றும் பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் பழனி முருகர் கோவிலுக்கு வந்தனர். அவர்களை மாவட்ட பாமக நிர்வாகிகள் வரவேற்று ரோப்கார் மூலம் மலைக்கு அழைத்து சென்றனர்.

அதன் பின் அன்புமணி அவரது மனைவி சவுமியா மற்றும் ஜி.கே.மணி ஆகியோர் வி.ஐ.பி. வரிசையில் சென்று முருகனை தரிசித்தனர். அவர்களுக்கு கோவில் அர்ச்சகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன் பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், ‘இந்தியாவின் அடுத்த பிரதமர் ராகுல்காந்தி என ஸ்டாலின் சொல்லி வந்தார். அப்படி இருக்கும் போது திடீரென தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவுடன் ஒரு மணி நேரம் பேசி இருக்கிறார்.
அதை பார்க்கும் போது ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. காங்கிரஸ் ஆட்சிக்கு வராது என்ற எண்ணத்தில் மூன்றாவது அணிக்கு தாவி பதவியை பிடிக்க நினைக்கிறார்.

கோதாவரி காவேரி இணைப்பு திட்டத்தை மத்திய அரசு ரூ. 60 கோடியில் செயல்படுத்த உள்ளது. இதன் மூலம் தமிழகத்திற்கு 200 டிஏம்சி தண்ணீர் கிடைக்கும். சென்னை முதல் மதுரை வரையும் உள்ள மக்களுக்கு தண்ணீர் கிடைக்கும். நடிகர் கமல் பேச்சை சீரியசாக எடுத்து கொள்ள வேண்டாம் அவர் அந்த மாதிரி தான் பேசுவார்.

வேதாந்த நிறுவனத்திற்கு காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுக்க சுற்றுச் சூழல் வாரியம் அனுமதி கொடுத்துள்ளது இது ஆபத்தான திட்டம். அந்த அனுமதியை மத்திய அரசு நிறுத்த வேண்டும் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க சட்டம் கொண்டு வர வேண்டும். இதற்காக போராட தயாராக உள்ளோம் அதுபோல் அதிமுகவுடனான கூட்டணி வரும் உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும்’ என்று கூறினார்.

Share

Recent Posts

பயங்கரவாதம், ஆப்கன் குறித்து டிரம்ப்-இம்ரான் ஆலோசனை

வாஷிங்டன்:அமெரிக்க அதிபர், டிரம்பை, பாகிஸ்தான் பிரதமர், இம்ரான் கான், நேற்று சந்தித்து பேசினார். அப்போது, ஆப்கன் மற்றும் பயங்கரவாத பிரச்னைகள் பற்றி, இருவரும் தீவிரமாக ஆலோசித்தனர்.பாகிஸ்தான் பிரதமராக…

9 hours ago

பிரிட்டன் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு

லண்டன்:பிரிட்டன் புதிய பிரதமராக, 'கன்சர்வேடிவ்' கட்சியின் மூத்த தலைவர், போரிஸ் ஜான்சன், 55, தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.ஐரோப்பிய நாடான, பிரிட்டனின் பிரதமராக தற்போது பதவி வகிப்பவர், தெரசா…

9 hours ago

சீன, ‘மாஜி’ அதிபர் லீ பெங்க், மரணம்

பீஜிங்: சீனாவின் அதிபராக, 1987 -- 1998ம் ஆண்டு வரை இருந்தவர், லீ பெங்க், 90. இவர், 1998 - 2003ம் ஆண்டு வரை, தேசிய மக்கள்…

9 hours ago

ஹாங்காங் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்: 6 பேர் கைது

ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவுப் போராட்டக்காரர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த 6 பேரை அந்த நகர போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:…

9 hours ago

சீனா: முன்னாள் பிரதமர் லீ பெங் மரணம்

சீன முன்னாள் பிரதமர் லீ பெங், தனது 90-ஆவது வயதில் மரணமடைந்தார். சீனாவின் 4-ஆவது பிரதமரான லீ பெங், அந்தப் பொறுப்பை 1987-ஆம் ஆண்டு முதல், 1998-ஆம்…

9 hours ago

பின்லேடன் இருப்பிடம் ஐஎஸ்ஐ-க்கு தெரியும்: இம்ரான் மறைமுக ஒப்புதல்

அல்-காய்தா தலைவர் பின்லேடனைப் பிடிப்பதில் அமெரிக்காவுக்கு தங்களது உளவு அமைப்பு உதவியதாகக் கூறியதன் மூலம், அவரது இருப்பிடம் குறித்து தங்களுக்கு ஏற்கெனவே தெரியும் என்பதை பாகிஸ்தான் பிரதமர்…

9 hours ago