ஐஎஸ் தீவிரவாதிகளிடம் பணம் பெற்றுக்கொண்டாரா கமல்? உளவுத்துறை விசாரிக்க வேண்டும்- அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

நான்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து கமல்ஹாசன் பேசியபோது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று கூறியிருந்தார். கமல்ஹாசனின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை கிளிப்பியுள்ள நிலையில், இதுகுறித்து பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,

இந்துக்களை வம்பிழுக்கும் வேலையை செய்கிறார் அவர். இது யாரை திருப்திப்படுத்த? கமல்ஹாசன் ஐஎஸ் தீவிரவாதிகளிடம் பணம் வாங்கிகொண்டாரா?
ஏன் இங்கு சண்டையை இழுத்துவிட பார்க்கிறார். இதுபற்றி மத்திய உளவுத்துறை விசாரிக்க வேண்டும்.

அவர் பின்னாடி நின்று அவரை இயக்குவது யார்? என்பதை பார்க்க வேண்டும். ஒருவேளை அவர் அதை உணர்ந்துவிட்டால் ஒரு வேகத்தில், அறியாமையில் அப்படி பேசிவிட்டேன் என்று அவர் மறுப்பு செய்தி கொடுத்தால் நாக்கை அறுத்துவிடுவேன் என நான் கூறிய கருத்தை நான் வாபஸ் பெறுகிறேன்.

இந்துக்களையும், இந்து கடவுள்களையும் வம்புக்கு இழுபத்தையே சிலர் வாடிக்கையாக வைத்துள்ளனர். திமுக தலைவர் ஸ்டாலின், வீரமணி, திமுகவின் சில பேச்சாளர்கள் இப்பொழுது கமலும் அவர்களுடன் சேர்ந்து கொண்டுள்ளார். கமலின் கருத்துக்கு ஆதரவு சொன்ன அழகிரி தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே இருக்க தகுதி அற்றவர். அவர் இத்தாலி நாட்டுக்கு வேண்டுமானால் போகலாம் என்றார்.

Share

Recent Posts

பயங்கரவாதம், ஆப்கன் குறித்து டிரம்ப்-இம்ரான் ஆலோசனை

வாஷிங்டன்:அமெரிக்க அதிபர், டிரம்பை, பாகிஸ்தான் பிரதமர், இம்ரான் கான், நேற்று சந்தித்து பேசினார். அப்போது, ஆப்கன் மற்றும் பயங்கரவாத பிரச்னைகள் பற்றி, இருவரும் தீவிரமாக ஆலோசித்தனர்.பாகிஸ்தான் பிரதமராக…

10 hours ago

பிரிட்டன் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு

லண்டன்:பிரிட்டன் புதிய பிரதமராக, 'கன்சர்வேடிவ்' கட்சியின் மூத்த தலைவர், போரிஸ் ஜான்சன், 55, தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.ஐரோப்பிய நாடான, பிரிட்டனின் பிரதமராக தற்போது பதவி வகிப்பவர், தெரசா…

10 hours ago

சீன, ‘மாஜி’ அதிபர் லீ பெங்க், மரணம்

பீஜிங்: சீனாவின் அதிபராக, 1987 -- 1998ம் ஆண்டு வரை இருந்தவர், லீ பெங்க், 90. இவர், 1998 - 2003ம் ஆண்டு வரை, தேசிய மக்கள்…

10 hours ago

ஹாங்காங் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்: 6 பேர் கைது

ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவுப் போராட்டக்காரர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த 6 பேரை அந்த நகர போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:…

10 hours ago

சீனா: முன்னாள் பிரதமர் லீ பெங் மரணம்

சீன முன்னாள் பிரதமர் லீ பெங், தனது 90-ஆவது வயதில் மரணமடைந்தார். சீனாவின் 4-ஆவது பிரதமரான லீ பெங், அந்தப் பொறுப்பை 1987-ஆம் ஆண்டு முதல், 1998-ஆம்…

10 hours ago

பின்லேடன் இருப்பிடம் ஐஎஸ்ஐ-க்கு தெரியும்: இம்ரான் மறைமுக ஒப்புதல்

அல்-காய்தா தலைவர் பின்லேடனைப் பிடிப்பதில் அமெரிக்காவுக்கு தங்களது உளவு அமைப்பு உதவியதாகக் கூறியதன் மூலம், அவரது இருப்பிடம் குறித்து தங்களுக்கு ஏற்கெனவே தெரியும் என்பதை பாகிஸ்தான் பிரதமர்…

10 hours ago