பாஜகவுடன் திமுக பேசியது உண்மைதான்… நேரம் வரும்போது நிரூபிப்பேன்- தமிழிசை

இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த பாஜக தமிழக தலைவர் தமிழிசை, திமுக தலைவர் ஸ்டாலின் நிறம் மாறிக்கொண்டிருக்கிறார். பாஜகவுடன் ஸ்டாலின் பேசுகிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியது உண்மைதான். பாஜக வெற்றி பெறும் என்று தெரிந்து பாஜகவுடன் ஸ்டாலின் பேசி வருகிறார். மோடியுடனும் தொடர்பில் இருக்கிறார்” என்று பேட்டி அளித்திருந்தார்.

தமிழிசையின் இந்த கருத்து பெரும் சர்ச்சையைஏற்படுத்த இதனையடுத்து, தமிழிசை சவுந்திரராஜனோ அல்லது நரேந்திர மோடியோ ‘மத்தியில் ஆட்சி அமைக்க பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க நான் அவர்களுடன் பேசி வருகிறேன்’ என்பதை நிரூபித்து விட்டால் அரசியலில் இருந்து விலக நான் தயார்; நிரூபிக்கத் தவறினால் அவர்கள் இருவரும் அரசியலை விட்டு நீங்கள் விலகத் தயாரா?” என திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில்,கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை,

தேர்தல் கூட்டணி தொடர்பாக பாஜகவுடன் திமுக பேசியது என நான் கூறியது உண்மைதான். இந்த கருத்தை பாஜகவுடன் திமுக பேசியதாக எனக்கு வந்த தகவலின் அடிப்படையில் கூறினேன். நான் சொல்வதில் எப்போதுமே உண்மை இல்லாமல் இருக்காது.

திமுக தலைவர் ஸ்டாலின் அரசியலில் அதிகநாட்கள் இருக்க வேண்டும் என்பதுதான் எங்களின் ஆசை. நான் கூறியது உண்மையா இல்லையா என்பதை ஸ்டாலின் நிரூபிக்கட்டும். இதை எப்போது வேண்டுமானாலும் நிரூபிப்பேன். அரசியலில் எந்த நேரத்தில் நிரூபிக்க வேண்டுமோ அப்போது நிரூபிப்பேன். என்னை அரசியலை விட்டு விலக சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. ஸ்டாலின் சொல்கிறார் என்பதற்காக இன்றைக்கே நிரூபிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. பொய் சொல்லாத, ஊழல் செய்யாத,நேர்மையான அரசியலே எனது அரசியல் பாரம்பரியம். என்னுடைய அரசியல் வாழ்கை என்றும் நேர்மையானது தான் எனக்கூறினார்.

Share

Recent Posts

பயங்கரவாதம், ஆப்கன் குறித்து டிரம்ப்-இம்ரான் ஆலோசனை

வாஷிங்டன்:அமெரிக்க அதிபர், டிரம்பை, பாகிஸ்தான் பிரதமர், இம்ரான் கான், நேற்று சந்தித்து பேசினார். அப்போது, ஆப்கன் மற்றும் பயங்கரவாத பிரச்னைகள் பற்றி, இருவரும் தீவிரமாக ஆலோசித்தனர்.பாகிஸ்தான் பிரதமராக…

9 hours ago

பிரிட்டன் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு

லண்டன்:பிரிட்டன் புதிய பிரதமராக, 'கன்சர்வேடிவ்' கட்சியின் மூத்த தலைவர், போரிஸ் ஜான்சன், 55, தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.ஐரோப்பிய நாடான, பிரிட்டனின் பிரதமராக தற்போது பதவி வகிப்பவர், தெரசா…

9 hours ago

சீன, ‘மாஜி’ அதிபர் லீ பெங்க், மரணம்

பீஜிங்: சீனாவின் அதிபராக, 1987 -- 1998ம் ஆண்டு வரை இருந்தவர், லீ பெங்க், 90. இவர், 1998 - 2003ம் ஆண்டு வரை, தேசிய மக்கள்…

9 hours ago

ஹாங்காங் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்: 6 பேர் கைது

ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவுப் போராட்டக்காரர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த 6 பேரை அந்த நகர போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:…

9 hours ago

சீனா: முன்னாள் பிரதமர் லீ பெங் மரணம்

சீன முன்னாள் பிரதமர் லீ பெங், தனது 90-ஆவது வயதில் மரணமடைந்தார். சீனாவின் 4-ஆவது பிரதமரான லீ பெங், அந்தப் பொறுப்பை 1987-ஆம் ஆண்டு முதல், 1998-ஆம்…

9 hours ago

பின்லேடன் இருப்பிடம் ஐஎஸ்ஐ-க்கு தெரியும்: இம்ரான் மறைமுக ஒப்புதல்

அல்-காய்தா தலைவர் பின்லேடனைப் பிடிப்பதில் அமெரிக்காவுக்கு தங்களது உளவு அமைப்பு உதவியதாகக் கூறியதன் மூலம், அவரது இருப்பிடம் குறித்து தங்களுக்கு ஏற்கெனவே தெரியும் என்பதை பாகிஸ்தான் பிரதமர்…

9 hours ago