ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் – கமல்ஹாசன் கட்சி கோரிக்கை

கமலின் பேச்சை கண்டித்து பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், எச்.ராஜா ஆகியோர் பேசியுள்ளனர். இதற்கிடையே “கமலின் நாக்கு அறுபடும்” என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுஇந்நிலையில் சமீபத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ” கமலின் நாக்கு ஒருநாள் அறுபடும்” என மிரட்டும் தொனியில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ராஜேந்திர பாலாஜி பதவி விலக வேண்டுமெனவும், அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று இதுகுறித்து விளக்கமளித்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளதாவது : “தமிழ்நாட்டில் அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். அந்த ஒற்றுமையை குலைத்து வன்முறையை வளர்க்கும் விதத்தில் கமல் பேசி வருகிறார். இப்படியாக அவர் தொடர்ந்து பேசி வந்தால் மக்களே அவர் நாக்கை அறுத்துவிடுவார்கள் என்ற அர்த்தத்தில்தான் அவ்வாறு கூறினேன். இதில் எந்த விதமான மிரட்டலும் கிடையாது” என மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் கமல்ஹாசனுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். . மக்கள் நீதி மய்யத்தின் பொது செயலாளர் அருணாச்சலம் நிருபர்களிடம் கூறியதாவது, “அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அரசியல் மாண்பும், தனி மனித ஒழுக்கமும் இன்றி சட்டவிரோதமாக மிரட்டல் விடுக்கும் தோனியில் பேசியுள்ளார். இதனால் அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் பதவி விலக வேண்டும்” என்று கூறினார். அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் இந்த அடக்குமுறை போக்கை கண்டித்த விசிக தலைவர் திருமாவளவன் ” கமல்ஹாசனின் கருத்துக்கு மறுப்பு தெரிவிக்க யாருக்கு வேண்டுமானாலும் உரிமை உண்டு. ஆனால் மிரட்டும் தோனியில் பேசுவது ஒரு அமைச்சருக்கு ஏற்புடையதல்ல.” என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

கறுப்பு பணம் பரம ரகசியமாம்… தகவல் சொல்லக் கூடாதாம்

டெல்லி: நாட்டில் எவ்வளவு கறுப்புப் பணப் புழக்கம் எவ்வளவு உள்ளது என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப் பட்ட கேள்விக்கு அது இரு நாடுகளுக்கு…

1 hour ago

இன்றைய (20.05.2019) பெட்ரோல், டீசல் விலை: இன்று அதிரடி மாற்றத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி!!

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை நிர்ணயித்து வந்தது. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டு, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை…

1 hour ago

இன்றைய(மே 20) பெட்ரோல் , டீசல் நேற்றைய விலையை விட அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொருத்து இந்தியாவில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றனர்.இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள…

1 hour ago

பிரச்சினையை டெபாசிட் பண்ணிட்டு வன்முறையை வட்டிக்கு வாங்கும் ட்ரம்ப் – வரி இல்லாத வர்த்தகம்

வாஷிங்டன்: சர்வதேச வர்த்தகத்தில் இந்தியா சீனாவுடன் கடும் மோதல் போக்கை கடைபிடித்து வரும் அமெரிக்க தன் அண்டை நாடுகளான கனடா மற்றும் மெக்ஸிகோ உடன் இணக்கமான போக்கை…

1 hour ago

பங்குச் சந்தையில் திடீர் உற்சாகம்: சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு

பங்குச் சந்தையில் வர்த்தகம் துவங்கிய போது மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.முந்தைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 37…

1 hour ago

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்வு

அந்நியச் செலாவணி சந்தையில் இன்று திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 79 காசுகள் உயர்ந்தது.சீனா-அமெரிக்கா இடையில் ஏற்பட்டுள்ள வர்த்தக நெருக்கடிக்கு பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல தீர்வு…

1 hour ago